Thursday, November 30, 2017

*_01.12.2017_*
       *_வெள்ளி கிழமை_*

      *வரலாற்றில் இன்று* 

               *நிகழ்வுகள்*

•┈┈•❀🌴🌴❀•┈┈•


1420 – இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றி மன்னன் பாரிசை முற்றுகையிட்டான்.

1640 – போர்த்துக்கல் ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது. நான்காம் ஜொவாவோ மன்னனானான்.

1768 – அடிமைகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று நோர்வேக்கருகில் மூழ்கியது.

1822 – முதலாம் பீட்டர் பிரேசிலின் பேரரசன் ஆனான்.

1875 – வேல்ஸ் இளவரசர் (இங்கிலாந்தின் ஏழாம் எட்வேர்ட் மன்னர்) கொழும்பு வந்தார்.

1918 – ஐஸ்லாந்து டென்மார்க் முடியாட்சியின் கீழ் சுயாட்சி உரிமை பெற்றது.

1918 – சேர்பிய, குரொவேசிய, சிலவேனிய இராச்சியம் (பின்னர் யூகொஸ்லாவிய இராச்சியம்) அமைக்கப்பட்டது.

1924 – எஸ்தோனியாவில் கம்யூனிசப் புரட்சி தோல்வியில் முடிந்தது.

1934 – சோவியத் ஒன்றியத்தில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீட உறுப்பினர் செர்கே கீரொவ் கட்சித் தலைமையகத்தில் வைத்து லியொனீட் நிக்கொலாயெவ் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1958 – பிரான்சிடம் இருந்து மத்திய ஆபிரிக்கக் குடியரசு விடுதலை பெற்றது.

1958 – சிக்காகோவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 92 மாணவர்கள் உட்பட 95 பேர் கொல்லப்பட்டனர்.

1959 – பனிப்போர்: அண்டார்டிக்கா கண்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் அக்கண்டத்தை அறிவியல் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.

1960 – கொங்கோ அதிபர் பத்திரிசு லுமும்பா இராணுவத் தளபதி மொபுட்டுவினால் கைது செய்யப்பட்டார்.

1961 – இந்தோனீசியாவின் மேற்கு நியூ கினியில் மேற்கு பப்புவா குடியரசு அறிவிக்கப்பட்டது.

1963 – நாகாலாந்து இந்தியாவின் 16வது மாநிலமானது.

1965 – இந்தியாவில் எல்லைக் காவற்படை அமைக்கப்பட்டது.

1971 – இந்திய இராணுவம் காஷ்மீரின் ஒரு பகுதியைப் பிடித்தது.

1973 – பப்புவா நியூ கினி ஆஸ்திரேலியாவிடம் இருந்து சுயாட்சி பெற்றது.

1981 – யூகொஸ்லாவியாவின் விமானம் ஒன்று கோர்சிக்காவில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த 180 பேரும் கொல்லப்பட்டனர்.

1981 – எயிட்ஸ் நோக்கொல்லி அதிகாரபூர்வமாக கண்டறியப்பட்டது.

1982 – முதலாவது செயற்கை இருதயம் யூட்டா பல்கலைக்கழகத்தில் பார்னி கிளார்க் என்பவருக்குப் பொருத்தப்பட்டட்து.

1989 – பனிப்போர்: கம்யூனிஸ்ட் கட்சியின் ஏகபோக அதிகாரத்தை அகற்ற கிழக்கு ஜேர்மனி நாடாளுமன்றம் அதன் அரசியலமைப்பைத் திருத்தியது.

1989 – பிலிப்பீன்ஸ் அதிபர் கொரசோன் அக்கீனோவை பதவியில் இருந்து அகற்ற எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.

1991 – பனிப்போர்: உக்ரேன் வாக்காளர்கள் சோவியத்திடம் இருந்து உக்ரேன் முற்றாக வெளியேற வாக்களித்தனர்.

2006 – இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீது கொழும்பில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் அவர் காயமெதுவுமின்றி தப்பினார்.

                *பிறப்புகள்*

•┈┈•❀🌴🌴❀•┈┈•

1935 – வூடி அலன், அமெரிக்க திரைப்படம்|திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர்.

1954 – மேதா பட்கர், இந்திய சமூக ஆர்வலர்.

1960 – உதித் நாராயண், இந்திய திரைப்படம்|திரைப்படப் பின்னனிப் பாடகர்.

1963 – அர்ஜூன றணதுங்க, இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர்.


                   *இறப்புகள்*

•┈┈•❀🌴🌴❀•┈┈•

1825 – முதலாம் அலெக்சாண்டர், ரஷ்ய சார் மன்னன் (பி. 1777)

1973 – டேவிட் பென்-குரியன், இஸ்ரேலின் முதல் பிரதமர் (பி. 1886)

1990 – விஜயலட்சுமி பண்டிட் (பி. 1900)


                  *சிறப்பு நாள்*

•┈┈•❀🌴🌴❀•┈┈•
உலக எய்ட்ஸ் நாள்
போர்த்துக்கல் – விடுதலை நாள்
மத்திய ஆபிரிக்கக் குடியரசு – விடுதலை நாள் (1958)

Wednesday, November 29, 2017

*_30.11.2017_*
              *_வியாழன்_*

        *வரலாற்றில் இன்று* 

               *நிகழ்வுகள்*

•┈┈•❀🐯🌴🌴🕊❀•┈┈•

1612 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் படைகளுக்கும் போர்த்துக்கீசருக்கும் இடையில் இந்தியக் கரையில் சுவாலி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரித்தானியர் வென்றனர்.

1700 – சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்ஸ் தலைமையில் 8.500 இராணுவத்தினர் எஸ்தோனியாவில் நார்வா என்ற இடத்தில் பெரும் ரஷ்யப் படைகளை வென்றனர்.

1718 – நோர்வேயின் பிரெட்ரிக்ஸ்டன் கோட்டை முற்றுகையின் போது சுவீடன் மன்னன் பன்னிரண்டாம் சார்ல்ஸ் இறந்தான்.

1782 – அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் இரண்டுக்கும் இடையே ஆரம்ப அமைதி உடன்பாடு பாரிசில் கையெழுத்திடப்பட்டது.

1803 – ஸ்பானியர்கள் லூசியானாவை பிரான்சுக்கு அதிகாரபூர்வமாகக் கையளித்தனர். பிரான்ஸ் இப்பிரதேசத்தை 20 நாட்களின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவுக்கு விற்றது

1806 – நெப்போலியனின் படைகள் போலந்து தலைநகர் வார்சாவைக் கைப்பற்றினர்.

1853 – ரஷ்யப் பேரரசின் கடற்படை வட துருக்கியில் உள்ள சினோப் என்ற இடத்தில் ஓட்டோமான் பேரரசின் படைகளைத் தோற்கடித்தன.

1872 – உலகின் முதலாவது அனைத்துலக காற்பந்துப் போட்டி கிளாஸ்கோவில் ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இடம்பெற்றது.

1908 – பென்சில்வேனியாவில் மரியான்னா என்ற இடத்தில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 154 பேர் கொல்லப்பட்டனர்.

1917 – முதலாம் உலகப் போர்: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர். ஐயாத்துரை என்ற லான்ஸ் கோப்ரல் போரில் ஈடுபட்டு இறந்தார்.

1936 – லண்டனில் பளிங்கு அரண்மனை தீயினால் சேதமடைந்தது.

1939 – சோவியத் படைகள் பின்லாந்தை முற்றுகையிட்டு குண்டுகளை வீசீன.

1943 – இரண்டாம் உலகப் போர்: டெஹ்ரானில் கூடிய அமெரிக்க ஜனாதிபதி பிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரித்தானியத் தலைமை அமைச்சர் வின்ஸ்டன் சேர்ச்சில், ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் ஜூன் 1944 இல் ஐரோப்பாவைத் தாக்கும் தமது திட்டத்தை ஆராய்ந்தனர்.

1962 – பர்மாவைச் சேர்ந்த யூ தாண்ட் ஐக்கிய நாடுகள் சபையின் 3வது பொதுச் செயலராகத் தெரிவானார்.

1966 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து பார்போடஸ் விடுதலை பெற்றது.

1967 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து தெற்கு யேமன் விடுதலை பெற்றது.

1967 – சுல்பிகார் அலி பூட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சியை ஆரம்பித்தார்.

1981 – பனிப்போர்: ஜெனீவாவில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத் பிரதிநிதிகள் ஐரோப்பாவில் நிலைகொண்டுள்ள நடுத்தர ஏவுகணைகளைக் குறைக்க பேச்சுவார்த்தையை ஆரம்பித்தனர்

1995 – வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது.


                *பிறப்புகள்*

•┈┈•❀🐯🌴🌴🕊❀•┈┈•

1825 – வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ, பிரெஞ்சு ஓவியர் (இ. 1905)

1835 – மார்க் டுவெய்ன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1910)

1857 – பொபி எபில், ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர் (இ. 1936)

1858 – ஜகதீஷ் சந்திர போஸ், இந்திய முதல் விண்ணலை அறிவியலாளர் (இ. 1937)

1869 – நில்சு குஸ்டாப் டேலன், சுவீடிய இயற்பியலாளர், பநோபல் பரிசு பெற்றவர் (இ. 1937)

1874 – வின்ஸ்டன் சர்ச்சில், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரும், நோபல் பரிசு பெற்றவரும் (இ. 1965)

1950 – வாணி ஜெயராம், இந்தியப் பாடகி

1965 – பென் ஸ்டில்லர், அமெரிக்க நடிகர்

1982 – எலிஷா கத்பெர்ட், கனடிய நடிகை

1988 – பிலிப் ஹியூஸ், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் (இ. 2014

1990 – மாக்னசு கார்ல்சன், நோர்வே சதுரங்க ஆட்டக்காரர், உலக வாகையாளர்


                 *இறப்புகள்*

•┈┈•❀🐯🌴🌴🕊❀•┈┈•

1900 – ஆஸ்கார் வைல்டு, ஐரிய நாடகாசிரியர், எழுத்தாளர் (பி. 1854)

1930 – பொன்னம்பலம் இராமநாதன், இலங்கைத் தமிழ்த் தலைவர், அரசியல்வாதி (பி. 1851)

2012 – ஐ. கே. குஜரால், இந்தியாவின் 15வது பிரதமர் (பி. 1919)

2012 – முனீர் மலிக், பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1931)

•┈┈•❀🐯🌴🌴🕊❀•┈┈•

                   *சிறப்பு நாள்*

•┈┈•❀🐯🌴🌴🕊❀•┈┈•

பார்போடஸ் – விடுதலை நாள் (1966)

புனித அந்திரேயா விழா – கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சபையார்களால் கொண்டாடப்படுகிறது.

புனித அந்திரேயா தினம் – இசுக்காட்லாந்து நாட்டில் தேசிய தினமாகவும், வங்கி விடுமுறை தினமாகவும் உள்ளது.

Thursday, November 16, 2017

பிறந்த நாள் கொண்டாடலாமா? 

பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை. ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் கடைபிடிக்க வேண்டிய சந்தோஷமான துக்கமான காரியங்கள் அனைத்தையும் இஸ்லாம் கற்றுத்தந்திருக்கின்றது. இதில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இஸ்லாம் குறிப்பிடவில்லை.

இந்த சமுதாயத்துக்கு பெரும் பாக்கியமாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது பிறந்த நாளை அவர்களும் கொண்டாடவில்லை. கொண்டாடுமாறு மக்களுக்கும் கூறவில்லை. ஏன் நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட நபித்தோழர்களிடையே இப்படிப்பட்ட ஒரு கலாச்சாரம் இருக்கவில்லை.

மேலும் இக்கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் அமைந்துள்ளது. மனிதனுடைய பிறப்பில் அவனுடைய சாதனை எதுவும் இல்லை. ஒவ்வொரு மனிதனுடைய பிறப்பும் அவன் வளர்வதும் இறைவனுடைய அருளாலே நடந்துகொண்டிருக்கின்றது. எனவே இதில் மனிதன் தன்னை பெருமைப்படுத்திக்கொள்வதில் என்ன தத்துவம் அடங்கியிருக்கின்றது?

மேலும் இறைவன் நமக்கு விதித்த காலக்கெடுவில் ஓராண்டு கழிந்துவிட்டது எனக் கவலைப்படுவதைத் தவிர பிறந்த நாளில் சந்தோஷப்படுவதற்கு என்ன இருக்கின்றது?

இது பிற்காலத்தில் கிரிஸ்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட கொண்டாட்டமாகும். கிரிஸ்தவர்களின் கெட்ட கலாச்சாரத்தை நாம் பின்பற்றக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

3456حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ حَدَّثَنَا أَبُو غَسَّانَ قَالَ حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودَ وَالنَّصَارَى قَالَ فَمَنْ رواه البخاري

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் : ”உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கலின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ”அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”வேறெவரை?” என்று பதிலலித்தார்கள்.
புகாரி (3456)

எனவே பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு நீங்கள் பிறரை அழைத்தாலும் பிறரை அழைக்காமல் உங்கள் குடும்பத்தினர் மட்டும் கொண்டாடினாலும் அது தவறு. இதை நாம் கைவிட வேண்டும்.

Tuesday, November 14, 2017

சுவர்கத்தின் சுருக்கமான பயனம்
முழுமையாக படியுங்கள் 
இத்த்கை சிறப்பு மிக்க சுவனம் எட்டு ஆகும்
1. தாருல் ஜலால் ஒளியாலும்

2. தாருல் ஸலாம் செம்மனியாலும்

3. தாருல் கரார் பவளத்தாலும்

4. ஜன்னத்துல்  அத்ன் மரகதத்தாலும்

5. ஜன்னத்துல் மஃவா பொன்னாலும்

6. ஜன்னத்துல் குல்து வெள்ளியாலும்

7. ஜன்னத்துல் ஃபிரதவ்ஸ் முத்தாலும்

8. ஜன்னத்துன் நயீம் வைடூரியத்தாலும் படைக்கப்பட்டுள்ளன 

     ஆதாரம் : திர்மதி

பத்து வகையான மனிதர்க்ளை சுவனம் தேடுகின்றன

1. நள்ளிரவில் இரன்டு ரக அத் தொழுபவர்

2. கோடைகாளத்தில் நோன்பு நோற்பவர்

3. முதல் தக்பீரை ஜமாத்துடன் தவரவிடாதவர்

4. இரவில் அதிக நேரம் தூங்காதவர்

5. உன்மையை அன்றி வேறெதனையும் பேசாதவர் 

6. தம் மனைவி ம்க்களிடம் இரக்கம் உடையவர்

7. எப்பொழுதும் உளுவுடன் இருப்பார்

8. மது அருந்தாமலும் ஹராமான செயல்களை செய்யதிருப்பவர்

9. எப்பொழுதும் அன்னல் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்லிக் கொன்டிருப்பவர்

10. பசித்தவனுக்கு உனவளிப்பவர் தாகமுல்லவருக்கு தன்னீர் புகட்டியவர்

இவர்களை சுவனம் தேடுகின்றது 
   
சுவனம் செல்லாத பத்து பேர்கள் 

1. இரக்கம் இல்லாதவர்

2. கோள் சொல்பவ்ன் புறம் பேசுவபன் 

3. பென்களை வைத்து விபச்சாரம் செய்பவன்

4. தன் மனையவிக் கூட்டிக்குடுப்பவன் 

5. மோசடி செய்வபன் 

6. இசைக்கறுவி இசைப்பவர்

7. பிறர் கேட்கும் மன்னிபை எற்காதவர் 

8. ஆடை அநிந்த நிர்வானிகள் 

9. உலகில் மீது  அதிகம் ஆசை உல்லவன் 

10. தன் தாய் தந்தையறை துன்புறுத்துபவன்

    ஆதார நூல்: முநப்பிஹாத்

நபி (ஸல்) அவர்கள் கூரிநார்கள் நீங்கள் ஆறு விஷயங்களைச் செய்வதாக எனக்கு உறுதி அழித்தல் நான் உங்களுக்கு சுவர்கத்தை பெற்றுத்தர உறுதியலிப்பேன்

1. பேசினால் உன்மையே பேசுங்கள் 

2. வாக்களித்தால் நிறைவேற்றுங்கள் 

3. அமானிதத்தைப் பாதுகாத்து வாருங்கள் 

4. நாவையும் மர்ம உறுப்பையும் பாதுகாதுக்கொள்ளுங்கள்

5. தீமையை விட்டும் உங்கள் பார்வைத் திருப்பிக்கொள்ளுங்கள்

6. உங்கள் கரங்களை தீமையை விட்டும் தடுத்துக்கொள்ளுங்கள்
  
   ஆதாரம் : மிஷ்காம் பக்கம் 415

சுவர்கவாசிகலுக்கு அல்லாஹுத்தால சுவர்கம் நுளைமுன் வியிருந்து வைப்பான் மறுமையில் உலகம் ஒரு ரொட்டியாக மாரிவிடும் அதனை அல்லாஹ் தன் சக்திமிக்க கையிகல்லால் சுவர்கவாசிகலுக்கு புரளச்செய்வான் அல்லாஹுத்தால மீன் இரச்சையும் மாட்டு இரச்சையும் சுவனவாசிகளிக்கு கரியாக குடுப்பான் அந்த மீனின் இரலை மட்டும் 80.000 பேர் புசிப்பார்கள் 

 ஆதாரம் : புகாரி முஸ்லிம்

சுவனத்தினுல் போகும் முதல் கூட்டத்தினரின் உருவங்கள் முழுமதி போல் ஒளிரும்  இரன்டாம் கூட்டத்தினரின் உருவம் வின்மீன் போன்று ஒளிரும் சுவனத்தில் எச்சில் மலம் சிறுநீர் தும்மள் இருமள் சளி நோய் நொடி எதுவும் கிடையாது சுவர்கத்தில் பாத்திரங்கள் வெள்ளியாலும் தங்கத்தாலும் இருக்கும் அங்கு தலை சீவும் சீப்பு தங்கமாகவும் அவர்களின் நறுமனப்புகை சந்தனக்கட்டையாகவும் வியர்வை கஸ்தூரி மனமுல்லதாகவும் இருக்கும்   
         ஆதார நூள் : புகாரி முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் கூறிநார்கள் சுவனவாசிகலுக்குப் பனிவிடை செய்ய அழகிய சிருவர்கள் இருப்பார்கள் மேலும் அவர்கலுக்கேன நிர்யிக்கப்பட்ட ஹூருல் ஈன் எனும் கன்னழகிகள் இருப்பார்கள் அவர்கள் ஆனிமுத்துக்களைப் போள் இருப்பார்கள் அந்த ஹூருல் ஈன்கள் இந்த உலகை எட்டிப்பார்த்தாள் இந்த பூமி வெளிச்சமாகவும் நறுமனமாகவும் ஆகிவிடும் அந்த ஹூருல் ஈன் பென்ங்களின் எச்சில் கடலில் பட்டால் கடல் தேனாக மாறிவிடும் சுவர்கத்தில் ஒவ்வரு ஆனுக்கும் மானிடப்பென்ங்கள் 70 பேரும் ஹூருல் ஈன்கள் 30 பேரும் மனைவியாக்கி குடுக்கப்படும்
     ஆதாரம் : திர்மதீ
சுவர்கவாசிகள் வாரத்தில் ஏழு நாட்களில் ஒவ்வொரு நாலும் தங்களின் உற்றார் உறவினர்களை சந்திப்பார்கள்  

1. பிள்ளைகள் சனிக்கிழமையன்று தங்கள் பெற்றோரைச் சந்திப்பார்கள்

2. ஞாயிற்றுக்கிழமையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைச் சந்திப்பார்கள் 

3. திங்கட்கிழமையன்று மானவர்கள் தங்கள் ஆசிரியர்களைச் சந்திப்பார்கள்

4. செவ்வாய்கிழமையன்று ஆசிரியர்கள் தங்கள் மானவர்களைச் சந்திப்பார்கள்

5. புதன்கிழமையன்று நபிமார்களை தனது உம்மத்தினர் சந்திப்பார்கள் 

6. வியாழன் அன்று உம்மத்தினரை நபிமார்கள் சந்திப்பார்கள்

7. வெள்ளிக்கிழமையில் சுவனவாசிகள் அனைவரும் தங்கள் இறைவனைச் சந்திப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூரிநார்கள்

நபி (ஸல்) அவர்கள் கூரிநார்கள்  சுவர்கத்தில் எப்போதும் ஒரு பாடல் ஒளித்துக்கொன்டே இருக்கும்

நாங்கள் என்றும் வாழ்ந்து வருவோம்
நாங்கள் அழிந்து விடமாட்டோம்
நாங்கள் எப்பொமழுதும் சுகபோகத்தில் இருப்போம்
நாங்கள் கவளை அடைய மாட்டோம்
நாங்கள் எப்பொழுதும் திருப்தியுடன் இருந்து வருவோம்
என்று பாடிக்கொன்டிருப்பார்கள் சுவனத்தில் பல்வேறு பிரம்மான்டமான மரங்கள் இருப்பினும் இம்மை மறுமை எல்ல இல்ல மரமாகும் இதன் கனிகள் ஒவ்வொன்றும் யானைக்காது போன்றும் அதிக ஒளி வீசக்கூடியதாகவும் ஒவ்வொரு கனியிலும் எழுபத்திரன்டு வகையான சுவையிருக்கும் அதன் வேர்ப்பகுதியில் இருந்துதான் சுவனத்தின் நதிகள் யாவும் ஊற்றெடுக்கும் சுவனத்தில் என்னற்ற அரன்மனைகள் இருக்கும் அவை ஒவ்வொன்றிலும்  ஒரே மானிக்கத்தினால் ஆன 70.000 அறைகள் இருக்கும்  ஒவ்வரு சுவர்கவாசிக்கும் இது போன்ற கட்டிடங்கள் பல இருக்கும்

   ஆதாரம் : புகாரி முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் கூரிநார்கள் சுவர்கவாசிகலுக்கு பயனம் செய்ய விரும்புவீராயின் சிவப்பு நிறப் பவளக் குதிரையில் ஏற்றப்படுவீர் அது நீர் நாடிய இடத்திற்கு உம்மை பறந்து சுமந்து  கொன்டுச்செல்லும் சுவர்கவாசியின் ஆடை பட்டினாலும் நவரத்திங்களாளும் இழைத்து உருவாக்கப்பட்டிருக்கும் சுவனத்தில் நிச்சியமாக கடைத்தெரு ஒன்று உள்ளது அங்கு விற்பனையோ வாங்குவதோ கிடையாது ஆன்களின் மாற்றமும் பென்களின் தோற்றங்கள் தான் இருக்கும் 

  ஆதாரம் :  திர்மதி

அல்லாஹ் சுவர்வாசிகளை அலைப்பான் சுவர்கவாசிகள் அல்லாஹ்வுக்கு முன்னால் ஒன்று கூடுவார்கள் அப்போ அல்லாஹ் சுவர்கவாசிகளை பார்த்து கேப்பான் திருப்தி அடைந்தீர்களா  சுவர்கவாசிகள் சொள்ளுவார்கள் யா ரப்பே நி யாருக்கும் குடுக்காததையல்லவாஎங்க்ளுக்கு குடுத்திருக்கிறாய் எப்படி திருப்தி அடையாமல் இருப்போம் அல்லாஹ் கூருவான் இதைவிட ஒன்று நான் உங்கலுக்கு அறிவிக்கவா 

சுவர்கவாசிகள்  சொல்லுவார்கள் இதை விட ஒன்றா  அல்லாஹ் கூருவான் என் பொருத்ததை உங்கள் மீது ஹலாலக்குகிறேன் இதற்கு மேல் உங்கள் மீது நான் கோவபட மாட்டேன் என்று சொல்லிவிட்டு 

அல்லாஹ் தனக்கு முன்னால் உல்ல எழுபது திரையயும் அகற்றுவான்  சுவர்கவாசிகள் யாருக்காக தொழுதார்களோ யாருக்காக நோன்பு வைத்தார்களோ யாருக்காக சகாத் கொடுத்தார்களோ யாருக்காக இரவில் எழுந்து தொழுதார்களோ யாருக்காக நல்லமல்கள் செய்தார்களோ யாரை அச்சி வாழ்ந்தார்களோ  அந்த அல்லாஹ்வை அந்த இரன்டு கன்களாள் சுவர்கவாசிகள் பார்பார்கள் அதைவிட சுவர்கத்தில் எதும் ஈடாகாது
யா அல்லாஹ் நரகதை விட்டு பாதுகாத்து இந்த உன்மை வாழ்கை சுவர்கத்தில் நுளைய வைத்து உன்னை இந்த இரன்டு கன்களாள் பார்கக்கூடிய பாக்கியதை எனக்கும் உங்களுக்கு இந்த உலக முஸ்லீம் அனைவருக்கும் அல்லாஹ் குடுப்பானாக.
aamin

Monday, November 13, 2017

*இல்லை*

மின்னுவதெல்லாம் இங்கே
பொன்னில்லை
காண்பதெல்லாம் கண்ணில்
கனவில்லை...!

உண்பதெல்லாம் உடலுக்கு 
உகந்ததில்லை
எண்ணுவதெல்லாம்  சிலநேரம்
சரியில்லை
சொன்னதெல்லாம் செயலில் 
வரவில்லை...!

ஆண்களெல்லாம்   ஆணவம் 
கொள்பவர்களில்லை 
பெண்களெல்லாம்  பெருமை 
அடிப்பவர்களில்லை....!

துன்பங்களெல்லாம் தொடர்ந்தும்
இருப்பதில்லை 
இன்பங்களெல்லாம்  இறுதிவரை 
நிலைப்பதில்லை....!

மண்ணையெல்லாம்  மனிதன் 
மறக்கவில்லை
விண்ணையெல்லாம் வியந்து 
பார்ப்பதுமில்லை....!

கன்னிகளெல்லாம்  கவனமாய்
காக்கப்படுவதுமில்லை 
ஆன்மாக்களெல்லாம்  அதிகம் 
புதுப்பிக்கப்படவுமில்லை.....!

நன்மைகளெல்லாம்  நாளுக்குநாள் 
அதிகரிக்கவில்லை
நண்பர்களெல்லாம்  நல்லவர்களாய் 
அமைவதில்லை...!

நன்றிகளெல்லாம்  மீண்டும்
நினைவிலில்லை 
முன்னுதாரணங்களெல்லாம் முன்புபோல்
பேசப்படவில்லை...!

உண்மையெல்லாம்  உலகம் 
ஏற்பதில்லை 
அன்பெல்லாம் அதிகம் 
பயன்படுவதில்லை 
சான்றுகளெல்லாம்  சாட்சி
கூறுவதில்லை...!

என்னையும் உன்னையும் 
மாற்றம்  தழுவப்போவதுமில்லை.....!

*பின்த் அக்ரம்*
*பேராதனைப்பல்கலைக்கழகம்*

படித்ததில்  பிடித்தது 

Thursday, November 9, 2017

நபிகள் நாயகம் (ஸல்) பிறக்குமுன்பே தந்தையை இழுந்து தாயின் அரவனைப்பில் வளர்ந்து வந்தார்..அவருக்கு 6வயதானபோது தாயார் ஆமினா அவர்கள் "மகனே! மதீனாவிலுள்ள நமது சொந்தங்களை உனக்கு அறிமுகப்படுத்தித் தரட்டுமா!"எனக்கூறி மதினாவுக்கு அழைத்து செல்கிறார்..
       அங்கு ஒருமாதம் தங்கியப்பிறகு மீண்டும் மக்கா நோக்கி பயணிக்கிறார்கள்..அவர்களோடு பராக்கா(உம்மு அய்மன் )..
அப்துல்லாஹ் தம் சொத்து என்று ஆமினாவுக்கு விட்டுச் சென்றவை ஐந்து ஒட்டகங்கள்; ஆட்டு மந்தை; இவற்றோடு அடிமைப் பெண் பரக்கா..
  மக்காவை நெருங்க இரண்டு இரவுகளே உள்ள நிலையில் தாயார் ஆமினாவுக்கு காய்ச்சல் முற்றுகிறது..
ஆறு வயதேஆன நபி(ஸல்)அவர்களுக்கு தெரியவில்லை அது தாயின் ஷக்கராத்தென்று..அந்த குழந்தை பார்க்கபோகும் முதல் மரணம் அது..
ஆனால் அந்த தாயிக்கு புரிந்துவிட்டது இது தன் கடைசி நேரமென்று..தன் மகனின் மடியில் படுத்தவாறே அவர் கண்ணத்தை தடவியபடியே கூறுகிறார்.."மகனே! பொறுமையாக இரு..இவ்வுலகில் வந்த ஒவ்வொரு உயிரும் மரணமடைந்தே தீரும்..அல்லாஹ் யாரையும் விடமாட்டான்..ஒவ்வொரு வாலிபமும் வயோதிகமாகும்..ஒவ்வொரு இன்பமும் அழியும்..மகனே! பொறுமையாக இரு!" எனக்கூறி தனது அடிமைபெண் பராக்காவிடம் 
"“பரக்கா! எனது இவ்வுலக வாழ்க்கை முடியப்போகிறது. என் மகன் முஹம்மதை உன் பொறுப்பில் அளிக்கிறேன். என் வயிற்றில் இருக்கும்போதே தன் தந்தையை இழந்த சிறுவன் இதோ இப்போது தன் கண்ணெதிரே தாயையும் இழக்கப்போகிறான். ஒரு தாயாய் அவனைக் கவனித்துக்கொள் பரக்கா. அவனை விட்டு விலகாதே.”
அதை பரக்காவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நெஞ்சம் வெடித்துவிடும் போலிருந்தது அவருக்கு. புலம்பி அழ ஆரம்பித்துவிட்டார். அதைக் கண்ட சிறுவர் முஹம்மது விஷயம் முழுதாய்ப் புரியாவிட்டாலும் ஏதோ துக்கம் என்று தெரிந்துகொண்டு விம்ம ஆரம்பித்துவிட்டார். தம் அன்னையின் கைகளுக்குள் புதைந்து கழுத்தை இறுக கட்டிக்கொண்டார். அன்னை ஆமினாவிடமிருந்து ஓர் இறுதி முனகல் வெளிப்பட்டு அடங்கியது. ஆறு வயதுப் பாலகன் முற்றிலும் நிராதரவரானார்..(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்)துக்கத்தை அடக்க முடியாமல் அழுதார் பரக்கா. உடலும் கண்களும் களைத்துப் போகும் வரை அழுதார். அந்த காட்டில்..அந்த சிறிய மலைகுன்றில் யாருமின்றி..பிறகு தம் கையாலேயே குழிதோண்டி, தம் எசமானி ஆமினாவை நல்லடக்கம் செய்துவிட்டு, அழுது கொண்டிருக்கும் சிறுவர் முஹம்மது(ஸல்) அவர்களின் கைகளை பற்றிக்கொண்டு மக்காநோக்கி நடக்கிறார்..சிறிது தூரம்கூட செல்லவில்லை..அவர் கைகளை உதறிவிட்டு ஓடிச்சென்று தனது தாயின் கபுரின் மேல்படுத்து அழுகிறார் சிறுவரான நபி(ஸல்)
"அம்மா!உன்னைவிட்டு போகமாட்டேன்..நீங்க எனக்கு தேவை"என தேம்பிதேம்பி அழுகிறார்..மக்காவரை அழுதுகொண்டே செல்கிறார்.......பிறகு அப்படியே காலம் செல்கிறது..இப்போது நபி(ஸல்)அவர்களுக்கு வயது 63.. தனது முதலும் கடைசிமான ஹஜ்ஜை நிறைவேற்ற மக்கா நோக்கி புறப்படுகிறார்..தனது தாய் அடக்கியுள்ள அபுவா குன்றின் வழியாக தனது பயணத்தை அமைத்துகொண்டு..
அந்த இடம் வந்ததும் பயணக்கூட்டத்தை அன்று இரவு அங்கேயே தங்கச்சொல்லிவிட்டு தான்மட்டும் மலைக்கு மேல்ஏறி தனது தாயின் கபுரின் முன்பு இருகால்களையும் கைகளால் கட்டிக்கொண்டு அமருகிறார்..
6வயதில் விட்டுசென்ற தாயை  63வயது ஆனபோதும் தாயை மறக்கல..இடையில் 57வருடங்களில் நபிபட்டம் கிடைத்தது தன் தாயை மறக்கல..பத்ர் உட்பட பல போர்களின் வெற்றி- தன் தாயை மறக்கல..சித்ரத்துல் முன்தஹா  வரை விண்ணுலக பயணம் போய்ட்டு வந்தாங்க நபி(ஸல்)அவர்கள் தாயை மறக்கல..தனது தாயின் கபுரை பார்த்து அழுது கொண்டே சொல்கிறார் "அம்மா ! நீங்க உயிரோடு இருந்திருந்தா..உங்களுக்கு எவ்வளவு பணிவிடை செய்திருப்பேன் தெரியுமா! நான் தொழுகையில் இருக்கும்போது..நீங்க முஹம்மது! முஹம்மது! என்று அழைத்திருந்தால்! இதோ..வந்துவிட்டேன் தாயே! என்று  தொழுகையை விட்டுவிட்டு உங்களுக்கு பணிவிடை செய்யவந்திருப்பேனே! அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லையே" என அழுது அழுது மனம் வருந்தினார்...
*இதன்மூலம் யுக முடிவுநாள்வரையுள்ள அனைத்து மனிதர்களுக்கும் நபி(ஸல்)அவர்கள் ஒரு செய்தியை தருகிறார்: நீ எத்தனை ஹஜ்ஜுக்கு போனாலும்.. எவ்வளவு தானதர்மங்கள் செய்தாலும்.. எத்தனை அமல்கள் செய்தாலும்..ஒரு நபியாகவே இருந்தாலும்கூட பெற்றோர் உயிரோடு இருந்து அவர்களை கண்ணியப்படுத்தாவரை அவரின் எந்த அமலும் ஏற்றுக்கொள்ளப்படாது...
தாய் – தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ இருவருமோ முதுமை அடைந்துவிட்ட நிலையில் உம்மிடம் இருந்தால் அவர்களை ‘சீ’ என்றுகூடக் கூராதீர். மேலும் அவர்களைக் கடிந்து பேசாதீர். மாறாக அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீராக ( திருக்குர் ஆன் 17:23 ). பொதுவாக வயசு கூடக்கூட டென்ஷன் அதிகமாகும்.
இதுமாதிரி முதுமைப் பருவத்தில் பெற்றோர் நம் மனம் புண்படும் விதத்தில் நம்மைப் பேசிடலாம், ஏசிவிடலாம். ஆனாலும்கூட அதற்குப்பகரமாக நாம் பேசிடும் ஒவ்வொரு வார்த்தையிலும் கண்ணியம் இழையோட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் பெற்றோரின் மறியாதையைக் குதறிவிடக்கூடாது. ‘பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்று’ என நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கண்டிக்கிறார்கள். நீ நேரடியாகத் திட்டுவது ஒருபுறம் இருக்கட்டும், நீ ஒருவனின் தந்தையைத் திட்ட அவன் பதிலுக்கு உன் தந்தையைத் திட்டக்கூடிய சூழலைக்கூட உருவாக்கி விடாதே என்று உணர்த்துகிறார்கள். ( முஸ்லிம் )
#பெற்றோரை_மறக்காதீர்கள்..

Saturday, November 4, 2017

*சுவனத்துப் பேரரசி  ஃபாத்திமா ரலியல்லாஹூ  தஆலா அன்ஹா அவர்கள்*,,

*ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்க்கச் செல்கின்றார்கள்*

தனது அருமைத் தந்தையை நோக்கி...,,,

 "எனதருமைத் தந்தையே கணவனுக்கு மனைவி செய்ய வேண்டிய கடமைகளை எனக்கு சொல்லித் தாருங்கள் என்ற போது...,,,,

றஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்ல ஆரம்பித்தார்கள்
இவ்வாறு,,,,,

" எனதருமை மகளே  ஒரு பெண் மரியாதை இன்றி தனது கணவனை விட்டு முகம் திருப்பி அலட்சியமாக நடப்பாலே ஆனால் அல்லாஹ்  அவளை சபிக்கின்றான்,,

ஏழு வானங்களின் வாசல்களும் அவளுக்கு அடைக்கப்பட்டு விடும்...!!

அன்பு மகள் ஃபாத்திமாவே
கணவன் அழைக்கும் போது மறுத்து விட்ட பெண்னை அவளுடைய இபாதத்துக்களின் நன்மைகள் எல்லாவற்றையும் கணவனுக்கு கொடுக்கப்படும்...!! 

அந்த இரவு விடியும் வரை மலக்குகள் அவளை சபித்துக் கொண்டே இருப்பார்கள்.....!!

எனதருமை மகளே
ஒரு பெண் கணவனைப் பார்த்து உன்னால் நான் எந்தப் பலனையும் அடையவில்லை என்று சொன்னால்,,,,

அவளுடைய அனைத்து நன்மையையும் அல்லாஹ் அந்த கணவனுக்கு கொடுத்து விடுவான்....!!!

அவளின் உடலில் எத்தனை ரோமங்கள் உள்ளனவோ அந்த,,,
ரோமங்களின் எண்ணிக்கை அளவு பாவத்தை அல்லாஹ் அவள் மீது சுமத்திவிடுவான்....!!!

அந்தப் பெண் தவ்பாச் செய்து கணவனை திருப்திப் படுத்தி சமாதானம் செய்யாத வரையில் அவள் சுவனம் போக மாட்டாள்...!!!

எனதருமை மகளே! ஒரு பெண் தன்னுடைய கணவனின் பேச்சை மீறி நடந்தால் அல்லாஹ் அப்பெண்ணின் தொழுகை,நோன்பு போன்ற வணக்கங்களை ஏற்றுக் கொள்ள மாட்டான்.!!

ரிஸ்க் உடைய வாசல் அடைக்கப் பட்டு விடும்
கணவனின் பொருத்தம் இல்லாமல் இறந்து விட்டால், 

அவள் நரகத்துக்குப் போய் சேர்ந்து விடுவாள்....!! என்று தொடர்ந்து இன்னும் விபரிக்கின்றார்கள்....!!

கண்மணி ஃபாத்திமாவே...!! எனது ஈரல் குலை துண்டே...!!

ஒரு பெண் தனது கணவனின் உத்தரவு இன்றி வீட்டை விட்டு வெளியேறினால் ,,,

அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு  அடியின் இடையில் உள்ள மணல், கல், சூரியன், சந்திரன், நட்சத்திரம்  போன்ற.,,,,

அனைத்துக் படைப்புக்களும் அவளை சபித்துக் கொண்டே இருக்கும்....!!!

அருமை மகளே ஃபாத்திமாவே...!!  
ஒரு பெண் தனது கணவனுக்குத் தொல்லை,துயரம், கஷ்டம் கொடுத்தால் 'அல்லாஹ்'அப் பெண்ணை சபிக்கின்றான்....!!!!

அவளுடைய எந்த வணக்கங்களும் வான லோகத்துக்கு உயர்த்தப் படுவதில்லை.

எனதருமை மகளே ஒரு பெண் தன் கணவனைப் பார்த்து நீ எனது சொத்துக்களை  தின்று விட்டாய்,,,,

நான் வாங்கித்தந்த துனிகளைத் தான் உடுத்தினாய், என்று
சொன்னால் அவள் ஒரு போதும் சுவர்க்கம் போக மாட்டாள்....!!!

தனது சொத்துக்கள் அனைத்தையும் கணவனுக்காக அர்ப்பணித்த போதிலும அவள்  ஒரு துரும்பைக் கூட கொடுத்தவள் ஆக மாட்டாள்....!!!

அவளை அவளுடைய கணவன் பொருந்திக் கொள்ளும் வரையில் அவளது துஆக்களும் ஒப்புக் கொள்ளப் படுவதில்லை.....!!

எனதருமை மகளே
ஒரு பெண் தீய கடும் வார்த்தைகளால் தனது கணவனைத் திட்டினால்,,,,

 உலகத்திலுள்ள மண் துகல்கள் எண்ணிக்கை அளவு பாவங்கள் எழுதும் படி  அல்லாஹ் மலக்குகளுக்கு  கட்டளை இடுகின்றான்....!!

மேலும் அவளுடைய எந்த வணக்கத்தின் மூலமும் துஆவை 'அல்லாஹ்' ஏற்றுக் கொள்ள மாட்டான்....!!!

வானத்தில் உள்ள மலக்குகள் எல்லாம் அவளை (நயவஞ்சகி) என்று கூறுவார்கள்....!!

நரகத்தில் அவளுக்கு வேதனை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
 ஃபாத்திமாவே(ரழியல்லாஹு அன்ஹா)
ஒரு பெண் தன் கணவனுக்கு ஆயுள் முழுவதும் (இரவும் பகலும் தொடர்ச்சியாக பணிவுடை செய்தாலும், அது குறைவானதேயாகும்...!!

ஆனால் அவள் அல்லாஹுவின் அருளை, கட்டாயம் பெற்றுக் கொள்வாள்...!!

 அருமை மகள் ஃபாத்திமாவாவே
கணவனுக்கு ருகூஉ,சுஜூது தவிர மற்ற எல்லா வகையான பணிவிடைகளும் செய்ய வேண்டுமென கட்டளை வந்திருக்கின்றது....!!

என்னருமை மகளே
"கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து சந்தோஷமடைந்தால்,  அவர்களைப் பார்த்து அல்லாஹ் சந்தோஷம்  அடைகின்றான்...!! 

என்று கண்மணி ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹூ அலைகிவஸல்லம் அவர்கள் hi கூறினார்கள்.!!!

ஸல்லல்லாஹூ அலா முகம்மது 
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்

Tuesday, October 31, 2017

✍🏽கடலில் பெய்யும் மழை பயனற்றது,
✍🏽பகலி ல் எரியும் தீபம் பயனற்றது,
✍🏽வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது,
✍🏽நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது.
✍🏽அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.
✍🏽வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் நல்லது.
✍🏽 பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது.
✍🏽 ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளவர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.
✍🏽பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது,
✍🏽 சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது,
✍🏽பெரிய மலை சிறிய உளியால் வெட்டி எடுக்கப்படுகிறது.
✍🏽பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.
✍🏽வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது.
✍🏽அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.
✍🏽சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது.
✍🏽யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள்,
குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள்.
கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள்.
ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்
✍🏽எல்லாம் காரியங்களிலும் நீங்கள் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர்.
✍🏽வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள்.
✍🏽காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.
✍🏽அறியாமையை விட கொடிய எதிரி இல்லை.
✍🏽கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லவே இல்லை....🌹
🙌🏾இருபது ரூவா  பிச்சைக்காரனுக்கு போட யோசிக்கிற நாம அதையே ஹோட்டல்ல சர்வருக்கு டிப்ஸா  கொடுக்குறோம்...

⌚ஜிம்முல ஒரு நாள் பூராம் ஒர்க் அவுட் பண்ண சளைக்காத நாம... வீட்ல மனைவிக்கு உதவி செய்ய சலிச்சுக்கிறோம்...

🙏🏻கடவுளை பிரார்த்திக்க ஒரு மூணு நிமிசத்தை ஒதுக்க சங்கடப்படும் நாம மூணு மணி நேரம் உட்கார்ந்து விளங்காத படத்தை பார்த்துட்டு வரோம்...

💧காதலர் தினத்துக்காக ஒரு வருசமா காத்திருக்கிற நாம அன்னையர் தினத்தை மறந்திடறோம்...

👍🏻ரோட்டோரம் உட்கார்ந்திருக்கும் ஏழை குழந்தைகளுக்கு ஒரு நேர சாப்பாடு வாங்கி தர நினைக்காத நாம அதையே ஓவியமா வரைஞ்சா லட்ச ரூவா கொடுத்துக்கூட வாங்கி வீட்ல மாட்டிக்கிறோம்...

படித்தில் பிடித்தது

Saturday, October 28, 2017

*பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா*
என்ற படைப்பு புகழ் பெற்றது.
அதில் இடம் பெற்றுள்ள கேள்வி, பதில்களிருந்து சில... :

*1. எது இதமானது ?*
தர்மம்.

*2. நஞ்சு எது ?*
பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது.

*3. மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ?*
பற்றுதல்.

*4. கள்வர்கள் யார் ?*
புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.

*5. எதிரி யார் ?*
சோம்பல்.

*6. எல்லோரும் பயப்படுவது எதற்கு ?*
இறப்புக்கு.

*7. குருடனை விட குருடன் யார் ?*
ஆசைகள் அதிகம் உள்ளவன்.

*8. சூரன் யார் ?*
கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.

*9.மதிப்புக்கு மூலம் எது ?*
எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது.

*10. எது துக்கம் ?*
மன நிறைவு இல்லாமல் இருப்பது.

*11. உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் ?*
குற்றங்கள் புரியாமல் வாழ்வதை.

*12. தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை ?*
இளமை, செல்வம், ஆயுள்.... ஆகியவை.

*13. சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார் ?*
நல்லவர்கள்.

*14. எது சுகமானது ?*
அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.

*15. எது இன்பம் தரும் ?*
நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.

*16. எது மரணத்துக்கு இணையானது ?*
அசட்டுத்தனம்.

*17. விலை மதிப்பற்றதென எதைக் குறிப்பிடலாம் ?*
காலமறிந்து செய்யும் உதவி.

*18. இறக்கும் வரை உறுத்துவது எது ?*
ரகசியமாகச் செய்த பாவம்.

*19. எவரை நல்வழிப்படுத்துவது கடினம் ?*
துஷ்டர்கள், எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள், சோகத்திலேயே சுழல்பவர்கள், நன்றி கெட்டவர்கள்... ஆகியோர் !

*20. சாது என்பவர் யார் ?*
ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.

*21. உலகத்தை யாரால் வெல்ல முடியும் ?*
சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.

*22. யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?*
எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.

*23. செவிடன் யார் ?*
நல்லதைக் 
கேட்காதவன்.

*24. ஊமை யார் ?*
சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான 
சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.

*25. நண்பன் யார் ?*
பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.

*26. யாரை விபத்துகள் அணுகாது ?*
மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும்

அன்புடன்"  பகிரவும்  "அனைவரும்  உயர.

Tuesday, October 24, 2017

மனிதா உன்னால் முடியும்.

தோல்வியை தற்கொலை செய்யவைத்த மாமனிதர் சாயிக்ரோ. வாழ்வில் பல தடவை தோற்றும் முயற்சியை கைவிடாத வெற்றி நாயகன்.

சாய்க்ரோவின் 18வது வயதில் தனது தந்தையாலே ஒன்றிற்கும் உதவாதவன் என ஒதுக்கபட்டான். படிப்பிலும் தோல்வி. சாய்க்ரோ முடியும் என முயற்சி செய்தான் TOYOTA நிர்வனதிற்கு பிஸ்டனை தயாரிக்க முயற்சி செய்தான். தன்னிடம் இருந்த அணைத்து பணத்தையும் முதலிட்டு ஒரு வருட முயற்சியில் பிஸ்டனை தயாரித்தார்.
ஆனால் TOYOTA அதனை நிராகரித்தது. சாய்க்ரோவை பார்த்து எல்லோரும் கேலி செய்தனர் உன்னால் முடியாது என கூறினர், ஆனால் சாய்க்ரோ முயற்சியை கைவிடவில்லை. மீண்டும் முயன்று பல வருட உழைப்பில் பிஸ்டனை கண்டுபிடித்தார்.  TOYOTAவில் காண்பித்தார். TOYOTA நிர்வனமும்  ஏற்றுக்கொண்டது. 

பிஸ்டன் தயாரிக்க பாரியதொழிற்சாலை தேவைப்பட்டது. ஜப்பான் 2ம் உலகபோரிற்கு தயாராக இருந்ததால் சீமென்ட் இல்லாத நிலை. தொழிற்சாலை கட்ட சீமென்ட் இல்லாத நிலை. சிமெண்ட்க்கு பதிலாக சிமெண்ட் கலவையை கண்டுபிடித்து, தொழிற்சாலை கட்டினார். சில நாட்களுகளில் 2ம் உலக  போரில் அமெரிக்கா வீசிய குண்டில் தொழிற்சாலை தரைமட்டமாக்கப்பட்டது. 

சாய்க்ரோவின் வாழ்க்கை முடிந்தது என மக்கள் கூறினர். மீண்டும் முயன்று கடன் பெற்று தொழிற்சாலை கட்டினார். ஜப்பானில் ஏட்பட்ட நில நடுக்கத்தில் மீண்டும்  தொழிற்சாலை நொறுங்கி தரைமட்டமாக்கப்பட்டது. 

சாய்க்ரோவை இராசியில்லாதவன் என கூறினர். துவண்டுவிடவில்லை சாய்க்ரோ. ஒரு நாள் தனது சைக்கிளை பார்த சாய்க்ரோ புது முயற்சியில் இறங்கினார். புல்வெட்டும் இயந்திரத்தில் இருந்த மோட்டாரை சைக்கிளில் பொருத்தி மோட்டார் சைக்கிளை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். மோட்டார் சைக்கில் தொழிற்சாலை உருவாக்க வங்கிளிடம் கடன் கேட்டார் வங்கிகல்   மறுத்துவிட்டது. முயற்சியை கைவிடாத சைக்ரோ சைக்கிள் நிர்வனங்களின் உதவியடன் தொழிற்சாலை ஆரம்பித்தார். 

உலகம் போற்றும் நிர்வனத்தின் நிர்வனரானார். தன்னை புறக்கணித்த TOYOTAவின் போட்டி நிர்வனமாக தனது நிர்வனத்தை உயர்தினார். ஆம் இவரின் முழுப்பெயர் சாய்க்ரோ HONDA. இப்போது உங்களுக்கு தெரியும் இவர் யார் என்று. ஆம் இவர்தான்  
உலகில் முதன்மை நிர்வனமான HONDA நிர்வனத்தின் அதிபதி Soichiro HONDA.

சாய்க்ரோவின் இறுதி வரிகள் "Success represents the 1% of your work 
Which results from the 99% failure"
- Soichiro Honda-

மனிதாஉன்னாலும் முடியும்.
as received 
journalist 
A.U.M.Maufeer 
Career counsellor

Sunday, October 22, 2017

குர்ஆன் போதிப்பது என்ன?
 சிறு தொகுப்பு!!! 

..  ஒப்பந்தங்களை முறித்து மாறு செய்ய கூடாது.
*குர்ஆன் 2:27,16:92*

.. இரத்த உறவுகளை முறிக்க கூடாது. சேர்ந்து வாழ வேண்டும்.
*குர்ஆன் 2:27,47:22*

.. உண்மையை பொய்யுடன் கலக்க கூடாது. உண்மையை மறைக்கவும் கூடாது.
*குர்ஆன் 2:42*

..  நீங்கள் செய்யாமல், ஊருக்கு மட்டும் உபதேசம் செய்ய கூடாது.
*குர்ஆன் 2:44 61:2*

.. பூமியில் குழப்பம் செய்து திரிய கூடாது.
*குர்ஆன் 2:60*

..  ஆன்மீக ஏமாற்றல் செய்து பிழைக்க கூடாது.
*குர்ஆன் 2:79*

.. பெற்றோருக்கும் நெருங்கிய உறவினருக்கும் அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நன்மை செய்ய வேண்டும்.
மனிதர்களுக்கு நல்ல வார்த்தையையே கூற வேண்டும்
*குர்ஆன் 2:83*

... வீணாக இரத்தம் சிந்தி, உறவினர்களை வீட்டை விட்டு வெளியேற்ற கூடாது.
*குர்ஆன் 2:84*

.. உங்களுக்கு எதிராக நடப்பவர்களையும் மன்றியுங்கள்.
*குர்ஆன் 2:109*

..  நல்லவற்றை/ தூயவற்றையே சாப்பிட வேண்டும்.
*குர்ஆன் 2:168 ,172*

.. முன்னோரை குருட்டுத்தனமாக பின்பற்ற கூடாது.
*குர்ஆன் 2:170*

.. செல்வங்களை உறவுகளுக்கும், அநாதைகளுக்கும்,  ஏழைகளுக்கும், யாசிப்பவருக்கும், அடிமைகளுக்கும் கொடுத்து, ஒப்பந்தங்களை நிறைவேற்ற வேண்டும்.
*குர்ஆன் 2:177*

.. மற்ற மனிதர்களின் சொத்துக்களை அபகரிக்க கூடாது. லஞ்சம் கொடுக்க கூடாது.
*குர்ஆன் 2:188*

.. உங்களுடன் போர் புரிபவர்களோடே போர் புரிய வேண்டும். அதிலும் வரம்பு மீற கூடாது. போர் செய்யாது விலகிக்கொண்டால், அநியாய காரர்கள் மீதே தவிர வேறு எவர் மீதும் பகைமை கொல்ல கூடாது.
*குர்ஆன் 2:190-193*

எதிரிகளில் ஒருவன் அடைக்களம் கேட்டால் கொடுத்து, பாதுகாப்பான இடத்தில் சேர்க்க வேண்டும்
*குர்ஆன் 9:6*

உங்களுடன் போரிட சக்தியற்றவர்களுடன் போர் செய்ய கூடாது. அவர்கள் எதிரியாக இருந்தாலும் சரி
*குர்ஆன் 4:90*

எதிரிகள் சமாதானத்தை விரும்பினால், சமாதனமாக வேண்டும்.
*குர்ஆன் 8:61*

அப்பாவிகளை பலவீனர்களை காப்பாற்றவே போர் செய்ய வேண்டும்.
*குர்ஆன் 4:75*

..  பூமியில் குழப்பம் செய்ய, விவசாயத்தை அழிக்க கூடாது..
*குர்ஆன் 2:205*

.. நல்ல வழியில் அநாதைகளுக்கு குடும்பத்திற்க  வழிப்போக்கர்களுக்கு தர்மம் செய.
*குர்ஆன் 2:215*

.. மதுபானம் சூதாட்டம் கூடாது.
*குர்ஆன் 5:90*

.. அநாதைகளை சீர்திருத்தி பராமரிக்க வேண்டும்.
*குர்ஆன் 2:220*

...மாதவிடாய் காலத்தில் உடலுறவு செய்ய கூடாது.
*குர்ஆன் 2:222*

... தர்மத்தை தனக்கு தரும் கடனாக இறைவன் பார்க்கிறான். அக்கடனை திருப்பி கொடுத்துவிடுவான்.
*குர்ஆன் 2:245*

.. . மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை. 
*குர்ஆன் 2:256 10:99 18:29*

,... தர்மம் செய்து விட்டு சொல்லிக்காட்ட கூடாது.
*குர்ஆன் 2:262-264*

.. நல்லதையே தர்மம் செய்ய வேண்டும்..
*குர்ஆன் 2:267*

... தேவையுள்ளவர்களை கண்டுபிடித்து உதவ வேண்டும்.
*குர்ஆன் 2:273*

....வட்டி வாங்க கூடாது.
*குர்ஆன் 2:275-276,279*

... கடன் வாங்கியவருக்கு திருப்பி தர முடியாவிட்டால், அவருக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கும்வரை அவகாசம் கொடுக்க வேண்டும்.
*குர்ஆன் 2:280*

....கடன்  கொடுக்கல் வாங்கல்களை எழுதி கொள்ள வேண்டும். அதற்காக நல்ல சாட்சியாளர்களை வைத்து கொள்ள வேண்டும்.
எழுத முடியாவிட்டால், அடைமானங்களை வைத்து செய்ய வேண்டும்.
*குர்ஆன் 2:281-282*

... .நன்மையானவற்றை ஏவி தீயதை தடு.
*குர்ஆன் 3;104,110,114*

..கோபத்தை அடக்கிகொள்.  மனிதர்களை மன்னித்து விடு.
*குர்ஆன் 3:134*

.. தவறு என்று அறிந்த பின் அதில் தொடர்ந்து இருக்காதே.
*குர்ஆன் 3:135*

... மற்றவர்களுடன் மென்மையாக நடந்து,சொல்லில் கடுமையாக இல்லாமலும், மற்றவர்களுடன் ஆலோசனை செய்பவராக இருக்க வேண்டும்.
*குர்ஆன் 3:159*

... கஞ்சத்தனம் கூடாது.
*குர்ஆன் 3:180*

.. மற்றவர்களின் நோவினை செய்யும் வார்த்தைகளை கேட்டாலும், பொறுமையாக இரு.
*குர்ஆன் 3:186*

...வானங்கள் பூமியின் படைப்புகளை சிந்தித்து பார்க்க வேண்டும்.
*குர்ஆன் 3:190-191*

.. நற்கூலி வழங்கப்படுவதில் ஆண் பெண் பாரபட்சம் இல்லை.
*குர்ஆன் 3:195 4:124 16:97 40:40*

....இறந்தவர் விட்டு செல்லும் சொத்தில் பெண்ணுக்கும் பங்கு உண்டு.
*குர்ஆன் 4:7*

... சொத்து பிரிக்கும் போது அவ்விடத்திற்கு,  அநாதையோ, ஏழையோ வந்தால்  அவர்களுக்கும் ஏதாவது கொடுத்து, அன்பான வார்த்தைகளை அவர்களுக்கு கூற வேண்டும்.
*குர்ஆன் 4:8*

... அநாதைகளின் சொத்துக்களை  , அவர்களை பராமரிப்பதாக கூறி சாப்பிட கூடாது..
*குர்ஆன் 4:6,10*

... பெண்களை வற்புருத்தி திருமணம் முடிக்க கூடாது.

மனைவிகளுடன் அழகான முறையில் நடந்து கொள்ள வேண்டும்.
அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் விசயத்திலும் அநேக நன்மைகள் இருக்கும்.
*குர்ஆன் 4:19*

.... திருமணம் முடிக்க, பெண்ணுக்கு மனக்கொடையை ஆண் கொடுக்க வேண்டும்.
அவளை விவாகரத்து செய்யும்போது, ஒரு பொற்குவியலை கொடுத்திருந்தாலும் திருப்பி கேட்க கூடாது.
*குர்ஆன் 4:4,20*

..நெருங்கிய இரத்த உறவுகளை, திருமணம் முடிக்க கூடாது.
*குர்ஆன் 4:22-23*

,.. மற்றவர்களின் சொத்தை அநியாயமாக உண்ண கூடாது.
தங்களை தாங்களே அழித்து கொள்ள கூடாது.
*குர்ஆன் 4:29*

.... ஆண்களே பெண்களுக்கு செலவழிக்க வேண்டும்.
*குர்ஆன் 4:34*

... பெற்றோருக்கு,உறவினர், அநாதைகளுக்கு, ஏழைகளுக்கு, உறவினரான அயலவர், உறவினரல்லாத அயலவர், நண்பர்கள், வழிப்போக்கர்கள், அடிமைகளுக்கு உபகாரம் செய்ய வேண்டும்.
*குர்ஆன் 4:35*

....  மனிதர்களுக்கு தீர்ப்பு கூறினால் நீதமாக தீர்ப்பளிக்க வேண்டும்.  ஒப்படைக்கப்பட்டவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
*குர்ஆன் 4:58*

....அப்பாவிகளை பாதுகாக்கவே போர்.
*குர்ஆன் 4:75*

..நன்மையானவற்றிற்காக பரிந்துரைத்தால், அந்நன்மையில் அவருக்கும் பங்கு உண்டு.. 
*குர்ஆன் 4:85*

...உங்களை எதிர்த்து போரிட இயலாத எதிரிகளை ஒன்றும் செய்ய கூடாது.
*குர்ஆன் 4:90*

.. மோசடி காரர்களுக்காக வாதாட கூடாது.
*குர்ஆன் 4:107*

.. பாதிக்கப்படுவது நீங்களாக, உங்கள் உறவினராக இருந்தாலும் நீதியை நிலை நிறுத்தியே சாட்சி சொல்ல வேண்டும்.
*குர்ஆன் 4:135*

..நன்மையில் ஒருவருக்கொருவர் உதவி செய்யவேண்டும்.
பாவத்திலும், பகைமையிலும் ஒருவருக்கொருவர் உதவி செய்ய கூடாது.
*குர்ஆன் 5:2*

 .. ஒரு உயிரை நியாயமின்றி,கொலை செய்தால் அவர் முழு மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்.
ஒரு உயிரை வாழ வைத்தால், அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார்.
*குர்ஆன் 5:32*

முஸ்லிம் அரசாங்கத்தின் கீழ் வாழும் ஒரு முஸ்லிமல்லாதவரை அநியாயமாக கொலை செய்பவர் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகர முடியாது.
*(புஹாரி)*

... கெட்டவை அதிகமாக இருந்தாலும் , நல்லவையும் கெட்டவையும் சமமல்ல..
*குர்ஆன் 5:100*

. .. மாற்று மதத்தவர்களால் கடவுளென நம்பப்படுபவர்களை ஏச கூடாது.
*குர்ஆன் 6:108*

.. பெரும்பாண்மையை  வைத்து எதையும் நல்லது என்று தீர்மானிக்க கூடாது
*குர்ஆன் 6:116*

..   தம் குழந்தைகளை  வறுமைக்கு பயந்து கொல்ல கூடாது. 
மானக்கேடானதில் இரகசியமானவற்றையோ, வெளிப்படையானவற்றையோ நெருங்க கூடாது.

எந்த உயிரையும் உரிமையின்றி கொல்ல கூடாது.
*குர்ஆன் 6:151*

.. அளவை நிறுவையில் நேர்மையாக இரு..
பாதிக்கபடுவது உறவினராக இருந்தாலும் நீதத்தையே கூறு.
*குர்ஆன் 6:152*

.. ஒருவரின் பாவச்சுமைகளை மற்றவர் சுமக்க முடியாது.
*குர்ஆன் 6:164*

..இறைவனை பிரார்த்தனை செய்யும்போது, பணிவாகவும் இரகசியமாகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
*குர்ஆ,,,,,

.. அளவை நிறுவையில் மோசடி கூடாது.
*குர்ஆன் 7:85*

 ..  மன்னிப்பதை கைக்கொண்டு, நன்மையை ஏவி, அறிவிலிகளை புறக்கணித்து விடு.
*குர்ஆன் 7:199*

 ..  பெற்றோருக்கு நன்றி செலுத்த வேண்டும்.

மார்க்க விசயத்திலே மட்டுமே கட்டுபட கூடாது.

அவர்கள் முதுமையை அடைந்தால், அவர்களுக்கு 'சீ' என்று கூட கண்ணிய குறைவாக பேச கூடாது.

அவர்களை விரட்டிவிட கூடாது.

அவர்களுடன் பணிவாக இரக்கமாக நடக்க வேண்டும்.
*குர்ஆன் 17:23-24 31:14-15* 

இறைவனுக்கு நன்றி செலுத்து என்பதுடன் இணைத்து பெற்றோருக்கும் நன்றி செலுத்து என்று கூறுகிறது.
*குர்ஆன் 31:14*

 .. வீண் விரயம் செய்ய கூடாது. கஞ்சத்தனம் கூடாது.
*குர்ஆன் 17:27-29*

...விபச்சாரத்தின் பக்கம் நெருங்கவும் கூடாது.
*குர்ஆன் 17:32*

...கர்வம் கொண்டு நடக்க கூடாது. பணிவாக நடக்க வேண்டும்.
*குர்ஆன் 17:37 31:18 25:63*

....பேசினால் நல்லதையே பேச வேண்டும்.
*குர்ஆன் 17:53*

 .. பார்வையை தாழ்த்தி கற்பை பாதுகாத்துக்கொள்.
*குர்ஆன் 24:30-31*

.. பொய் சாட்சி சொல்ல கூடாது.
வீணான காரியங்களில் ஈடுபடாதே.
*குர்ஆன் 25:72*

...  மற்ற மனிதர்களிடமிருந்து முகத்தை திருப்பிக்கொள்ளாதே!  கர்வமாக நடக்காதே!
சத்தத்தை தாழ்த்திக்கொள்!
*குர்ஆன் 31:18-19*

..  மற்றவரை கேலி செய்யாதே!
கெட்ட பெயர் வைத்து கூப்பிடாதே!
புறம் பேசாதே!
துருவி துருவி மற்றவனை குறை தேடாதே!
*குர்ஆன் 49:11-12*

... மனிதர்கள் அனைவரும் ஒரே பெற்றோரின் பிள்ளைகளே! 
எவருக்கும் எவரை விடவும் சிறப்பு இல்லை!
கோத்திரங்கள், கிளைகளை ஆக்கியது அறிமுகமாகிக்கொள்வதற்காகவே!
உங்களில் சிறந்தவர் பயபக்தி உடையவரே!
*குர்ஆன் 49:13*

.... உங்களுடன் மார்க்க விசயத்தில் போரிடாத, வீட்டிலிருந்து வெளியேற்றாத மாற்று மதத்தவர்களுக்கு நன்மை செய்.
*குர்ஆன் 60:8.*

....ஏழைகளுக்கு உணவளி, உணவளிக்க மற்றவர்களை தூண்டு!
இதை செய்யாதவர்களுக்கு கேடு.. நரகமே தங்குமிடம்.
*குர்ஆன் 74:42-44 107:1-3*

சுவர்க்கம் போக இது முக்கிய காரணம்.
*குர்ஆன் 76:8-12*

. .. குறை கூறி புறம் பேசி திரியாதே!
*குர்ஆன் 104:1*
அநாதைகளை ஒடுக்காதே! 
யாசிப்போரை விரட்டாதே!
*குர்ஆன் 93:9-10*

பசித்தோருக்கு உணவளி.
*குர்ஆன் 90:13-16*
🌹🌹NOUMAN ALI KHAN QUOTES. 

GREAT  REMINDERS TO USE IN LIFE

🔵🔴🔵When someone isn’t smart enough to express their frustration, they use dirty words. *Dirty words describe  lack of intelligence*. *Smart people don’t use dirty words, because they find it an insult to their intelligence*.
-Nouman Ali Khan

🔴🔵🔴“When you see someone who is not as religious as you, remember that you were once on the edge of the fire and it was ALLAH Subhaana wa Ta’ala’s favour upon you to guide you. *Arrogance will wipe away any goodness from transformation*.”
-Nouman Ali Khan

🔵🔴🔵 *“When you find yourself in a position to help someone, be happy because ALLAH is answering that person’s prayer through you*.”
-Nouman Ali Khan

🔴🔵🔴 *“You can’t change someone’s behaviour, all you can do is remind them, pray for them and believe ALLAH can and will change their heart.”*
-Nouman Ali Khan

🔵🔴🔵 *“When you are going through hardship and you start wondering where ALLAH is, just remember the Teacher is always quiet during a test.*”
-Nouman Ali Khan

🔴🔵🔴 *“Your sin is not greater than the mercy of ALLAH*.”
-Nouman Ali Khan

🔵🔴🔵“If we were truly the people of *“Alhamdullilah”* we wouldn’t find the time, energy, or motivation to complain.”
-Nouman Ali Khan

🔴🔵🔴 *“We live in a society where we wake up our children for school but not Fajr.*”
-Nouman Ali Khan

🔵🔴🔵 *“Just because you are a Believer, it doesn’t mean you are safe from the Hell-fire*.”
-Nouman Ali Khan

🔴🔵🔴 *“The worst expression of the Prophet (Sallallahu ‘Alayhi Wa Sallam) anger towards his wife was that he would remain silent.*”
-Nouman Ali Khan

🔵🔴🔵 *“Islam is not about “we are better than you”. Rather it is about “let me show you something that is better for you*”
-Nouman Ali Khan

🔴🔵🔴“People can put you down in life  and they will *but ALLAH will never abandon you, so long as you don’t*.”
-Nouman Ali Khan

🔵🔴🔵 *“The hypocrite takes good advice as an insult*.”
-Nouman Ali Khan

🔴🔵🔴“ *ALLAH says Jannah is awesome, IMAGINE how awesome that is, when the All-Knowing Almighty is calling it awesome*”
-Nouman Ali Khan

🔵🔴🔵 *“If someone corrects you, and you feel offended, then YOU have an EGO problem*”
-Nouman Ali Khan.

♥ *Yaa Rabb !!!Grant us Guidance ,Wisdom and Understanding of our Deen*

Wednesday, October 18, 2017



1            நீ பிறருக்கு உதவும் போதெல்லாம் அல்லாஹ் உனக்கு உதவிக் கொண்டே இருப்பான்.

2.            எனது கஷ்டங்களை அல்லாஹ் மட்டுமே அறிவான். நான் துன்பத்திலும் சிரிக்கிறேன், இன்பத்திலும் அழுகிறேன். அதைப்பற்றி உலகம் அறியாது. அல்லாஹ் மட்டுமே அறிவான்.

3.            நீ விரும்புபவற்றை அல்லாஹ்  உனக்கு தர மாட்டான், உனக்ககு தேவையானவற்றையே அல்லாஹ் உனக்குத் தருவான்.

4.            உன்னை வெறுப்பவற்றிலிருந்து நீ தூரமாக இருப்பதில் உறுதியாக இரு, உனக்காக அருளப்பட்டவற்றுக்காக நம்பிக்கையோடு காத்திரு.

5.            வெற்றி என்பது அல்லாஹ்விடமிருந்து மாத்திரமே கிடைக்கக் கூடியது. பிறரின் வெற்றியில் பொறாமை கொள்ளாதே.

6.            உன்னால் திரும்பிச் சென்று இறந்த காலத்தை மாற்ற முடியாது. உனது எதிர்காலத்தைப் பார். ஒரு முறை செய்த தவறை மீண்டும் செய்து விடாதே.

7.            நண்பண் துன்பத்தில் இருக்கும் போது உன்னால் கொடுக்க முடியுமான மிகப் பெரிய உதவி உனது பங்கேற்பே.!

8.            உன்னைக் கவர்ந்தவற்றை விட உனக்குத் தேவையானவற்றில் அதிகம் கவனம் செலுத்து. வெற்றி உன்னைத் தேடி வரும்.

9.            உனக்கு எது சிறந்தது என்பதை அல்லாஹ் அறிந்தவன். கிடைக்காதவற்றை நினைத்து ஒரு போதும் அல்லாஹ்வின் அருளில் அதிருப்தி அடைந்த விடாதே.

10.         உன்னைச் சுற்றி அவர்கள் இல்லாத போதும் அவர்களைக் கொண்டு உன்னைச் சந்தோசமாக வைக்கும் உறவுகள் கிடைப்பதும் உண்மையில் ஓர் அருட்கொடை தான்.
.
💎❄💎❄💎❄💎❄💎❄

Sunday, October 15, 2017

யா  அல்லாஹ் ...!

நபி  மூஸாவை  காக்க கடலை பிளந்தவனே..!

தொட்டிலில்  குழந்தையாக  இருந்த  ஈஸா  நபியை  பேச  வைத்தவனே....!

மீனின்  வயிற்றில்  இருந்த  யூனுஸ் நபியை உன் சக்தியால் காப்பாற்றியவனே...!

கடும் சோதனைக்கு  உட்படுத்தப்பட்ட  அய்யூப் நபியை உன் கருணையினால் குணப்படுத்தியவனே...!

என் இரட்சகன..!

மகத்தான  உன்னுடைய பெயரால் கேட்கிறன்..!

துக்கம் , கவலை , நெருக்கடி , வியாதி , இவை அனைத்தையும் விட்டு என்னை காப்பாற்றுவாயாக...!

நான் துக்கத்தில் ஆழ்ந்தால் என்னை மகிழ்ச்சியுடையவனாக ஆக்குவாயாக..!

எனக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால் உன்னை அல்லாமல் மற்றவரிடம் என்னை தள்ளி விடாதே..!

நிச்சயமாக  நீ என்னால் தாங்க முடியாத கஷ்டத்தை கொடுக்க மாட்டாய்...!

என்னை படைத்தவனே.!

என் வாழ்க்கையை  உனது கரத்தில் வைத்திருப்பவனே..!

என்னுடைய நற்பாக்கியமும் , துர்பாக்கியமும் உன் கையில் இருக்கின்றன..!

ஏக இறைவா..!

என்னுடைய  உள்ளத்தை மகிழ்ச்சி  உடையதாக ஆக்குவாயாக.! 

இவ்வுலகமே  எனக்கு  ஒன்று சேர்த்து நன்மை செய்ய நாடினாலும் எனக்கென்று  நீ  எழுதி வைத்ததை  தவிர எந்த நன்மையையும் எனக்கு கிடைக்காது என்று நான் ஈமான் கொண்டுள்ளேன்...!

உலகமெல்லாம் ஒன்று சேர்ந்து எனக்கு துன்பம் இழைக்க முயற்சித்தாலும் எனக்கு எதிராக நீ எழுதிய துன்பம் மட்டுமே என்னை அடையும் என்பதை நான் நம்புகிறேன்....!

ஏக இறைவா..!

என்  உள்ளத்தில்  நிறைய  தேவைகள்  இருக்கின்றன.!

உன்னையல்லாமல்  வேறு யாரிடமும் அதை சொல்ல முடியாது.. என்னுடைய  ரகசியங்களும் என் ஆழ் மனதில் புதைந்து உள்ளவை களையும் நீமட்டுமே அறிவாய்..! 

என்னைப் பற்றி  யார் தவறாக நினைத்தாலும் , என்னை ஒதுக்கி வைத்தாலும் எனக்கு கவலை இல்லை.. என்னைப் பற்றி என் ரப்பூ நீ  அறிவாய் அது போதும்....! 

" குன் " ஆகுக  என்று சொன்னால்  அனைத்தும் ஆகிவிடும் என்று சொன்னவனே ....! 

என்னுடைய விருப்பங்களை  நோக்கி  ( குன் ) "ஆகிவிடு" என்று  சொல்வாயாக...! 

நீ  என்னுடன்  இருப்பதால் எனக்கு யாரிடமும் எந்த தேவையும் இல்லை..!

எனக்கு நீ  வழி  காட்டு  ,
என்னுடைய காரியங்களை  நீ  திட்டமிட்டு  நிறைவேற்று..!

நான்  தவறான  வழியில்  செல்லும் போது  என்னை நேரான வழியில்  திருப்பி விடு...! 

வாழ்கின்ற  காலமெல்லாம் உனக்கு  கட்டுப்பட்டவனாக  வாழ்ந்து  மரணிக்கின்ற  பொழுதும்  உனக்கு  கட்டுப்பட்டவனாக  மரணிக்கின்ற  பாக்கியத்தை  தந்தருள்வாயாக...! 

யா  அல்லாஹ்..!

எங்கள்  பாவங்களை  மன்னித்து விடு..! 

யா அல்லாஹ்..!

நாங்கள்  செய்த  தவறுகளை  மன்னித்து விடு..!

யா அல்லாஹ்..!

கப்ருடைய வேதனையிலிருந்து  நரக  நெருப்பிலிருந்தும் எங்களை  பாதுகாப்பாயாக..!

யா  அல்லாஹ்..!

இம்மையிலும்

மறுமையிலும் 

வெற்றியை
தருவாயாக..!

இறைவா..!

சிறிய  பெரிய  எல்லா  நோய்களை விட்டு எங்களை  வாழச்செய்வாயாக..!

இறைவா..!

இறையச்சத்தையும்  பேணுதலையும்  எங்களுக்கு  தந்தருள்வாயாக..! 

இறைவா...!

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள்  விரும்பிய  வழி  முறையில்  எங்களை  வாழச்செய்வாயாக..! 

இறைவா..!

பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின்  சுன்னத்தான  வழிமுறையில்  எங்களை  வாழ  வைப்பாயாக...!

இறைவா..!

மறுமை  நாளில்  பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்  பரிந்துரையை எங்களுக்கு  அருள்வாயாத...!

இறைவா..!

உன்னுடைய  பிரியத்தையும்  எங்களுடைய  உள்ளங்களில்  நிலைத்திருக்கச் செய்வாயாக..!

இறைவா..!

மரண  வேதனை , மண்ணரை வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக..!

இறைவா..!

முன்கர் நக்கீர் உடைய கேள்வி கணக்கை எங்களுக்கு  லேசாக்கி  வைப்பாயாக...!

இறைவா..!

கியாமத்  நாளில்  உன்னை  தரிசிக்க  கூடிய  பாக்கியத்தை  எங்களுக்கு  தந்தருள்வாயாக...!

இறைவா...!

ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சுவர்க்கத்தில் எங்களை நுழைய செய்வாயாக..!

இறைவா..!

கியாமத்  நாளில்  வெப்பத்தை  விட்டும்  , நரக  நெருப்பை விட்டும்  எங்களை  காப்பாற்றுவாயாக...!

இறைவா..!

கியாமத்  நாளில்  இழிவுகளை  விட்டும்  எங்களை  மூஃமீனான  ஆண் , பெண்  அனைவரையும் காப்பாற்றுவாயாக...!

இறைவா..!

எங்களின்  அமல்களின்  பட்டோலையை  எங்களுடைய  வலது  கையில்  கொடுப்பாயாக...!

இறைவா...!

கியாமத்  நாளில்  உன்னுடைய  அர்ஷின்  நிழலில்  எங்களுக்கு  இடமளிப்பாயாக....!

இறைவா...!

ஸிராத்துல்  முஸ்தகீம்  பாலத்தை  மின்னல்  வேகத்தில்  கடக்கச் செய்வாயாக....!

இறைவா..!

உன்னுடைய  அருளை  கொண்டு  எங்களுடைய  அனைத்து  பாவத்தையும்  மன்னித்து  எங்களை  சொர்க்கத்தில்  நுழைய  செய்வாயாக....!

ஆமீன்  ஆமீன்  யா ரப்பல்  ஆலமீன்.....!