Saturday, April 27, 2019

இஸ்லாமியப் பெண்களும் இன்றைய அபாயாவும். 
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

இஸ்லாமிய அபாயா என்பது முஸ்லிம் பெண்களின் கண்ணியத்தைக் காப்பது மட்டுமல்லாது அவர்களின் ஆன்மாவுக்கும் சிறந்த பயிற்சி அளிக்கும் ஒரு உன்னதமான ஆடை என்பது யாவரும் அறிந்த விடயம்.

ஆனால் இன்றைய பெண்கள் அணியும் அபாயாக்களோ, சுபஹானல்லாஹ் அதன் நோக்கங்களையெல்லாம் நொறுக்கித் தள்ளி தவிடுபொடியாக்கி விடுகின்றது என்பதை நினைக்குமபோது கண்ணிருந்தும் குருடியாய், காதிருந்தும் செவிடியாய் வாயிருந்தும் ஊமையாய் கையாலாகாமல் நானும் ஒருத்தியாய். 

நேற்றைய தினம் மகனுக்கு ஊசிபோட எம்.ஓ.எச். ற்குச் சென்றிருந்தேன். அநியாயத்திற்கு குற்றம் சொல்லக்கூடாது அத்தனை பேரும் அபாயாவில் ஆனாலும் வேதனை அது என்னதான் ஆடை என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. 

முன்னெல்லாம் நைட்டிக்கும் உள்பாவாடைக்கும் மட்டும் பிரயோகிக்கப்பட்ட வெலோனா என்று சொல்லப்படும் ஒரு இறப்பர் துணி அது. அப்போதெல்லாம் அந்த உள்பாவாடை தெரியாமலும் இரவு நேரத்திற்கு மட்டும் போடப்படும் நைட்டியாகவும் மட்டுமே பெண்கள் உபயோகித்த அந்த துணியில் அவர்கள் அணிந்திருந்த அபாயா. 

அக்கு வேரு ஆணி வேரு, அத்தனையும் அப்பட்டமாய் ஆடை அணிந்தும் நிர்வாணமாய் ஜாஹிலியத்தை உயிர்ப்பிக்கும் அந்த பெண்களின் ஆடைகள் அவர்களுக்குத்தான் விளங்கவில்லை. அவர்களின் மேய்ப்பாளர்கள் எங்கே. இதுகுறித்து விசாரிக்கப்படும் அந்த நாளை மறந்துவிட்டார்களா ? இல்லை அறிந்தும் அறியாமலும் அலட்சியமாய் இருக்கின்றார்களா? அல்லாஹ் அஹ்லம். 

மறைக்கப்பட வேண்டிய அங்கங்கள் எதும் மறைக்கப்படவில்லை. உருண்டு திரண்டு ஒவ்வொரு அங்கமும் அப்படியே யாரப்பு சொல்லவே வெட்கமாய் இருக்கு. தச்சிட்டு போட்டாங்களா இல்ல போட்டுட்டு தச்சாங்களா எனக்கென்றால் தெரியவில்லை. 

இதைவிட ஒரு இந்தியன் கொட்டுன் சல்வார அழகா உடுத்து சோல சுத்தி போட்டுட்டு வந்திருக்கலாமே என்று எண்ணத் தோன்றியது. 

எது எப்படியோ ? இதை வாசிக்கும் இந்த இரண்டாயிரம் நண்பர்களும் குறிப்பிட்ட சில பெண்களுக்கு பொறுப்புதாரியாக இருப்பீர்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.  

அல்லாஹ்வின் அருள்கொண்டு கொஞ்சம் சீர்தூக்கிப் பாருங்கள். ஒரு பெண்ணாக இருந்தும் என் கண்களை உறுத்தும் இந்தக் காட்சிகைளை எத்தனை ஆண்கள் இரசித்துப் பார்த்திருப்பார்கள். கொஞ்சமாவது யோசித்துப் பாருங்கள். 

அந்தக் காலத்து பெண்கள் கணவனுக்கு மத்தியிலும் அந்த வெலோனா நைட்டியை உடுக்க மறுத்திருக்கின்றார்கள். இவர்கள் அதை பொதுவெளியில் உடுத்துட்டுத் திரிகின்றார்கள். என்ன ஒரு அலங்கோலம் நீங்கள்தான் சிந்திக்கணும். 

நல்லது நடக்கட்டும். இன்ஷா அல்லாஹ் !

No comments:

Post a Comment