Thursday, March 9, 2017

காரிகை தின வாழ்த்துகள் 

பிரமனின் தூரிகையில் 
பிழையின்றி  உதித்த 
காரிகையே !
உனை படைத்த
பிரமன் 
ஒதுங்கி கொண்டான்-உன் 
படைப்பின் பின்தான் 
உலகை கண்டான். 
உயிர் பயிர் செய்யும் 
உழவியே ! 
கவியழகின் கிளவியே !
மனித மனதிற்கு 
மருந்திடும்
கருவியே !
அழகாய் வீழும்  
அருவியே !
மடையிட்டு 
நீச்சலிடும்
மடையர்களை 
மீறிச்செல்  
நதியாய் நடையெடு
புறப்படு
புரட்சியால்  
புதுமையை 
நோக்கி .....

-முரா-

No comments:

Post a Comment