Saturday, November 26, 2016



உனக்காக இறைவனால் எழுதப்பட்ட ஒன்று தவறுதலாக கூட இன்னொருவருக்கு சென்றுவிடாது. 

எது உனக்கானதோ அதை நீ அடைந்தே தீருவாய். 

ஆதலால் எவரை பார்த்தும் பொறாமை கொள்ளாதே அது உன் நல்ல செயல்களை அழித்துவிடும். 

பழி வாங்கும் குணம் உன்னை இழி நிலைக்குள்ளாக்கும். 

எதையாவது இழந்துவிட்டாயேயானால் அந்த இழப்பின் வலியில் பாடத்தை கற்றுக்கொள்.. 
அது உனக்கானதல்ல.. 
உனக்கு பொருத்தமானதல்ல.. அல்லாஹ் உனக்கு அதை விட சிறந்ததை தருவான் என்ற உண்மைகள் கசப்பாக இருந்தாலும் ஜீரணித்துக்கொள்.. 
ஒருநாள் வரும் அன்று நீ இழந்தவை எல்லாவற்றிற்கும் வாய் நிரம்ப இறைவனுக்கு நன்றி கூறுவாய்., 

அதுவரையில் அல்லாஹ்வுடைய அருளில் பலமான நம்பிக்கை கொள். 
உன் இறைவனிடம் நெருக்கமான உறவை அமைத்துக்கொள். 

அவனை நம்பியவர்கள் என்றும் திருப்தியாக வாழ்வார்கள்... 

நிச்சயம் ஒருநாள் அவர்களின் பொறுமைக்கான கூலிகள் கண்டு வாயடைத்து போவார்கள்.!!

 அல்ஹம்துலில்லாஹ் ☺Alhamdhulillah☺

No comments:

Post a Comment