யா அல்லாஹ்!உனக்கோர் இறையன்பு மடல்....
உயிரினும் மேலாய் உன்னை அனுதினமும் நேசித்து,உணர்ந்து
உயிர்ப்பித்து வாழ்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
உயிர்பிப்பவேன!அதிகாலை பொழுதினிலே நான் துயிலெழ மீண்டும் ஒர் நாளை சந்தித்தமைக்காய் உனக்கே நன்றி சொல்வேன்.
என் இரட்சகனுக்கே எல்லாப் புகழும்.
உன் நினைவால் என் அறையெல்லாம் இறை ஒளி வீசும்,தீன் மணம் கமழும்.
தஹஜ்ஜத்திற்காய் விரைந்தெழுந்து கடும் குளிர் பாராது வுழூ என் உறுப்புக்களை தொட ஆன்மா முழுதும் ஆனந்தமடையும்.
உனக்காய் விரிப்பில் வீற்றிருந்து, ஒவ்வொர் இருப்பிலும் உன் புகழ் கூற மனமெங்கும் ஈமானிய வாடை வீசும்.
ஸூஜுதிற்காய் நான் ஏங்கி நிற்பேன்.
உன் நெருக்கம் அதி விருப்பத்திற்குரியது.
அழகிய நிகழ்வுகளை உன்னிடமே கூறி அருளாலனே!
பேரின்பம் கொள்வேன்.
இக்கட்டான கட்டங்களிலும் உன் விதியின் மகிமையறிந்து உனக்காய் மாத்திரம் நான் விழித்தெழுவேன்.
பிராத்தனை என் பிரியத்திற்குரியது.
வேண்டுவதை எல்லாம் தாயிற்கும் நிகராய் அன்பு கொள்ளும் உன்னிடமே கெஞ்சி அழுவேன்.
உன்னை தவிர என் தேவைகளை உணர்ந்தவன் வேறு யாராக இருக்க முடியும்?
காலைவேளை எல்லாம்
சோலை வனமாகிறது உன்னாலே.
அழியாத வார்த்தைகள் அல்குர்ஆனிய வசனங்கள் அதை மொழிவதிலே வசந்தம் அடைவேன்.
மறை தனை பார்க்கும் போதெல்லாம் எனையறியாமலே முத்தமிடுவேன்.
மொத்தத்தில் உனக்காகவே உயிர் துறக்க விரும்புகிறேன்.
யா ரஹ்மானே!
உன்னை சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிட்ட வேண்டும்.
உன்னை சந்திப்பதற்காகவே உலக காரியங்கள் அனைத்தும் உன் நிழலில் அமைய வேண்டும்.
உன் இரக்கத்தின் ஆழத்தை உணரும் பொழுதுகளில்
என் ஆன்மா உன்னை
இந் நிமிடமே சந்திக்கத் துடிக்கிறது.
உன்னை உனது ஒளியை பார்க்கும் பாக்கியம் வேறெதற்கும் ஒப்பிட முடியாதது.
உன்னிடமே தஞ்சம் அடைந்து,
உன்னுடனே பயணிக்கையில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
அப்துல் வாஹிட் பாதிமா முனிரா.
சில்மியாபுர..
No comments:
Post a Comment