(வலி எனும் அருட்கொடை)
Dr. AAYIL AL KARNI யின்
*கவலைப்படாதே* எனும்
நூலிலிருந்து சில துளிகள்.
2017.05.31
..............................................
சில சூழ்நிலைகளில் காயங்கள் மனிதனுக்கு நன்மை விளைவிக்கும்.
மனம் வலிக்கும் போதுதான் மனிதன் உருக்கமாகப் பிரார்த்திக்கிறான்.
கவலைப்படும் போது தான் இறைவனை
உளப்பூர்வமாகத் துதிக்கிறான்.
படிக்கும் காலத்தில் சோதனைகள் அவனைத் திணறடிக்கலாம்....முடிவில் அவன் அறிஞர் ஆகிறான்.
கவிஞனின் வலி சிறந்த இலக்கியத்தைத் தரும்.
மகிழ்ச்சியை மட்டுமே அனுபவித்து உலாவரும் மாணவன் சோம்பேறியாகவே இருப்பான்.
(உதாரணங்களை கண் முன் கொண்டு வாருங்கள்)
உறுதியான நம்பிக்கை, தூய்மையான உள்ளம், உண்மையான நாவு, ஆழமான அறிவு ஆகியவற்றின் இலக்கணமான நபித்தோழர்கள் கூட பல இன்னல்களை சந்தித்தார்கள்.
"ஏனெனில் இறைவனுடைய பாதையில் அவர்களுக்கு தாகம், பசி, சிரமம் ஆகியவை ஏற்பட்டாலும் நிராகரிப்பாளர்களுக்கு கோபமூட்டும் இடத்தில் கால் வைத்து அதனால் எதிரியிடமிருந்து ஒரு துன்பம் நேர்ந்தாலும் அவர்களுடைய நன்மையாகவே பதிவு செய்யப்படுகின்றன. (9:120)
சாதனேயாளர்கள் பலரும் வாழ்வில் அடிபட்டு எழுந்தவர்கள் தான்.
வெந்துகொண்டிருக்கும் சொற்பொழிவாளனின் மனதிலிருந்து தெறிக்கும் வார்த்தைகள் கேட்பவரது இதயத்தின் ஆழம் வரை ஊடுருவிச் செல்லும்...ஏனெனில் அவன் காயங்களின் மேல் வாழ்கிறான்.
பல சந்தர்ப்பங்களில், நண்பர்களிடமும் சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள், மனக்கசப்புகள் வந்து வலியுணர்ந்து செல்லும் போது தான் புரிந்துணர்வு அதிகரக்கும்.
எனவே துன்பம், வலி நிறைந்த வாழ்க்கை எம்மைப் பதப்படுத்தவே வருகிறது என்பதை உணர்ந்து கொள்வோம்.
அதை அனுபவிக்க எங்களுக்கும் ஒரு சந்தர்ப்பத்தை தருகிறான் என்றால் கட்டாயமாக ரப்புக்கு நன்றி செலுத்தியே ஆகவேண்டும்.
No comments:
Post a Comment