கடைசி நொடிகளில் அலெப்போ மக்கள்! 😢
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
(Complete meltdown of humanity in Aleppo)
சிரிய போராட்டத்தில் மிக முக்கியமானதும், சோகமானதும் ஒரு தருணத்தை சிரிய மக்கள் எட்டியுள்ளார்கள். சிரிய கிளர்ச்சிப்படையினரின் கைகளில் இருந்த அலெப்போவை இப்போது அஸத்தின் ஷீயா ராணுவம் முழுமையாக கைப்பற்றுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
அலெப்போவின் மிக சொற்ப எண்ணிக்கையிலான இடமே மிதமிருப்பதால் சிரிய கிளர்ச்சிப்படையினரும், பொதுமக்களும் ஷீயா படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.
கண்ட இடத்திலே அவர்களை (பொதுமக்கள் + கிளர்ச்சி வீரர்கள்) சுட்டுப்பொசுக்கும் படி ஷீயா ராணுவத்திற்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்போது வரை கிழக்கு அலெப்போவின் 82 சிவிலியன்களை (11 பெண்கள், 13 சிறுவர்கள் உட்பட..) சுட்டுப்பொசுக்கியுள்ளார்கள் ஷீயா இராணுவத்தினர்.
கிளர்ச்சி படையினர், தங்களது சொந்த குழந்தைகளையும், மனைவிமாரையும் தம் கைகளாலேயே கொலை செய்துவிட முடியுமா என்று பத்வா தேடுகின்றனர். அதன் அர்த்தம், இவர்கள் அஸத்தின் இராணுவத்தினரிடம் சிக்கும் போது இவர்கள் இதைவிட கொடூரமாக கற்பழிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவார்கள் என்பதுதான்.
அவர்கள் சுற்றிவளைக்கப்பட்டுவிட்டனர். உலகத்தில் நடக்கும் மிகவும் பயங்கரமான ஒரு மனிதப்படுகொலையை கண் எதிரே கண்டுகொண்டிருக்கிறோம்.
ஷீயா இராணுவம் இந்த மனித இனப்படுகொலையை இனிப்புக்கள் பகிர்ந்தவன்னம் கொண்டாடுவதாக சிரிய செய்திகள் சொல்லுகின்றன.
தயவு செய்து இவர்களுக்காக உங்கள் தொழுகைகளில் இறைஞ்சுங்கள்! இவற்றை பற்றி எழுதுங்கள்... கொத்துக் கொத்தாக அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதை இயன்றவரை தடுப்பது எம் அனைவரதும் கடமை!
கண் எதிரே அலெப்போ குழிதோண்டி புதைக்கப்படுவதை தயவு செய்து பார்த்துக்கொண்டிருக்காதீர்கள்! இறைவனிடம் மனமுருகி பிரார்த்தியுங்கள்!
😥 சிரிய நிலவரம்
தற்போது சிரியாவின் மிகப் பெரிய நகரும் உலகின் மிகப் புராதண நகருமாகிய ஹலப் தன் எதிரிகளுக்கு முன்னால் தலைகுணிந்து விட்டது. ஹலப் நகரில் இப்போது எங்கு பார்த்தாலும் ஏவகணைகள் விழுந்து வெடிக்கும் சப்தமும் மரண ஓலமும் தான் கேட்கிறது. சரியான ஊணின்றி உறக்கமின்றி குடிக்க நீரின்றி ஏறத்தாள ஐந்து வருடங்கள் மனம் தளராமல் போராடிய அஹ்லுஸ் ஸுன்னா ஜமாத்தைச் சார்ந்த அம்மக்கள் நேற்று முதல் மரணம் அல்லது ரஷ்;யாவிடமோ ஷீயாக்களிடமோ சரணடைதல் என்ற இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதற்குள் அங்குள்ள பொதுமக்களாகிய பெண்கள் சிறுவர்கள் மீது ரஷ்யப்படையினரும் ஷீயா மிளேச்சர்களும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் வீட்டோ அதிகாரம் கொண்ட அதன் உருப்பு நாடுகள் கைகட்டிப் பார்த்திருக்க தாம் நினைத்ததையெல்லாம் செய்து கொண்டிருக்கின்றன. சிரியாவுக்காகப் பிராத்திப்போம்.
#SaveAleppo #Syria #Rebels #Civilians #Massacred
x
No comments:
Post a Comment