Wednesday, October 18, 2017



1            நீ பிறருக்கு உதவும் போதெல்லாம் அல்லாஹ் உனக்கு உதவிக் கொண்டே இருப்பான்.

2.            எனது கஷ்டங்களை அல்லாஹ் மட்டுமே அறிவான். நான் துன்பத்திலும் சிரிக்கிறேன், இன்பத்திலும் அழுகிறேன். அதைப்பற்றி உலகம் அறியாது. அல்லாஹ் மட்டுமே அறிவான்.

3.            நீ விரும்புபவற்றை அல்லாஹ்  உனக்கு தர மாட்டான், உனக்ககு தேவையானவற்றையே அல்லாஹ் உனக்குத் தருவான்.

4.            உன்னை வெறுப்பவற்றிலிருந்து நீ தூரமாக இருப்பதில் உறுதியாக இரு, உனக்காக அருளப்பட்டவற்றுக்காக நம்பிக்கையோடு காத்திரு.

5.            வெற்றி என்பது அல்லாஹ்விடமிருந்து மாத்திரமே கிடைக்கக் கூடியது. பிறரின் வெற்றியில் பொறாமை கொள்ளாதே.

6.            உன்னால் திரும்பிச் சென்று இறந்த காலத்தை மாற்ற முடியாது. உனது எதிர்காலத்தைப் பார். ஒரு முறை செய்த தவறை மீண்டும் செய்து விடாதே.

7.            நண்பண் துன்பத்தில் இருக்கும் போது உன்னால் கொடுக்க முடியுமான மிகப் பெரிய உதவி உனது பங்கேற்பே.!

8.            உன்னைக் கவர்ந்தவற்றை விட உனக்குத் தேவையானவற்றில் அதிகம் கவனம் செலுத்து. வெற்றி உன்னைத் தேடி வரும்.

9.            உனக்கு எது சிறந்தது என்பதை அல்லாஹ் அறிந்தவன். கிடைக்காதவற்றை நினைத்து ஒரு போதும் அல்லாஹ்வின் அருளில் அதிருப்தி அடைந்த விடாதே.

10.         உன்னைச் சுற்றி அவர்கள் இல்லாத போதும் அவர்களைக் கொண்டு உன்னைச் சந்தோசமாக வைக்கும் உறவுகள் கிடைப்பதும் உண்மையில் ஓர் அருட்கொடை தான்.
.
💎❄💎❄💎❄💎❄💎❄

No comments:

Post a Comment