*இல்லை*
மின்னுவதெல்லாம் இங்கே
பொன்னில்லை
காண்பதெல்லாம் கண்ணில்
கனவில்லை...!
உண்பதெல்லாம் உடலுக்கு
உகந்ததில்லை
எண்ணுவதெல்லாம் சிலநேரம்
சரியில்லை
சொன்னதெல்லாம் செயலில்
வரவில்லை...!
ஆண்களெல்லாம் ஆணவம்
கொள்பவர்களில்லை
பெண்களெல்லாம் பெருமை
அடிப்பவர்களில்லை....!
துன்பங்களெல்லாம் தொடர்ந்தும்
இருப்பதில்லை
இன்பங்களெல்லாம் இறுதிவரை
நிலைப்பதில்லை....!
மண்ணையெல்லாம் மனிதன்
மறக்கவில்லை
விண்ணையெல்லாம் வியந்து
பார்ப்பதுமில்லை....!
கன்னிகளெல்லாம் கவனமாய்
காக்கப்படுவதுமில்லை
ஆன்மாக்களெல்லாம் அதிகம்
புதுப்பிக்கப்படவுமில்லை.....!
நன்மைகளெல்லாம் நாளுக்குநாள்
அதிகரிக்கவில்லை
நண்பர்களெல்லாம் நல்லவர்களாய்
அமைவதில்லை...!
நன்றிகளெல்லாம் மீண்டும்
நினைவிலில்லை
முன்னுதாரணங்களெல்லாம் முன்புபோல்
பேசப்படவில்லை...!
உண்மையெல்லாம் உலகம்
ஏற்பதில்லை
அன்பெல்லாம் அதிகம்
பயன்படுவதில்லை
சான்றுகளெல்லாம் சாட்சி
கூறுவதில்லை...!
என்னையும் உன்னையும்
மாற்றம் தழுவப்போவதுமில்லை.....!
*பின்த் அக்ரம்*
*பேராதனைப்பல்கலைக்கழகம்*
படித்ததில் பிடித்தது
No comments:
Post a Comment