Saturday, May 13, 2017

*'உங்கள் வாழ்வு செழிக்கச் சில அறிவுரைகள்'*
  தொகுத்துத் தருபவர்:💎💎💎💎💎💎💎💎
   Dr. DHAMODHARAN MD (Acu) அவர்கள்.
  

    *அவசியம் கடைபிடிக்க வேண்டிய  ஆரோக்கிய குறிப்புகள்!!* Uswa kbk          🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀

1🕹. பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர்  குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள்.

2🕹. பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.

3🕹. தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை. உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.

4🕹. இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள். 

5🕹. பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்ல. 

6🕹. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். விளையாட்டு சிறுவர்களுக்கு மட்டுமல்ல. 

7🕹. ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக  இருந்து சிந்தியுங்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும். அவ்வப்போது  மனதுக்குள் சிறிது நேரம்  பிரார்த்தனை செய்யங்கள் .

8🕹. டிவி பார்ப்பதை குறைத்துக் கொண்டு  நிறைய நல்ல புத்தகங்களைப்  படியுங்கள்.  பிள்ளைகளுக்கு நல்ல நிஷயங்களை  சொல்லிக் கொடுங்கள்.

9🕹. குழந்தைகளிடம் Smart Phone களை கொடுக்காதீர்கள். தேவயற்ற விஷயங்களுக்காக Whatsup, Facebook போன்ற சமூக வலைதளங்களில் உங்கள் நேரத்தை வீனடிக்காதீர்கள்.

10🕹. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். இரவு 10 மணிக்கு முன் தூங்கிவிடுங்கள். காலை 5 மணிக்குமேல் தூங்காதீர்கள்.

11🕹. தினம் 20 நிமிடங்கள் ரிலாக்ஸாக  நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். (உடற்பயிற்சிக்காக அல்ல மன அமைதிக்காக)

12🕹. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடமே உள்ளது.

13🕹. எப்போதும் மனதில் நேர்மறையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள்.  

14🕹. கடுமையாக உழைக்காதீர்கள்.  உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

15🕹. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீனாக்காதீர்கள். உங்களைப் பற்றி புறம் பேசப்படுவதை பொருட்படுத்தாதீர்கள்.

16🕹. நீங்கள் விழித்திருக்கும் பொழுது உங்கள் தேவைகளைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.  அதை செயல்படுத்தவும்  முயற்சி செய்யுங்கள். 

17🕹. உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை தானமாக கொடுத்து விடுங்கள். தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

18🕹. கடந்த காலத்தை மறந்து விடுங்கள்.  முடிந்தது முடிந்தவையாக இருக்கட்டும். நிகழ் காலத்தில் வாழுங்கள். மகிழ்ச்சியும் மன அமைதியும் தானாக வரும்.

19🕹. குறுகிய கால இந்த வாழ்க்கையில்  யாரையும் வெறுக்காதீர்கள். வெறுப்பு உங்களை தான் பாதிக்கும்.

20🕹. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள் சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

21🕹. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லிவிடுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடும்.

22🕹. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, SMS மூலமாகவோ தொடர்பு கொண்டிருங்கள். இது உங்களுக்கும் அவர்களுக்கும் மன அமைதியையும், பரஸ்பர அன்பையும் மேம்படுத்தும்.

23🕹. மன்னிக்கப் பழகுங்கள். தேவையான நேரத்தில் தயங்காமல் மன்னிப்பும் கேளுங்கள்.  உங்கள் மனபாரம் நீங்கும்.

24🕹. 60 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள். அவர்களுக்கு உங்கள் அன்பு தான் முக்கியம். பணம் முக்கியமல்ல. 

25🕹. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள். எப்பொழுதும் உங்களைப் பற்றி நினைப்பது மாற்றவர்களின் வேலையல்ல.

26🕹. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள். உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள். 

27🕹. உங்களின் நிறைவேறிய தேவைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நிறைவேறாத தேவைக்கு பிரார்த்தனை செய்யுங்கள்.

28🕹. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் மட்டும்தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள். அவ்வப்போது உங்களிடம் உள்ள நல்லவைகளை நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள்.

29🕹. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, அன்பை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை ஒதுக்கி விடுங்கள்.
      
30🕹. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமல்ல. கவலைகளும், நோய்களும் கூட...
எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

மலச்சிக்கல் இல்லாமல் எழுவதும், மனச் சிக்கல் இல்லாமல் தூங்குவதும் தான் ஆரோக்கியம்.
இதை கடைபிடியுங்கள் உங்கள் வாழ்கை ஆரோக்கியமாக இருக்கும்.

படித்தில் பிடித்தது 

Saturday, May 6, 2017

"Love your Parents"

A long time ago, there was a huge apple tree.

A little boy loved to come and play around it everyday.

He climbed to the treetop, ate the apples, took a nap under the shadow...

He loved the tree and the tree loved to play with him.

Time went by...the little boy had grown up,

And he no longer played around the tree every day.

One day, the boy came back to the tree and he looked sad.

"Come and play with me," the tree asked the boy.

"I am no longer a kid, I do not play around trees any more"

The boy replied.

"I want toys. I need money to buy them."

"Sorry, but I do not have money...

But you can pick all my apples and sell them.

So, you will have money.

" The boy was so excited.

He grabbed all the apples on the tree and left happily.

The boy never came back after he picked the apples.

The tree was sad.

One day, the boy who now turned into a man returned

 the tree was excited "Come and play with me" the tree said.

"I do not have time to play. I have to work for my family.

We need a house for ****ter.

Can you help me?

" Sorry",

I do not have any house. But you can chop off my branches

To build your house.

" So the man cut all the branches of the tree and left happily.

The tree was glad to see him happy but the man never came back

since

then.

The tree was again lonely and sad.

One hot summer day,

The man returned and the tree was delighted.

"Come and play with me!" the tree said.

"I am getting old. I want to go sailing to relax myself.

"Can you give me a boat?"

"Said the man".

"Use my trunk to build your boat.

You can sail far away and be happy.

" So the man cut the tree trunk to make a boat.

He went sailing and never showed up for a long time.

Finally, the man returned after many years.

"Sorry, my boy. But I do not have anything for you anymore.

No more apples for you

" The tree said".

"No problem, I do not have any teeth to bite

" The man replied.

"No more trunk

for you to climb on"

"I am too old for that now" the man said.

"I really cannot give you anything

The only thing left is my dying root,"

The tree said with tears.

"I do not need much now, just a place to rest.

I am tired after all these years" the man replied.

"Good! Old tree roots are the best place to lean on and rest,

Come, come sit down with me and rest.

" The man sat down and the tree was glad and smiled with tears...

This is you and the tree is your parent. !!!!!

Please enlighten all your friends and your families

By telling them this story.
*அப்பாவை அதிகம் விரும்பும் பெண்களும் அதில் அடங்கியுள்ள ரகசியங்களும் -கட்டாயம் ஆண் பெண் இருபாலாரும் வாசிக்கணும் !!*

உலகத்தில் எந்த மொழியில் அல்லது எந்த இனத்தில் இருந்தாலும் அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் தான் தங்க மீன்.

வாழ்க்கையின் ஓர் கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விட பலமடங்கு தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள் அப்பாக்கள்.

உலகில் ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம். ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான்.

முதலில் பெற்றெடுத்த தாய், இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்த சகோதரி உருவிலான தாய். மூன்றாவதாக தனது மனைவி பரிசளித்த மகள் உருவிலான தாய்.

இதில் நேரடியாக தனது இரத்தத்தின் மூலமாக கிடைத்த முத்தான மகள் தான் அவனது இறப்பு வரை உடன் இருக்கிறாள், பெரும்பாலும். ஓர் ஆண்மகன் தனது மகளை விரும்ப இவ்வளவு காரணங்கள் இருக்க, மகள்கள் தங்களது அப்பாவை, அம்மாவை விட அதிகம் விரும்ப என்ன காரணங்கள் இருக்கிறது.

*நேர்மையான நண்பன்*
தங்களது வாழ்நாளில் நீண்ட நாட்களாக கண்ட நேர்மையான தோழன் தங்களது தந்தை தான் என பெண்கள் எண்ணுகிறார்கள். பெண்கள் தங்களது வாழ்நாளில் அதிக நேரம் செலவழிப்பதும் அவர்களது தந்தையுடன் தான். தங்களது எந்த நிலையிலும் பாதுகாக்கும் ஒரே நபர் தந்தை தான் என்கின்றனர் பெண்கள்.

*உலகை அறிமுகம் செய்தவர்*
பிறந்த முதல் நாளில் இருந்து வளரும் ஒவ்வொரு நாளும், உலகை கற்றுத்தரும் ஆசான் தந்தை தான். இது மகன்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு தான். ஆனால், பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் கிடைக்கும் பரிசு இது. கோபத்தை காட்டியது இல்லை மகன்களிடம் காண்பிக்கும் அதே கோபத்தை, அப்பாக்கள் தங்களது மகள்களிடம் காண்பிப்பது இல்லை.

*வீட்டில் சகோதரன் வாங்கிய அடியை, எந்த மகளும் எப்போதும் வாங்கியது இல்லை. முடியாது என்ற வார்த்தையே இல்லை மகள்கள் கேட்கும் எந்த விஷயத்திற்கும் அப்பாக்கள், “முடியாது..” என்ற வார்த்தைகளை பிரயோகம் செய்வதில்லை. தன்னால் முடிந்த வரை மகள்களை மகிழ்ச்சியுடன் வளர்ப்பவர்கள் அப்பாக்கள்.

*காவலன்*
வெளியிடங்களுக்கு சென்று தாமதம் ஆனால், அது எந்நேரமாக இருந்தாலும், கால்கடுக்க காத்திருந்து அழைத்துவரும் காவலன் அப்பா.

*நண்பன்*
காதலை புரிய வைத்தவர் காதல் என்றால் என்ன, பருவத்தில் வரும் ஆசைகளும், மோகமும் என்ன, மெய்தனை எப்படி உணர்வது என மகளுக்குள் காதலை புரிய வைப்பவர் அப்பா. ஒவ்வொரு மகள்களின் முதல் காதலன் அப்பா தான்.

*சூப்பர் ஹீரோ*
தங்களுக்கு என்ன மோசமான சூழ்நிலை வந்தாலும், ஏற்பட்டாலும் அதிலிருந்து மீட்டு வரும் சூப்பர் ஹீரோ அப்பா தான். தைரியம் ஊட்டும் அம்மா என்னதான் அம்மா பாலூட்டினாலும், பெண்களுக்குள் தைரியத்தை ஊட்டுவது அப்பாக்கள் தான்.

*எப்பொழுதும் மாறாதவர்கள்*
மாற்றம் இல்லாதவர் ஓர் பெண்ணின் உறவில், அனைவரும் ஒவ்வொரு சூழ்நிலை வரும் போதும், மாறி, மாறி, தோன்றுவர். அவர்களுள் நிறையா மாற்றங்களை காணமுடியும். ஆனால், அம்மா, அப்பா மட்டும் தான் கடைசி வரை எந்த மாற்றமும் இல்லாமல், மகளை ஏமாற்றம் அடைய வைக்காமல் இருக்கும் உறவுகள்.

*உன்னத உறவு*
பெண்களின் கண்ணீருக்கு உரியவர் கடைசி வரை தன்னுடன் இருக்க ஒவ்வொரு மகளும் விரும்பும் உறவு அப்பா. அப்பாவின் மறைவு பெண்களின் கண்ணீர் ஊற்றுக்கு காரணமாகிறது. ஓர் மகளின் வாழ்க்கையில் அப்பா என்பவர் ஓர் உறவு அல்ல, தோழன், காதலன், ஹீரோ, காவலன் என எண்ணற்ற பாத்திரங்களை தாங்கிக் கொண்டிருப்பவர் தான் அப்பா. ஆதலால் தான் பெண்கள் தங்களது தந்தையை அதிகமாக நேசிக்கிறார்கள்

Lvu lot wappa.. ...

Friday, May 5, 2017

🌹YUMNA FOUNDATION🌹

பெண்ணியமா? பெண்ணடிமைத் தனமா??
*********************************************

#அவள்.....
வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாள்.நன்கு படித்து பல் மருத்துவ துறைக்கு தெரிவான நிலையில் வைத்தியர் ஒருவரை மண முடித்தாள்."தன் மனைவி உழைத்து பெருவாழ்வு வாழ வேண்டியதில்லை" என்ற மன நிலையில் மேற்படிப்பு தேவையற்றதாய் தோன்றியிருக்கலாம்.குடும்ப வாழ்வு இனிமையாய்,சகல வசதிகளுடன் இருந்தது,அதற்கு சாட்சியாய் மூன்று பிள்ளைகள்.
        
 ஊரார் கண்விழும் வாழ்வென்றும் சொல்லலாம்.அன்பான,புரிந்துணர்வான  ஒரு குடும்பம்,அதற்கு உயிர் வாழும் சாட்சி நான் தான்.

நல்ல கணவன்,நல்ல மனையாள்,நல்ல தாய்,நல்ல தந்தை அத்தனை கதாபாத்திரமும் கலந்த மேடையில் நாடகம் விடும் நேரம் ,திடீர் மாரடைப்பு கணவனை காவு கொண்டது.வெள்ளத்தால் சிதைந்து போன அழகிய ஓவியமானது குடும்பம். முழுதும் தாறுமாறாய் சேறு அப்பியிருந்தது.

      துரதிஷ்டம் அவரது சேவைக் காலம் பென்ஷன் பெற போதியதாய் இல்லை.
மறுமைக்காய் சேமித்து வைத்திருந்தமையால் குடியிருக்க ஒரு சாதாரண வீடு தவிற சொத்தென்று ஒன்றுமில்லை.

இரு குடும்ப உறவுகளும் முடிந்த மட்டும் உதவினார்கள்.இன்னொரு குடும்பத்து சுமையை தாங்கும், வைத்தியரின் செல்லப் பிள்ளைகளாய் வளர்ந்தவர்களை பராமரிக்கும் பொறுப்பை கையாள்வது சற்று சிரமம் தான் அவர்களுக்கு .யாரையும் சாடுவதும் முறையில்லை.

இலங்கையென்பது சவுதி அரேபியாவோ,கட்டாரோ இல்லை.விதவைக்கும் அநாதைக்கும் மாதாந்தம் ஒரு லட்சம் உதவித்தொகை பெறுவதற்கு.......????

பாவம் குழந்தைகளோடு சிரமப்படுகிறாளென மறு வாழ்வு கொடுக்கும் பணக்கார அரபிகளும் இங்கில்லை.
கொடுப்பதில் பிழையில்லை என சம்மதிக்கும் பணக்காரர்களின் மனைவிகளும் இங்கில்லை.

வருடமொரு முறை வரும் பெரு நாளைக்கு மாமாவோ,பெரியப்பாவோ உடுப்பு வாங்கிக் கொடுத்தார்கள்.உள்ளாடைகளையுமா கேட்கலாம்?

வீடு இருண்டிருப்பதாக சாச்சா பல்ப் வாங்கிக் கொடுத்தார்.மாத இறுதியில் வந்த மின் கட்டணத்தை செலுத்துமாறு  கேட்கலாமா?

அநாதை பிள்ளைகளுக்கு வருட தொடக்கத்தில் ஏதோ நிறுவனத்தால் புத்தகப் பொதிகளை கொடுத்தார்கள்."இரவில் திரியும் விலங்குகளின் "படம் ஒட்டி வருமாறு ஆசிரியர் சொல்லும் நாளில் நிறுவன்த்தினருக்கு போன் பண்ணத் தான் முடியுமா?

வாழ்வென்பது ஆயிரம் சுழல்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.

இப்படி எத்தனையோ குடும்பங்கள்,திடீர் சுகவீனம்,திடீர் மரணம் ,திடீர் விபத்துகள் என நட்டாற்றில் விடப்பட்ட நிலையில்.....
தந்தையின் பொறுப்பை சுமக்கும் தாய்மார்...
தம்பி தங்கைக்காய் போராடும் அக்காமார்.....

அன்று,"என் உழைப்பு மட்டும்  போதும்" என்று மேற்படிப்போடு உழைப்பிற்கும்  கணவரால் தடை போடப்பட்ட அவள் இன்று பாமசி டிப்ளோமா முடித்து விட்டு ஒரு பாமசியை நிர்வகிக்கிறாள்.நான்கு வருட போராட்டத்தின் பின்.தானும் பிள்ளைகளும் வாழ்வதற்காக...
----------------------------------------- ----------------------------------------- ----------------------------------------- 

பெண்கள் படிக்கவே கூடாதென்று எட்டாம் வகுப்பில்,பூப்பெய்திய போதே  அவள் படிப்பு நிறுத்தப்பட்டிருந்தால்........?

பல் மருத்துவ பட்டத்தை அவள் அப்போதே பெற்றிருந்தால்......?

விடைகளை நீங்களே அலசுங்கள்....

ஆனால் இவ்வாறான திடீர் திருப்பங்களை சமாளிக்கும் ஆளுமை பெண்ணுக்கு நிச்சயம் தேவை. கண்ட கண்ட பாடநெறிகள் தேவையா? என்பதை தாண்டி மார்க்க வரையரைக்குட்பட்ட நிலையில் மேற்படிப்பு அவசியமே.
தொழிலுக்கு செல்லாவிட்டாலும் பெண்களிடம் தகைமைகள் வளர்க்கப்படல் வேண்டும்.

வீண் ஆடம்பரம்,பெருமை,மேலதிக வருமானம் என பெண் உழைப்பது பற்றிய வாதங்களை புறந்தள்ளினாலும்  தகுந்த பொழுதொன்றில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தொழிலுக்காய் வெளியேறத் தான் வேண்டும்.

குறைந்தது குடும்பத்திற்கே பூச்சி மருந்து வாங்குவதற்காகவாவது எதையோ தேட வேண்டுமே!

என்ன இப்படி சொல்கிறேன் என கோபம் வருகிறதா?அப்படியென்றால் அவர்களுக்கு வழி சொல்லுங்கள்.

பெண்கள் வீட்டை விட்டு தொழிலுக்கு போவதை #விபச்சாரத்திற்கு ஈடானதென பத்வா கொடுக்கும் யாராவது அந்த குடும்பங்களுக்கான மாற்று ஏற்பாடுகளை செய்வார்களா??

பெண் பல்கலைக் கழகம் போகக் கூடாது,உயர் தரம் படிக்கக் கூடாதென்றால் இவ்வாறான இக்கட்டான சூழலில் #ரிசானா_நபீக் காக அவதரிப்பதை தவிற வழியில்லை.

பெண் தொழிலுக்கே போகக் கூடாதென்றால்  தெருவிற்கொரு ஆழமான கிணறுகளையாவது தோண்டி வைக்க வேண்டும்,#நல்லதங்காளாகவாவது புணர் ஜென்மம் எடுக்கட்டும்.

இத்தா இருக்கும் நிலையில் குடும்பத்தை பராமரிக்க யாருமில்லையென்றால் பகலில் தொழில் புரிந்து விட்டு இரவில் இத்தா இருக்கவும் இடமளிக்கிறது உன்னத இஸ்லாம்.

நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறதென்றால் களவெடுத்தவன் கைகளை வெட்ட முடியாதென்கிறது மனிதனையும் சந்தர்ப்பத்தையும் புரிந்த மார்க்கம்.

இந்த மார்க்கம் குல,கால வரையரைகளை தாண்டி மனிதன் மனிதனாய் வாழ்வதற்கான நெகிழ்வுத் தன்மைகளை உள்ளடக்கியதே,சிரமப்படுத்தி மாந்தரை ஜாஹிலிய்யத்தில் தள்ள வேண்டாம்.

படித்ததில் பிடித்தது
*சினிமாவின் மூலம் நாம் அடைந்த நன்மைகள் என்ன...?*


⚠ *சகோதரிகளாக பார்க்க வேண்டிய இளம்பெண்களை காதலிகளாக பார்க்க வைத்தது* இந்த சினிமா ??

⚠ *பெற்றோர்களை எதிரிகளாக காட்டியது* இந்த சினிமா ??

⚠ *திருட்டின் வகைகளை கற்றுகொடுத்தது* இந்த சினிமா ??

⚠ நகைச்சுவை என்ற போர்வையில் *பொய்யை மனித பண்பாக மாற்றியது* இந்த சினிமா ??

⚠ *இசையை கேட்போரின் மனங்களில் திணித்து சிந்தனையை பாவங்களின் பக்கம் திருப்பியது* இந்த சினிமா ??

⚠ *வன்முறையை ஹீரோயிசமாக காட்டியது* இந்த சினிமா ??

⚠ *காதல் என்பதை புனிதமாக காட்டி பிஞ்சு மனங்களில் கூட நஞ்சை ஊட்டியது* இந்த சினிமா ??

⚠ *தீய பழக்க வழக்கங்களை ஆண்மைத்தனமாக காட்டியது* இந்த சினிமா ??

⚠ Fashion என்ற பெயரில் *பெண்களை அரைகுறை ஆடைகளுடன் வீதிகளில் திரிய விட்டு கலாச்சாரம், பண்பாடுகளை அழித்தது* இந்த சினிமா ??

⚠ *ஆபாசத்திற்கு பொழுதுபோக்கு என்ற பெயரை வைத்தது* இந்த சினிமா ??

⚠ *உறவுகளின் புனிதத்தன்மையை பாழ்படுத்தியது* இந்தசினிமா ??

⚠ *உண்மையை சொல்கிறோம் என்ற பெயரில் வன்புணர்ச்சியை வளர்த்தது* இந்த சினிமா ??

⚠ *திரையில் பெண்களை போகப் பொருளாக ஆக்கியது* இந்த சினிமா ??

⚠ *"அழகை ரசிக்கலாம் ஆனால் அதை அடைய விரும்பாதே"* என்ற அசிங்கமான தத்துவத்தை அறிமுகப்படுத்தி *மனிதர்களை கண்களால் "விபச்சாரம்" செய்ய கற்றுக்கொடுத்தது* இந்த சினிமா ??

⚠ *வியாபார நோக்கத்திற்காக சமூக ஒற்றுமையை சீர் குலைத்தது* இந்த சினிமா??

⚠ *ஒழுக்கக் கேட்டைத்தவிர இந்த சினிமாவினால் நாம் பெற்ற நன்மைகள் எதுவும் இல்லை* என்பதுதான் நிதர்சனமான உண்மை??

⚠ *இன்னும் பல வன்செயல்களை மக்கள் மனதில் விதைத்தது* இந்த சினிமா ??

மேற்கூறிய அனைத்து பெருமைகளும் இந்த பாழாப்போன சினிமாவையே சாரும்...

மொத்தத்தில் சினிமா??
என்பது

👉🏻 *ஒழுக்கச்சீர்கேட்டின் - "கையேடு"*
👉🏻 *விபச்சாரத்தின் - "நுழைவாயில்"*
👉🏻 *சமூக சீர் குலைவிற்கான - "ஆயுதம்"*

என் அன்பு நண்பனே ?? இந்த சினிமாவில் ??
*1000 நல்ல காட்சிகள் இருந்தாலும் அது உன் வாழ்கைக்கு ஒரு துளியும் உதவாது ??*

இப்படிக்கு :-
*மாற வேண்டிய நாமும்,*
*நம் வருங்காலச் சாமுதாயமும்.*

Thursday, May 4, 2017

*தொடர்பு எல்லைக்கு உள்ளே வாருங்கள்!*
------------------------------------------
*ஷெய்க் நூஹ் மஹ்ழரி*

செடிகளைப் போன்றே உறவுகளும். அடிக்கடி நீர் பாய்ச்ச வேண்டும்.. மினுக்க வேண்டும்.. அருகே செல்ல வேண்டும்.. உரமிட வேண்டும். இல்லையேல் செடிகளைப் போன்றே உறவுகளும் வாடிவிடும்.

அவர்கள் நம்மைவிட்டு விலக முற்படும்போது நாம் 
அடிக்கடி அருகே செல்ல வேண்டும். அதிக அன்பு வைத்திருப்பவர்களுக்கு மத்தியில்தான் அடிக்கடி பிணக்கு ஏற்படும். "என்னதான் இருந்தாலும் என்னோடு அவர் இவ்வாறு நடந்துகொண்டாரே..” என்பதுதான் ஒரே ஆதங்கமாக இருக்கும்.

அன்பும் நட்பும் மட்டுமல்ல.. குடும்ப உறுவுகள் சிதைவதற்கும் ஏதோ ஒரு சிறு காரணம் போதும். அகன்று செல்கிறார் என்று தோன்றும்போதே நாம் இன்னும் நெருக்கமாக முயல வேண்டும்.

ஒரு மரத்திலிருந்து இலட்சக்கணக்கில் தீக்குச்சிகள் செதுக்கலாம். அதேவேளை இலட்சோபலட்ச மரங்களை தீ வைத்துக் கொளுத்தவும் ஒரு தீக்குச்சியே போதும். உறவுகளும் அப்படித்தான்.

பிடிக்காத ஒரு வார்த்தையால்தான் சேர்ந்து இருந்த வளையங்கள் கழன்றுவிழுகிறது. இறுதியில்.. அழைத்தாலும் அலைபேசியை எடுப்பதில்லை.. வாட்ஸ் அப்பில் அவரது எண்ணைத் தடுத்து வைப்போம். அங்கே கண்டால் இங்கேயே முகம் திருப்புவோம்.

காலங்கள் கடந்துவிட்டால்.. "எதற்காக சண்டையிட்டோம்” என்பதுகூட மறந்துவிடுகிறது. ஆனாலும் உறவாட மனம் வருவதில்லை.

ஒரு புன்னகை போதும் வெறுப்பு நெருப்பை அணைக்க.. ஆனாலும் ஏனோ உள்ளுக்குள் ஒரு தயக்கம். ஒரு ஸலாம் போதும் அனைத்தையும் முடிவுக்குக்கொண்டுவர.. ஆனாலும் ஏனோ வீண் பிடிவாதம்.

இறைத்தூதராக வந்தபோது நபி (ஸல்) அவர்களை உறவுகள் வெறுத்தனர். ஒதுங்கினர்.. ஒதுக்கினர். ஆனால் நபிகளார் விடவில்லை.. அனைவரையும் ஓரிடத்தில் ஒன்றுகூட்டி அவர்களிடம் பேசினார்கள்:

"என் அருமை இரத்தபந்த உறவுகளே..! உலகமே உங்களுக்கு தீயவழி காட்டினாலும்.. ஒருபோதும் நான் உங்களுக்கு தீயவழி காட்டமாட்டேன். அருமை உறவுகளே! நான் கொண்டுவந்த சத்திய மார்க்கத்தை ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் உங்கள் விருப்பம். ஆயினும் நமக்கிடையே இருக்கும் இரத்த பந்த உறவை ஏன் துண்டிக்கின்றீர்கள்..?. வாருங்கள் உறவைப் பேணுவோம்!”

மறந்துவிட வேண்டாம் உலகில்.. " உறவு இல்லாவிட்டால் துறவு..!”. மறுமையிலோ உறவைத் துண்டித்து வாழ்ந்ததற்கும் பதில் சொல்ல வேண்டும்.
🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷

படித்ததில் பிடித்தது 

Tuesday, May 2, 2017

*நாள் ஒன்றிற்கு சுமார் 150 முறை ஸ்மார்ட்போன் திரையை பார்ப்பதால் என்னவாகும்.?*

20-20-20 ரூல் என்பார்கள், அது என்னவென்று தெரியுமா.??

உங்களுக்கு நல்லா கண்ணு தெரியுமா.?? ஒரு நாளைக்கு சுமார் 150 முறை ஸ்மார்ட்போன் திரையை பார்ப்பவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், நிச்சயமாக உங்கள் கண்கள் 'விலை கொடுத்தே' ஆக வேண்டும். ஸ்மார்ட்போனில் ஆரம்பித்து, லாப்-டாப், டேப்ளெட், இ-ரீடர் என அதுவாக இருப்பினும் சரி, எல்லை மீறினால் - கண்ணில் சோர்வு, அரிப்பு , உலர்ந்த தன்மை, மங்கலான பார்வை மற்றும் தலைவலி என - பிரச்சனைகள் உறுதி..!
சில எளிய மற்றும் ஆரோக்கியமான டிஜிட்டல் கருவி பயன்பாட்டு பழக்கங்களை கடைப்பிடித்தால் உங்கள் கண்களையும் அதன் பார்வை திறனையும் மிக காலம் சக்தி வாய்ந்ததாக நீட்டிக்கலாம், அதற்கான 7 டிப்ஸ் களை தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

அடிக்கடி இமைத்துக் கொண்டே இருங்கள். அடிக்கடி உங்கள் கண்களை இமைப்பதால் ஒளிரும் உங்கள் கண்கள் ஈரப்பதமாகவே இருக்கும், அதனால், கண்களில் வறட்சி மற்றும் எரிச்சல் குறைக்கிறது.
கண் கூசும் ஒளிவீச்சை தவிர்த்திடுங்கள். ஸ்மார்ட்போனில் இருந்து கிளம்பும் எரிச்சலூட்டும் பிரதிபலிப்பு ஒளியானது கண்ணை கூசும், அதன் அளவை குறைக்க உங்கள் ஸ்மார்ட் போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் அல்லது ஸ்க்ரீன் ப்ரோடக்டர் ப்ரிம் போன்றவைகளை பயன்படுத்தலாம்..!
இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20 அடி தொலைவில் இருக்கும் பொருளை 20 நொடிகள் ஊற்று பாருங்கள் உங்கள் கண்களுக்கு அது தான் இடைவெளி, இதைதான் 20-20-20 ரூல் என்பார்கள்.
ப்ரைட்னஸ் சார்ந்த விடயத்தில் கவனம் செலுத்துங்கள். உங்கள் ஸ்மார்ட்போன் திரையனாது மிக பிரகாசமாக இருந்தாலும் சரி, மிக இருட்டாக இருந்தாலும் சரி, அது உங்கள் கண்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆக, உங்கள் கண் பார்வைக்கு ஏற்றது போல 'ப்ரைட்னஸ் செட்' செய்து கொள்ளவது நல்லது..!
டெக்ஸ்ட் சைஸ் மற்றும் காண்ட்ராஸ்ட்டில் மாற்றம் செய்யுங்கள். பெரிய டெக்ஸ்ட் சைஸ் மற்றும் அதிகமான கான்ட்ராஸ்ட் உங்கள் கண்கள் சிரமப்படுவதை அதிக அளவில் குறைக்கும்..!
ஸ்க்ரீன் எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். கவனச்சிதறலை ஏற்படுத்தும் தூசு, அழுக்கு, அழுக்குத் தடம் அல்லது கைரேகை என எதுவாக இருந்தாலும் சரி, அவைகளை அடிக்கடி துடைத்துவிட்டு உங்கள் ஸ்க்ரீனை சுத்தமாக வைத்திருப்பது உங்கள் கண் பார்வைக்கு நல்லது.
உங்களுக்கும் உங்கள் ஸ்மார்ட்போனுக்கும் இடையே தூரம் வேண்டும். பெரும்பாலான மக்கள் தங்கள் முகத்தில் இருந்து மட்டும் சுமார் 8 அங்குல தூரத்தில் தான் தங்களது ஸ்மார்ட்போன்களை வைத்து பயன்படுத்துகிறார்களாம். இது மிகவும் மோசமான செயல்பாடாகும், குறைந்தது 16 - 18 அங்குலமாவது தேவை..!