Thursday, November 30, 2017

*_01.12.2017_*
       *_வெள்ளி கிழமை_*

      *வரலாற்றில் இன்று* 

               *நிகழ்வுகள்*

•┈┈•❀🌴🌴❀•┈┈•


1420 – இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றி மன்னன் பாரிசை முற்றுகையிட்டான்.

1640 – போர்த்துக்கல் ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது. நான்காம் ஜொவாவோ மன்னனானான்.

1768 – அடிமைகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று நோர்வேக்கருகில் மூழ்கியது.

1822 – முதலாம் பீட்டர் பிரேசிலின் பேரரசன் ஆனான்.

1875 – வேல்ஸ் இளவரசர் (இங்கிலாந்தின் ஏழாம் எட்வேர்ட் மன்னர்) கொழும்பு வந்தார்.

1918 – ஐஸ்லாந்து டென்மார்க் முடியாட்சியின் கீழ் சுயாட்சி உரிமை பெற்றது.

1918 – சேர்பிய, குரொவேசிய, சிலவேனிய இராச்சியம் (பின்னர் யூகொஸ்லாவிய இராச்சியம்) அமைக்கப்பட்டது.

1924 – எஸ்தோனியாவில் கம்யூனிசப் புரட்சி தோல்வியில் முடிந்தது.

1934 – சோவியத் ஒன்றியத்தில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீட உறுப்பினர் செர்கே கீரொவ் கட்சித் தலைமையகத்தில் வைத்து லியொனீட் நிக்கொலாயெவ் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1958 – பிரான்சிடம் இருந்து மத்திய ஆபிரிக்கக் குடியரசு விடுதலை பெற்றது.

1958 – சிக்காகோவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 92 மாணவர்கள் உட்பட 95 பேர் கொல்லப்பட்டனர்.

1959 – பனிப்போர்: அண்டார்டிக்கா கண்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் அக்கண்டத்தை அறிவியல் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.

1960 – கொங்கோ அதிபர் பத்திரிசு லுமும்பா இராணுவத் தளபதி மொபுட்டுவினால் கைது செய்யப்பட்டார்.

1961 – இந்தோனீசியாவின் மேற்கு நியூ கினியில் மேற்கு பப்புவா குடியரசு அறிவிக்கப்பட்டது.

1963 – நாகாலாந்து இந்தியாவின் 16வது மாநிலமானது.

1965 – இந்தியாவில் எல்லைக் காவற்படை அமைக்கப்பட்டது.

1971 – இந்திய இராணுவம் காஷ்மீரின் ஒரு பகுதியைப் பிடித்தது.

1973 – பப்புவா நியூ கினி ஆஸ்திரேலியாவிடம் இருந்து சுயாட்சி பெற்றது.

1981 – யூகொஸ்லாவியாவின் விமானம் ஒன்று கோர்சிக்காவில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த 180 பேரும் கொல்லப்பட்டனர்.

1981 – எயிட்ஸ் நோக்கொல்லி அதிகாரபூர்வமாக கண்டறியப்பட்டது.

1982 – முதலாவது செயற்கை இருதயம் யூட்டா பல்கலைக்கழகத்தில் பார்னி கிளார்க் என்பவருக்குப் பொருத்தப்பட்டட்து.

1989 – பனிப்போர்: கம்யூனிஸ்ட் கட்சியின் ஏகபோக அதிகாரத்தை அகற்ற கிழக்கு ஜேர்மனி நாடாளுமன்றம் அதன் அரசியலமைப்பைத் திருத்தியது.

1989 – பிலிப்பீன்ஸ் அதிபர் கொரசோன் அக்கீனோவை பதவியில் இருந்து அகற்ற எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.

1991 – பனிப்போர்: உக்ரேன் வாக்காளர்கள் சோவியத்திடம் இருந்து உக்ரேன் முற்றாக வெளியேற வாக்களித்தனர்.

2006 – இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீது கொழும்பில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் அவர் காயமெதுவுமின்றி தப்பினார்.

                *பிறப்புகள்*

•┈┈•❀🌴🌴❀•┈┈•

1935 – வூடி அலன், அமெரிக்க திரைப்படம்|திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர்.

1954 – மேதா பட்கர், இந்திய சமூக ஆர்வலர்.

1960 – உதித் நாராயண், இந்திய திரைப்படம்|திரைப்படப் பின்னனிப் பாடகர்.

1963 – அர்ஜூன றணதுங்க, இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர்.


                   *இறப்புகள்*

•┈┈•❀🌴🌴❀•┈┈•

1825 – முதலாம் அலெக்சாண்டர், ரஷ்ய சார் மன்னன் (பி. 1777)

1973 – டேவிட் பென்-குரியன், இஸ்ரேலின் முதல் பிரதமர் (பி. 1886)

1990 – விஜயலட்சுமி பண்டிட் (பி. 1900)


                  *சிறப்பு நாள்*

•┈┈•❀🌴🌴❀•┈┈•
உலக எய்ட்ஸ் நாள்
போர்த்துக்கல் – விடுதலை நாள்
மத்திய ஆபிரிக்கக் குடியரசு – விடுதலை நாள் (1958)

Wednesday, November 29, 2017

*_30.11.2017_*
              *_வியாழன்_*

        *வரலாற்றில் இன்று* 

               *நிகழ்வுகள்*

•┈┈•❀🐯🌴🌴🕊❀•┈┈•

1612 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் படைகளுக்கும் போர்த்துக்கீசருக்கும் இடையில் இந்தியக் கரையில் சுவாலி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரித்தானியர் வென்றனர்.

1700 – சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்ஸ் தலைமையில் 8.500 இராணுவத்தினர் எஸ்தோனியாவில் நார்வா என்ற இடத்தில் பெரும் ரஷ்யப் படைகளை வென்றனர்.

1718 – நோர்வேயின் பிரெட்ரிக்ஸ்டன் கோட்டை முற்றுகையின் போது சுவீடன் மன்னன் பன்னிரண்டாம் சார்ல்ஸ் இறந்தான்.

1782 – அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் இரண்டுக்கும் இடையே ஆரம்ப அமைதி உடன்பாடு பாரிசில் கையெழுத்திடப்பட்டது.

1803 – ஸ்பானியர்கள் லூசியானாவை பிரான்சுக்கு அதிகாரபூர்வமாகக் கையளித்தனர். பிரான்ஸ் இப்பிரதேசத்தை 20 நாட்களின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவுக்கு விற்றது

1806 – நெப்போலியனின் படைகள் போலந்து தலைநகர் வார்சாவைக் கைப்பற்றினர்.

1853 – ரஷ்யப் பேரரசின் கடற்படை வட துருக்கியில் உள்ள சினோப் என்ற இடத்தில் ஓட்டோமான் பேரரசின் படைகளைத் தோற்கடித்தன.

1872 – உலகின் முதலாவது அனைத்துலக காற்பந்துப் போட்டி கிளாஸ்கோவில் ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இடம்பெற்றது.

1908 – பென்சில்வேனியாவில் மரியான்னா என்ற இடத்தில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 154 பேர் கொல்லப்பட்டனர்.

1917 – முதலாம் உலகப் போர்: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர். ஐயாத்துரை என்ற லான்ஸ் கோப்ரல் போரில் ஈடுபட்டு இறந்தார்.

1936 – லண்டனில் பளிங்கு அரண்மனை தீயினால் சேதமடைந்தது.

1939 – சோவியத் படைகள் பின்லாந்தை முற்றுகையிட்டு குண்டுகளை வீசீன.

1943 – இரண்டாம் உலகப் போர்: டெஹ்ரானில் கூடிய அமெரிக்க ஜனாதிபதி பிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரித்தானியத் தலைமை அமைச்சர் வின்ஸ்டன் சேர்ச்சில், ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் ஜூன் 1944 இல் ஐரோப்பாவைத் தாக்கும் தமது திட்டத்தை ஆராய்ந்தனர்.

1962 – பர்மாவைச் சேர்ந்த யூ தாண்ட் ஐக்கிய நாடுகள் சபையின் 3வது பொதுச் செயலராகத் தெரிவானார்.

1966 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து பார்போடஸ் விடுதலை பெற்றது.

1967 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து தெற்கு யேமன் விடுதலை பெற்றது.

1967 – சுல்பிகார் அலி பூட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சியை ஆரம்பித்தார்.

1981 – பனிப்போர்: ஜெனீவாவில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத் பிரதிநிதிகள் ஐரோப்பாவில் நிலைகொண்டுள்ள நடுத்தர ஏவுகணைகளைக் குறைக்க பேச்சுவார்த்தையை ஆரம்பித்தனர்

1995 – வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது.


                *பிறப்புகள்*

•┈┈•❀🐯🌴🌴🕊❀•┈┈•

1825 – வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ, பிரெஞ்சு ஓவியர் (இ. 1905)

1835 – மார்க் டுவெய்ன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1910)

1857 – பொபி எபில், ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர் (இ. 1936)

1858 – ஜகதீஷ் சந்திர போஸ், இந்திய முதல் விண்ணலை அறிவியலாளர் (இ. 1937)

1869 – நில்சு குஸ்டாப் டேலன், சுவீடிய இயற்பியலாளர், பநோபல் பரிசு பெற்றவர் (இ. 1937)

1874 – வின்ஸ்டன் சர்ச்சில், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரும், நோபல் பரிசு பெற்றவரும் (இ. 1965)

1950 – வாணி ஜெயராம், இந்தியப் பாடகி

1965 – பென் ஸ்டில்லர், அமெரிக்க நடிகர்

1982 – எலிஷா கத்பெர்ட், கனடிய நடிகை

1988 – பிலிப் ஹியூஸ், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் (இ. 2014

1990 – மாக்னசு கார்ல்சன், நோர்வே சதுரங்க ஆட்டக்காரர், உலக வாகையாளர்


                 *இறப்புகள்*

•┈┈•❀🐯🌴🌴🕊❀•┈┈•

1900 – ஆஸ்கார் வைல்டு, ஐரிய நாடகாசிரியர், எழுத்தாளர் (பி. 1854)

1930 – பொன்னம்பலம் இராமநாதன், இலங்கைத் தமிழ்த் தலைவர், அரசியல்வாதி (பி. 1851)

2012 – ஐ. கே. குஜரால், இந்தியாவின் 15வது பிரதமர் (பி. 1919)

2012 – முனீர் மலிக், பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1931)

•┈┈•❀🐯🌴🌴🕊❀•┈┈•

                   *சிறப்பு நாள்*

•┈┈•❀🐯🌴🌴🕊❀•┈┈•

பார்போடஸ் – விடுதலை நாள் (1966)

புனித அந்திரேயா விழா – கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சபையார்களால் கொண்டாடப்படுகிறது.

புனித அந்திரேயா தினம் – இசுக்காட்லாந்து நாட்டில் தேசிய தினமாகவும், வங்கி விடுமுறை தினமாகவும் உள்ளது.

Thursday, November 16, 2017

பிறந்த நாள் கொண்டாடலாமா? 

பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை. ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் கடைபிடிக்க வேண்டிய சந்தோஷமான துக்கமான காரியங்கள் அனைத்தையும் இஸ்லாம் கற்றுத்தந்திருக்கின்றது. இதில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இஸ்லாம் குறிப்பிடவில்லை.

இந்த சமுதாயத்துக்கு பெரும் பாக்கியமாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது பிறந்த நாளை அவர்களும் கொண்டாடவில்லை. கொண்டாடுமாறு மக்களுக்கும் கூறவில்லை. ஏன் நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட நபித்தோழர்களிடையே இப்படிப்பட்ட ஒரு கலாச்சாரம் இருக்கவில்லை.

மேலும் இக்கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் அமைந்துள்ளது. மனிதனுடைய பிறப்பில் அவனுடைய சாதனை எதுவும் இல்லை. ஒவ்வொரு மனிதனுடைய பிறப்பும் அவன் வளர்வதும் இறைவனுடைய அருளாலே நடந்துகொண்டிருக்கின்றது. எனவே இதில் மனிதன் தன்னை பெருமைப்படுத்திக்கொள்வதில் என்ன தத்துவம் அடங்கியிருக்கின்றது?

மேலும் இறைவன் நமக்கு விதித்த காலக்கெடுவில் ஓராண்டு கழிந்துவிட்டது எனக் கவலைப்படுவதைத் தவிர பிறந்த நாளில் சந்தோஷப்படுவதற்கு என்ன இருக்கின்றது?

இது பிற்காலத்தில் கிரிஸ்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட கொண்டாட்டமாகும். கிரிஸ்தவர்களின் கெட்ட கலாச்சாரத்தை நாம் பின்பற்றக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

3456حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ حَدَّثَنَا أَبُو غَسَّانَ قَالَ حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودَ وَالنَّصَارَى قَالَ فَمَنْ رواه البخاري

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் : ”உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கலின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ”அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”வேறெவரை?” என்று பதிலலித்தார்கள்.
புகாரி (3456)

எனவே பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு நீங்கள் பிறரை அழைத்தாலும் பிறரை அழைக்காமல் உங்கள் குடும்பத்தினர் மட்டும் கொண்டாடினாலும் அது தவறு. இதை நாம் கைவிட வேண்டும்.

Tuesday, November 14, 2017

சுவர்கத்தின் சுருக்கமான பயனம்
முழுமையாக படியுங்கள் 
இத்த்கை சிறப்பு மிக்க சுவனம் எட்டு ஆகும்
1. தாருல் ஜலால் ஒளியாலும்

2. தாருல் ஸலாம் செம்மனியாலும்

3. தாருல் கரார் பவளத்தாலும்

4. ஜன்னத்துல்  அத்ன் மரகதத்தாலும்

5. ஜன்னத்துல் மஃவா பொன்னாலும்

6. ஜன்னத்துல் குல்து வெள்ளியாலும்

7. ஜன்னத்துல் ஃபிரதவ்ஸ் முத்தாலும்

8. ஜன்னத்துன் நயீம் வைடூரியத்தாலும் படைக்கப்பட்டுள்ளன 

     ஆதாரம் : திர்மதி

பத்து வகையான மனிதர்க்ளை சுவனம் தேடுகின்றன

1. நள்ளிரவில் இரன்டு ரக அத் தொழுபவர்

2. கோடைகாளத்தில் நோன்பு நோற்பவர்

3. முதல் தக்பீரை ஜமாத்துடன் தவரவிடாதவர்

4. இரவில் அதிக நேரம் தூங்காதவர்

5. உன்மையை அன்றி வேறெதனையும் பேசாதவர் 

6. தம் மனைவி ம்க்களிடம் இரக்கம் உடையவர்

7. எப்பொழுதும் உளுவுடன் இருப்பார்

8. மது அருந்தாமலும் ஹராமான செயல்களை செய்யதிருப்பவர்

9. எப்பொழுதும் அன்னல் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்லிக் கொன்டிருப்பவர்

10. பசித்தவனுக்கு உனவளிப்பவர் தாகமுல்லவருக்கு தன்னீர் புகட்டியவர்

இவர்களை சுவனம் தேடுகின்றது 
   
சுவனம் செல்லாத பத்து பேர்கள் 

1. இரக்கம் இல்லாதவர்

2. கோள் சொல்பவ்ன் புறம் பேசுவபன் 

3. பென்களை வைத்து விபச்சாரம் செய்பவன்

4. தன் மனையவிக் கூட்டிக்குடுப்பவன் 

5. மோசடி செய்வபன் 

6. இசைக்கறுவி இசைப்பவர்

7. பிறர் கேட்கும் மன்னிபை எற்காதவர் 

8. ஆடை அநிந்த நிர்வானிகள் 

9. உலகில் மீது  அதிகம் ஆசை உல்லவன் 

10. தன் தாய் தந்தையறை துன்புறுத்துபவன்

    ஆதார நூல்: முநப்பிஹாத்

நபி (ஸல்) அவர்கள் கூரிநார்கள் நீங்கள் ஆறு விஷயங்களைச் செய்வதாக எனக்கு உறுதி அழித்தல் நான் உங்களுக்கு சுவர்கத்தை பெற்றுத்தர உறுதியலிப்பேன்

1. பேசினால் உன்மையே பேசுங்கள் 

2. வாக்களித்தால் நிறைவேற்றுங்கள் 

3. அமானிதத்தைப் பாதுகாத்து வாருங்கள் 

4. நாவையும் மர்ம உறுப்பையும் பாதுகாதுக்கொள்ளுங்கள்

5. தீமையை விட்டும் உங்கள் பார்வைத் திருப்பிக்கொள்ளுங்கள்

6. உங்கள் கரங்களை தீமையை விட்டும் தடுத்துக்கொள்ளுங்கள்
  
   ஆதாரம் : மிஷ்காம் பக்கம் 415

சுவர்கவாசிகலுக்கு அல்லாஹுத்தால சுவர்கம் நுளைமுன் வியிருந்து வைப்பான் மறுமையில் உலகம் ஒரு ரொட்டியாக மாரிவிடும் அதனை அல்லாஹ் தன் சக்திமிக்க கையிகல்லால் சுவர்கவாசிகலுக்கு புரளச்செய்வான் அல்லாஹுத்தால மீன் இரச்சையும் மாட்டு இரச்சையும் சுவனவாசிகளிக்கு கரியாக குடுப்பான் அந்த மீனின் இரலை மட்டும் 80.000 பேர் புசிப்பார்கள் 

 ஆதாரம் : புகாரி முஸ்லிம்

சுவனத்தினுல் போகும் முதல் கூட்டத்தினரின் உருவங்கள் முழுமதி போல் ஒளிரும்  இரன்டாம் கூட்டத்தினரின் உருவம் வின்மீன் போன்று ஒளிரும் சுவனத்தில் எச்சில் மலம் சிறுநீர் தும்மள் இருமள் சளி நோய் நொடி எதுவும் கிடையாது சுவர்கத்தில் பாத்திரங்கள் வெள்ளியாலும் தங்கத்தாலும் இருக்கும் அங்கு தலை சீவும் சீப்பு தங்கமாகவும் அவர்களின் நறுமனப்புகை சந்தனக்கட்டையாகவும் வியர்வை கஸ்தூரி மனமுல்லதாகவும் இருக்கும்   
         ஆதார நூள் : புகாரி முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் கூறிநார்கள் சுவனவாசிகலுக்குப் பனிவிடை செய்ய அழகிய சிருவர்கள் இருப்பார்கள் மேலும் அவர்கலுக்கேன நிர்யிக்கப்பட்ட ஹூருல் ஈன் எனும் கன்னழகிகள் இருப்பார்கள் அவர்கள் ஆனிமுத்துக்களைப் போள் இருப்பார்கள் அந்த ஹூருல் ஈன்கள் இந்த உலகை எட்டிப்பார்த்தாள் இந்த பூமி வெளிச்சமாகவும் நறுமனமாகவும் ஆகிவிடும் அந்த ஹூருல் ஈன் பென்ங்களின் எச்சில் கடலில் பட்டால் கடல் தேனாக மாறிவிடும் சுவர்கத்தில் ஒவ்வரு ஆனுக்கும் மானிடப்பென்ங்கள் 70 பேரும் ஹூருல் ஈன்கள் 30 பேரும் மனைவியாக்கி குடுக்கப்படும்
     ஆதாரம் : திர்மதீ
சுவர்கவாசிகள் வாரத்தில் ஏழு நாட்களில் ஒவ்வொரு நாலும் தங்களின் உற்றார் உறவினர்களை சந்திப்பார்கள்  

1. பிள்ளைகள் சனிக்கிழமையன்று தங்கள் பெற்றோரைச் சந்திப்பார்கள்

2. ஞாயிற்றுக்கிழமையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைச் சந்திப்பார்கள் 

3. திங்கட்கிழமையன்று மானவர்கள் தங்கள் ஆசிரியர்களைச் சந்திப்பார்கள்

4. செவ்வாய்கிழமையன்று ஆசிரியர்கள் தங்கள் மானவர்களைச் சந்திப்பார்கள்

5. புதன்கிழமையன்று நபிமார்களை தனது உம்மத்தினர் சந்திப்பார்கள் 

6. வியாழன் அன்று உம்மத்தினரை நபிமார்கள் சந்திப்பார்கள்

7. வெள்ளிக்கிழமையில் சுவனவாசிகள் அனைவரும் தங்கள் இறைவனைச் சந்திப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூரிநார்கள்

நபி (ஸல்) அவர்கள் கூரிநார்கள்  சுவர்கத்தில் எப்போதும் ஒரு பாடல் ஒளித்துக்கொன்டே இருக்கும்

நாங்கள் என்றும் வாழ்ந்து வருவோம்
நாங்கள் அழிந்து விடமாட்டோம்
நாங்கள் எப்பொமழுதும் சுகபோகத்தில் இருப்போம்
நாங்கள் கவளை அடைய மாட்டோம்
நாங்கள் எப்பொழுதும் திருப்தியுடன் இருந்து வருவோம்
என்று பாடிக்கொன்டிருப்பார்கள் சுவனத்தில் பல்வேறு பிரம்மான்டமான மரங்கள் இருப்பினும் இம்மை மறுமை எல்ல இல்ல மரமாகும் இதன் கனிகள் ஒவ்வொன்றும் யானைக்காது போன்றும் அதிக ஒளி வீசக்கூடியதாகவும் ஒவ்வொரு கனியிலும் எழுபத்திரன்டு வகையான சுவையிருக்கும் அதன் வேர்ப்பகுதியில் இருந்துதான் சுவனத்தின் நதிகள் யாவும் ஊற்றெடுக்கும் சுவனத்தில் என்னற்ற அரன்மனைகள் இருக்கும் அவை ஒவ்வொன்றிலும்  ஒரே மானிக்கத்தினால் ஆன 70.000 அறைகள் இருக்கும்  ஒவ்வரு சுவர்கவாசிக்கும் இது போன்ற கட்டிடங்கள் பல இருக்கும்

   ஆதாரம் : புகாரி முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் கூரிநார்கள் சுவர்கவாசிகலுக்கு பயனம் செய்ய விரும்புவீராயின் சிவப்பு நிறப் பவளக் குதிரையில் ஏற்றப்படுவீர் அது நீர் நாடிய இடத்திற்கு உம்மை பறந்து சுமந்து  கொன்டுச்செல்லும் சுவர்கவாசியின் ஆடை பட்டினாலும் நவரத்திங்களாளும் இழைத்து உருவாக்கப்பட்டிருக்கும் சுவனத்தில் நிச்சியமாக கடைத்தெரு ஒன்று உள்ளது அங்கு விற்பனையோ வாங்குவதோ கிடையாது ஆன்களின் மாற்றமும் பென்களின் தோற்றங்கள் தான் இருக்கும் 

  ஆதாரம் :  திர்மதி

அல்லாஹ் சுவர்வாசிகளை அலைப்பான் சுவர்கவாசிகள் அல்லாஹ்வுக்கு முன்னால் ஒன்று கூடுவார்கள் அப்போ அல்லாஹ் சுவர்கவாசிகளை பார்த்து கேப்பான் திருப்தி அடைந்தீர்களா  சுவர்கவாசிகள் சொள்ளுவார்கள் யா ரப்பே நி யாருக்கும் குடுக்காததையல்லவாஎங்க்ளுக்கு குடுத்திருக்கிறாய் எப்படி திருப்தி அடையாமல் இருப்போம் அல்லாஹ் கூருவான் இதைவிட ஒன்று நான் உங்கலுக்கு அறிவிக்கவா 

சுவர்கவாசிகள்  சொல்லுவார்கள் இதை விட ஒன்றா  அல்லாஹ் கூருவான் என் பொருத்ததை உங்கள் மீது ஹலாலக்குகிறேன் இதற்கு மேல் உங்கள் மீது நான் கோவபட மாட்டேன் என்று சொல்லிவிட்டு 

அல்லாஹ் தனக்கு முன்னால் உல்ல எழுபது திரையயும் அகற்றுவான்  சுவர்கவாசிகள் யாருக்காக தொழுதார்களோ யாருக்காக நோன்பு வைத்தார்களோ யாருக்காக சகாத் கொடுத்தார்களோ யாருக்காக இரவில் எழுந்து தொழுதார்களோ யாருக்காக நல்லமல்கள் செய்தார்களோ யாரை அச்சி வாழ்ந்தார்களோ  அந்த அல்லாஹ்வை அந்த இரன்டு கன்களாள் சுவர்கவாசிகள் பார்பார்கள் அதைவிட சுவர்கத்தில் எதும் ஈடாகாது
யா அல்லாஹ் நரகதை விட்டு பாதுகாத்து இந்த உன்மை வாழ்கை சுவர்கத்தில் நுளைய வைத்து உன்னை இந்த இரன்டு கன்களாள் பார்கக்கூடிய பாக்கியதை எனக்கும் உங்களுக்கு இந்த உலக முஸ்லீம் அனைவருக்கும் அல்லாஹ் குடுப்பானாக.
aamin

Monday, November 13, 2017

*இல்லை*

மின்னுவதெல்லாம் இங்கே
பொன்னில்லை
காண்பதெல்லாம் கண்ணில்
கனவில்லை...!

உண்பதெல்லாம் உடலுக்கு 
உகந்ததில்லை
எண்ணுவதெல்லாம்  சிலநேரம்
சரியில்லை
சொன்னதெல்லாம் செயலில் 
வரவில்லை...!

ஆண்களெல்லாம்   ஆணவம் 
கொள்பவர்களில்லை 
பெண்களெல்லாம்  பெருமை 
அடிப்பவர்களில்லை....!

துன்பங்களெல்லாம் தொடர்ந்தும்
இருப்பதில்லை 
இன்பங்களெல்லாம்  இறுதிவரை 
நிலைப்பதில்லை....!

மண்ணையெல்லாம்  மனிதன் 
மறக்கவில்லை
விண்ணையெல்லாம் வியந்து 
பார்ப்பதுமில்லை....!

கன்னிகளெல்லாம்  கவனமாய்
காக்கப்படுவதுமில்லை 
ஆன்மாக்களெல்லாம்  அதிகம் 
புதுப்பிக்கப்படவுமில்லை.....!

நன்மைகளெல்லாம்  நாளுக்குநாள் 
அதிகரிக்கவில்லை
நண்பர்களெல்லாம்  நல்லவர்களாய் 
அமைவதில்லை...!

நன்றிகளெல்லாம்  மீண்டும்
நினைவிலில்லை 
முன்னுதாரணங்களெல்லாம் முன்புபோல்
பேசப்படவில்லை...!

உண்மையெல்லாம்  உலகம் 
ஏற்பதில்லை 
அன்பெல்லாம் அதிகம் 
பயன்படுவதில்லை 
சான்றுகளெல்லாம்  சாட்சி
கூறுவதில்லை...!

என்னையும் உன்னையும் 
மாற்றம்  தழுவப்போவதுமில்லை.....!

*பின்த் அக்ரம்*
*பேராதனைப்பல்கலைக்கழகம்*

படித்ததில்  பிடித்தது 

Thursday, November 9, 2017

நபிகள் நாயகம் (ஸல்) பிறக்குமுன்பே தந்தையை இழுந்து தாயின் அரவனைப்பில் வளர்ந்து வந்தார்..அவருக்கு 6வயதானபோது தாயார் ஆமினா அவர்கள் "மகனே! மதீனாவிலுள்ள நமது சொந்தங்களை உனக்கு அறிமுகப்படுத்தித் தரட்டுமா!"எனக்கூறி மதினாவுக்கு அழைத்து செல்கிறார்..
       அங்கு ஒருமாதம் தங்கியப்பிறகு மீண்டும் மக்கா நோக்கி பயணிக்கிறார்கள்..அவர்களோடு பராக்கா(உம்மு அய்மன் )..
அப்துல்லாஹ் தம் சொத்து என்று ஆமினாவுக்கு விட்டுச் சென்றவை ஐந்து ஒட்டகங்கள்; ஆட்டு மந்தை; இவற்றோடு அடிமைப் பெண் பரக்கா..
  மக்காவை நெருங்க இரண்டு இரவுகளே உள்ள நிலையில் தாயார் ஆமினாவுக்கு காய்ச்சல் முற்றுகிறது..
ஆறு வயதேஆன நபி(ஸல்)அவர்களுக்கு தெரியவில்லை அது தாயின் ஷக்கராத்தென்று..அந்த குழந்தை பார்க்கபோகும் முதல் மரணம் அது..
ஆனால் அந்த தாயிக்கு புரிந்துவிட்டது இது தன் கடைசி நேரமென்று..தன் மகனின் மடியில் படுத்தவாறே அவர் கண்ணத்தை தடவியபடியே கூறுகிறார்.."மகனே! பொறுமையாக இரு..இவ்வுலகில் வந்த ஒவ்வொரு உயிரும் மரணமடைந்தே தீரும்..அல்லாஹ் யாரையும் விடமாட்டான்..ஒவ்வொரு வாலிபமும் வயோதிகமாகும்..ஒவ்வொரு இன்பமும் அழியும்..மகனே! பொறுமையாக இரு!" எனக்கூறி தனது அடிமைபெண் பராக்காவிடம் 
"“பரக்கா! எனது இவ்வுலக வாழ்க்கை முடியப்போகிறது. என் மகன் முஹம்மதை உன் பொறுப்பில் அளிக்கிறேன். என் வயிற்றில் இருக்கும்போதே தன் தந்தையை இழந்த சிறுவன் இதோ இப்போது தன் கண்ணெதிரே தாயையும் இழக்கப்போகிறான். ஒரு தாயாய் அவனைக் கவனித்துக்கொள் பரக்கா. அவனை விட்டு விலகாதே.”
அதை பரக்காவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நெஞ்சம் வெடித்துவிடும் போலிருந்தது அவருக்கு. புலம்பி அழ ஆரம்பித்துவிட்டார். அதைக் கண்ட சிறுவர் முஹம்மது விஷயம் முழுதாய்ப் புரியாவிட்டாலும் ஏதோ துக்கம் என்று தெரிந்துகொண்டு விம்ம ஆரம்பித்துவிட்டார். தம் அன்னையின் கைகளுக்குள் புதைந்து கழுத்தை இறுக கட்டிக்கொண்டார். அன்னை ஆமினாவிடமிருந்து ஓர் இறுதி முனகல் வெளிப்பட்டு அடங்கியது. ஆறு வயதுப் பாலகன் முற்றிலும் நிராதரவரானார்..(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்)துக்கத்தை அடக்க முடியாமல் அழுதார் பரக்கா. உடலும் கண்களும் களைத்துப் போகும் வரை அழுதார். அந்த காட்டில்..அந்த சிறிய மலைகுன்றில் யாருமின்றி..பிறகு தம் கையாலேயே குழிதோண்டி, தம் எசமானி ஆமினாவை நல்லடக்கம் செய்துவிட்டு, அழுது கொண்டிருக்கும் சிறுவர் முஹம்மது(ஸல்) அவர்களின் கைகளை பற்றிக்கொண்டு மக்காநோக்கி நடக்கிறார்..சிறிது தூரம்கூட செல்லவில்லை..அவர் கைகளை உதறிவிட்டு ஓடிச்சென்று தனது தாயின் கபுரின் மேல்படுத்து அழுகிறார் சிறுவரான நபி(ஸல்)
"அம்மா!உன்னைவிட்டு போகமாட்டேன்..நீங்க எனக்கு தேவை"என தேம்பிதேம்பி அழுகிறார்..மக்காவரை அழுதுகொண்டே செல்கிறார்.......பிறகு அப்படியே காலம் செல்கிறது..இப்போது நபி(ஸல்)அவர்களுக்கு வயது 63.. தனது முதலும் கடைசிமான ஹஜ்ஜை நிறைவேற்ற மக்கா நோக்கி புறப்படுகிறார்..தனது தாய் அடக்கியுள்ள அபுவா குன்றின் வழியாக தனது பயணத்தை அமைத்துகொண்டு..
அந்த இடம் வந்ததும் பயணக்கூட்டத்தை அன்று இரவு அங்கேயே தங்கச்சொல்லிவிட்டு தான்மட்டும் மலைக்கு மேல்ஏறி தனது தாயின் கபுரின் முன்பு இருகால்களையும் கைகளால் கட்டிக்கொண்டு அமருகிறார்..
6வயதில் விட்டுசென்ற தாயை  63வயது ஆனபோதும் தாயை மறக்கல..இடையில் 57வருடங்களில் நபிபட்டம் கிடைத்தது தன் தாயை மறக்கல..பத்ர் உட்பட பல போர்களின் வெற்றி- தன் தாயை மறக்கல..சித்ரத்துல் முன்தஹா  வரை விண்ணுலக பயணம் போய்ட்டு வந்தாங்க நபி(ஸல்)அவர்கள் தாயை மறக்கல..தனது தாயின் கபுரை பார்த்து அழுது கொண்டே சொல்கிறார் "அம்மா ! நீங்க உயிரோடு இருந்திருந்தா..உங்களுக்கு எவ்வளவு பணிவிடை செய்திருப்பேன் தெரியுமா! நான் தொழுகையில் இருக்கும்போது..நீங்க முஹம்மது! முஹம்மது! என்று அழைத்திருந்தால்! இதோ..வந்துவிட்டேன் தாயே! என்று  தொழுகையை விட்டுவிட்டு உங்களுக்கு பணிவிடை செய்யவந்திருப்பேனே! அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லையே" என அழுது அழுது மனம் வருந்தினார்...
*இதன்மூலம் யுக முடிவுநாள்வரையுள்ள அனைத்து மனிதர்களுக்கும் நபி(ஸல்)அவர்கள் ஒரு செய்தியை தருகிறார்: நீ எத்தனை ஹஜ்ஜுக்கு போனாலும்.. எவ்வளவு தானதர்மங்கள் செய்தாலும்.. எத்தனை அமல்கள் செய்தாலும்..ஒரு நபியாகவே இருந்தாலும்கூட பெற்றோர் உயிரோடு இருந்து அவர்களை கண்ணியப்படுத்தாவரை அவரின் எந்த அமலும் ஏற்றுக்கொள்ளப்படாது...
தாய் – தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ இருவருமோ முதுமை அடைந்துவிட்ட நிலையில் உம்மிடம் இருந்தால் அவர்களை ‘சீ’ என்றுகூடக் கூராதீர். மேலும் அவர்களைக் கடிந்து பேசாதீர். மாறாக அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீராக ( திருக்குர் ஆன் 17:23 ). பொதுவாக வயசு கூடக்கூட டென்ஷன் அதிகமாகும்.
இதுமாதிரி முதுமைப் பருவத்தில் பெற்றோர் நம் மனம் புண்படும் விதத்தில் நம்மைப் பேசிடலாம், ஏசிவிடலாம். ஆனாலும்கூட அதற்குப்பகரமாக நாம் பேசிடும் ஒவ்வொரு வார்த்தையிலும் கண்ணியம் இழையோட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் பெற்றோரின் மறியாதையைக் குதறிவிடக்கூடாது. ‘பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்று’ என நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கண்டிக்கிறார்கள். நீ நேரடியாகத் திட்டுவது ஒருபுறம் இருக்கட்டும், நீ ஒருவனின் தந்தையைத் திட்ட அவன் பதிலுக்கு உன் தந்தையைத் திட்டக்கூடிய சூழலைக்கூட உருவாக்கி விடாதே என்று உணர்த்துகிறார்கள். ( முஸ்லிம் )
#பெற்றோரை_மறக்காதீர்கள்..

Saturday, November 4, 2017

*சுவனத்துப் பேரரசி  ஃபாத்திமா ரலியல்லாஹூ  தஆலா அன்ஹா அவர்கள்*,,

*ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்க்கச் செல்கின்றார்கள்*

தனது அருமைத் தந்தையை நோக்கி...,,,

 "எனதருமைத் தந்தையே கணவனுக்கு மனைவி செய்ய வேண்டிய கடமைகளை எனக்கு சொல்லித் தாருங்கள் என்ற போது...,,,,

றஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்ல ஆரம்பித்தார்கள்
இவ்வாறு,,,,,

" எனதருமை மகளே  ஒரு பெண் மரியாதை இன்றி தனது கணவனை விட்டு முகம் திருப்பி அலட்சியமாக நடப்பாலே ஆனால் அல்லாஹ்  அவளை சபிக்கின்றான்,,

ஏழு வானங்களின் வாசல்களும் அவளுக்கு அடைக்கப்பட்டு விடும்...!!

அன்பு மகள் ஃபாத்திமாவே
கணவன் அழைக்கும் போது மறுத்து விட்ட பெண்னை அவளுடைய இபாதத்துக்களின் நன்மைகள் எல்லாவற்றையும் கணவனுக்கு கொடுக்கப்படும்...!! 

அந்த இரவு விடியும் வரை மலக்குகள் அவளை சபித்துக் கொண்டே இருப்பார்கள்.....!!

எனதருமை மகளே
ஒரு பெண் கணவனைப் பார்த்து உன்னால் நான் எந்தப் பலனையும் அடையவில்லை என்று சொன்னால்,,,,

அவளுடைய அனைத்து நன்மையையும் அல்லாஹ் அந்த கணவனுக்கு கொடுத்து விடுவான்....!!!

அவளின் உடலில் எத்தனை ரோமங்கள் உள்ளனவோ அந்த,,,
ரோமங்களின் எண்ணிக்கை அளவு பாவத்தை அல்லாஹ் அவள் மீது சுமத்திவிடுவான்....!!!

அந்தப் பெண் தவ்பாச் செய்து கணவனை திருப்திப் படுத்தி சமாதானம் செய்யாத வரையில் அவள் சுவனம் போக மாட்டாள்...!!!

எனதருமை மகளே! ஒரு பெண் தன்னுடைய கணவனின் பேச்சை மீறி நடந்தால் அல்லாஹ் அப்பெண்ணின் தொழுகை,நோன்பு போன்ற வணக்கங்களை ஏற்றுக் கொள்ள மாட்டான்.!!

ரிஸ்க் உடைய வாசல் அடைக்கப் பட்டு விடும்
கணவனின் பொருத்தம் இல்லாமல் இறந்து விட்டால், 

அவள் நரகத்துக்குப் போய் சேர்ந்து விடுவாள்....!! என்று தொடர்ந்து இன்னும் விபரிக்கின்றார்கள்....!!

கண்மணி ஃபாத்திமாவே...!! எனது ஈரல் குலை துண்டே...!!

ஒரு பெண் தனது கணவனின் உத்தரவு இன்றி வீட்டை விட்டு வெளியேறினால் ,,,

அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு  அடியின் இடையில் உள்ள மணல், கல், சூரியன், சந்திரன், நட்சத்திரம்  போன்ற.,,,,

அனைத்துக் படைப்புக்களும் அவளை சபித்துக் கொண்டே இருக்கும்....!!!

அருமை மகளே ஃபாத்திமாவே...!!  
ஒரு பெண் தனது கணவனுக்குத் தொல்லை,துயரம், கஷ்டம் கொடுத்தால் 'அல்லாஹ்'அப் பெண்ணை சபிக்கின்றான்....!!!!

அவளுடைய எந்த வணக்கங்களும் வான லோகத்துக்கு உயர்த்தப் படுவதில்லை.

எனதருமை மகளே ஒரு பெண் தன் கணவனைப் பார்த்து நீ எனது சொத்துக்களை  தின்று விட்டாய்,,,,

நான் வாங்கித்தந்த துனிகளைத் தான் உடுத்தினாய், என்று
சொன்னால் அவள் ஒரு போதும் சுவர்க்கம் போக மாட்டாள்....!!!

தனது சொத்துக்கள் அனைத்தையும் கணவனுக்காக அர்ப்பணித்த போதிலும அவள்  ஒரு துரும்பைக் கூட கொடுத்தவள் ஆக மாட்டாள்....!!!

அவளை அவளுடைய கணவன் பொருந்திக் கொள்ளும் வரையில் அவளது துஆக்களும் ஒப்புக் கொள்ளப் படுவதில்லை.....!!

எனதருமை மகளே
ஒரு பெண் தீய கடும் வார்த்தைகளால் தனது கணவனைத் திட்டினால்,,,,

 உலகத்திலுள்ள மண் துகல்கள் எண்ணிக்கை அளவு பாவங்கள் எழுதும் படி  அல்லாஹ் மலக்குகளுக்கு  கட்டளை இடுகின்றான்....!!

மேலும் அவளுடைய எந்த வணக்கத்தின் மூலமும் துஆவை 'அல்லாஹ்' ஏற்றுக் கொள்ள மாட்டான்....!!!

வானத்தில் உள்ள மலக்குகள் எல்லாம் அவளை (நயவஞ்சகி) என்று கூறுவார்கள்....!!

நரகத்தில் அவளுக்கு வேதனை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
 ஃபாத்திமாவே(ரழியல்லாஹு அன்ஹா)
ஒரு பெண் தன் கணவனுக்கு ஆயுள் முழுவதும் (இரவும் பகலும் தொடர்ச்சியாக பணிவுடை செய்தாலும், அது குறைவானதேயாகும்...!!

ஆனால் அவள் அல்லாஹுவின் அருளை, கட்டாயம் பெற்றுக் கொள்வாள்...!!

 அருமை மகள் ஃபாத்திமாவாவே
கணவனுக்கு ருகூஉ,சுஜூது தவிர மற்ற எல்லா வகையான பணிவிடைகளும் செய்ய வேண்டுமென கட்டளை வந்திருக்கின்றது....!!

என்னருமை மகளே
"கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து சந்தோஷமடைந்தால்,  அவர்களைப் பார்த்து அல்லாஹ் சந்தோஷம்  அடைகின்றான்...!! 

என்று கண்மணி ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹூ அலைகிவஸல்லம் அவர்கள் hi கூறினார்கள்.!!!

ஸல்லல்லாஹூ அலா முகம்மது 
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்