Saturday, April 27, 2019

#பிணவறையில்_நண்பனுடன்...!!!

அந்த நண்பருடன் சேர்ந்து பிணவறை (Mortuary) க்குள் சென்றேன்!

துர்நாற்றங்களில் கொடியது மனிதன் இறந்த பின் அவனிடம் இருந்து வருவது தான், என்னிடம் கேட்டால் இந்த உலகத்திலுள்ள எந்த நாற்றத்தையும் அதற்கு ஒப்பாக்க முடியாது ,

அந்த பிணவறைக்குள் மனிதனும் அவன் உயிருடன் வாழும் பொழுது உபயோகித்த வாசணை திரவியங்களும் எங்கே என்று தேடினேன் காணவில்லை...

என் நண்பரின் நெருங்கிய நண்பர் தான் பிணங்களை கூறுபோடுபவர். அவர் ஒரு முஸ்லிம், படிப்பினைக்காக உலகில் எத்தணையோ பிரபலமான, அதிவிஷேடமான இடங்களுக்கு பணம் செலவழித்து சென்றிருப்போம் . என்னை கேட்டால் இந்த உலகத்தின் ஒட்டுமொத்த படிப்பினையும் அடங்கிய ஒரே இடம் பிணவறை தான் என்றால் மிகையாகாது .

முதல் சடலமாக ஒரு சகோதரன் தான் இருந்தான். வாய்த் தகராரில் கத்தியால் குற்றப்பட்டிருந்தான். அதை பரிசோதிக்க அவனின் சடலம் அங்கு வைக்கப்பட்டிருந்தது, மார்புப்பகுதியில் இருந்து அடி வைரு வரை பிளந்து உள் இருக்கும் அனைத்து குடல்கள், இரைப்பை போன்றவற்றை வெளியே எடுத்தார்கள், பின் அவரின் கழுத்திலிருந்து முகத்தை முழுதுமாக உரித்து அதை தூக்கி அவரின் தாடியுடன் வேறாக வெட்டி வைத்து பின் மரணத்திற்கான காரணம் கிடைத்த பின் பழைய வாரே தைத்துவிட்டார் .

இன்னும் சுற்றி பார்த்தால் , வாலிபர்கள் , வாலிப பெண்கள் எல்லாம் இதே நிலமைகளில் கிடக்கிறார்கள் ...

அந்த இடத்தில் என் சிந்தனை , நாம் வாழும் காலத்தில் எவ்வளாே பெருமை, ஏழைகளை ஒரு கண்ணுடனும் செல்வந்தணை வேறு கண்ணுடனும் பார்த்தோம் இப்போ எங்கே அந்த கண்கள் , விபச்சாரம் புரிந்த மர்மஸ்தானங்கள் எங்கே? சுபஹானல்லாஹ் எம்மை வெறும் தோலை கொண்டு அழகாக படைத்த அந்த அல்லாஹ்விற்கே எல்லா புகழும் . உரித்து போட்டு பார்த்தால் வெறுமனே எலும்பும் தோலும் தான்,

இப்போது அவள் மீது காதல் வருமா?

மோகம் வருமா?

நிச்சயமாக இல்லை. அழகு என்பது அவ்வளவு தான் .

"நிச்சயமக மனிதன் பலயீனமானவன்" அல் குர்ஆன்

ஆயிரம் வகை கிரீம்களும் இறுக்கமான ஆடைகளும் அந்த அழகுதான் மண்ணறைக்கான உணவு சுப்ஹானல்லாஹ் .

வாலிபம் எனும் துடிப்பான பருவத்தை உலகம் இன்பமாய் கவர்ச்சிப்படுத்தும் #மது #கஞ்சா #சிகரெட் என அனுபவித்து உடம்பையும் உயிரையும் நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள் எமது இள ரத்தங்கள். இதனால் எத்தனையோ நல்ல குடும்பங்கள் சின்னாபின்னமாகி தலை குனிந்த நிலையில் உள்ளார்கள். ஒரு சில நிமிட இன்பத்திற்காக தமது வாழ்க்கையின் பெருமதியான இள வயது ஷைத்தானுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

கூறுபோடப்படாத மரணம் தேவை நிம்மதியாக ரூஹ் பிரியவேண்டும் , எம் மரணம் தொழுகையிலாே , அமல்களிலோ அமைந்திருக்க வேண்டுமே தவிர காதலர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போதோ, படம் பார்த்துகொண்டிருக்கும் போதோ, போதையில் ஷைத்தானை வழிப்பட்டுக் கொண்டிருக்கும் போதோ அல்ல ...

கலிமா அந்த நாவால் மொழியப்படவேண்டுமானால் மரணம் பற்றிய சிந்தனையும் இறை அச்சமும் எம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடம் நினைவுபடுத்தப்பட வேண்டியது அவசியம் ...

அமல்களை அதிகப்படுத்தி , மரணத்திற்கு தயாராகுவோம் அதுவே நிச்சயமாக எமக்களிக்கப்பட்ட வாக்குறுதி .

"குல்லு நப்ஸின் தாயிக்கத்துல் மெளத்"

"ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும் " 
(அல் குர்ஆன்)

அடுத்தவர்களை குறைகாணாமல் இந்த நொடியிலிருந்தே #நான் #மாறவேண்டும் என்று நினைத்து செயற்படுங்கள்.

அல்லாஹ் என்னையும் உங்களையும் பொருந்திக் கொள்வானாக..!!!

படித்தது 
பாடமாக இருக்கட்டும்
மாறுவது 
இறைவனுக்காக இருக்கட்டும்.....

நண்பனின் மூக நூலில்  இருந்து

No comments:

Post a Comment