Thursday, June 27, 2019

தரம் 8 மாணவர்களுக்கான இரண்டாம் தவணை பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்கள் ( முக்கிய வினாத்தாள்கள் மட்டும்)
© : Tamil Kuruji [ www.facebook.com/tamilkurukkal ] 

வினாத்தாள் PDF வடிவில் மட்டுமே தர இறக்கம் செய்யலாம்.

தமிழ்
https://drive.google.com/file/d/1nLL0CdLeGutOljtvRN5pGWOqCHrAxPtT/view?usp=drivesdk

கணிதம்
https://drive.google.com/file/d/1pPxaaCOwVtc0q-Gk90t4W6GKLV3I8ZWu/view?usp=drivesdk

விஞ்ஞானம் 
https://drive.google.com/file/d/1CJjM2bUszC9m-L4VhwQwwJrwvE3l1ITK/view?usp=drivesdk

ஆங்கிலம்
https://drive.google.com/file/d/1cZVuC0PbedREtEMSErS4DLRn_qKr83_s/view?usp=drivesdk

சித்திரம்
https://drive.google.com/file/d/1nLHZN5bhVQjn1v_vwNNwJGXMrzqbf2Kf/view?usp=drivesdk

புவியியல் 
https://drive.google.com/file/d/1tiNLAZaFvpN5rMSbaGEMy3xAevUL5Sb8/view?usp=drivesdk

சுகாதாரம் உடற்கல்வி
https://drive.google.com/file/d/1DAy1M0BQ8-xkPlNL_NY3WpOozAke2V79/view?usp=drivesdk

நடனம்
https://drive.google.com/file/d/1F0tXlC6ey7ab6GIknHQs7ckvChWkBi6e/view?usp=drivesdk

கர்நாடக சங்கீதம்
https://drive.google.com/file/d/1Rhn5QxzUhIUnUN0s0W1XW2Lhy6FHmq2t/view?usp=drivesdk

தகவல் தொடர்பு தொழில்நுட்பம் [ ICT ] 
https://drive.google.com/file/d/1ySkJKka-f_qhs6pwrAlFFh86IJmfQaln/view?usp=drivesdk

செயன்முறை தொழில்நுட்பம் [ PTS ] 
https://drive.google.com/file/d/1-xK9trND2nwGjhrGPgct0LN8GayIMyjb/view?usp=drivesdk

© Tamil Kuruji Web Team [ 27 June 2019 ]
தரம் 7 மாணவர்களுக்கான இரண்டாம் தவணை பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்கள் ( முக்கிய வினாத்தாள்கள் மட்டும்)

வினாத்தாள் PDF வடிவில் மட்டுமே தர இறக்கம் செய்யலாம்.

தமிழ்
https://drive.google.com/file/d/1D3lTvnsgUWiGgVY1o7jYQVtm3dYTCFPX/view?usp=drivesdk

கணிதம்
https://drive.google.com/file/d/17MwinjQyaoXwaYa97jxw5LZrc0A-jtAp/view?usp=drivesdk

விஞ்ஞானம் 
https://drive.google.com/file/d/16zGH8iiq8966UlLJzFKT5dtMFcK8t3K3/view?usp=drivesdk

வரலாறு
https://drive.google.com/file/d/1C5Go1U9nW8QSUX_dQF6_2igxWQILR-Ok/view?usp=drivesdk

ஆங்கிலம்
https://drive.google.com/file/d/13K-S0Qjt8wo9fLQOUKGzp3m1p88_uzFy/view?usp=drivesdk

குடியியல் 
https://drive.google.com/file/d/19_OnEwVMdyfAUtkqfWuqAEP9BmtWA0iR/view?usp=drivesdk

புவியியல் 
https://drive.google.com/file/d/11d1QP7T9pEjjVxkp3R3wrI8fpFmVw4Jj/view?usp=drivesdk

சுகாதாரம் உடற்கல்வி
https://drive.google.com/file/d/1dU8wCWp7JRnGGLUZvhDhEiUV1Etlj_D5/view?usp=drivesdk

கர்நாடக சங்கீதம்
https://drive.google.com/file/d/1SrnxIsFLaPJzP9j_1BqjA-TI0vNWjTsJ/view?usp=drivesdk

சிங்களம்
https://drive.google.com/file/d/1Ej4BRVuOo7AaiqyH_DTWJ3vHqvgcSQms/view?usp=drivesdk     

தகவல் தொடர்பு தொழில்நுட்பம் [ ICT ] 
https://drive.google.com/file/d/1oPU3laXUWcr6cTKZlda2qovTu0biDn5D/view?usp=drivesdk

செயன்முறை தொழில்நுட்பம் [ PTS ] 
https://drive.google.com/file/d/1N_IJNWJ1-YV-cQWfyXHQfY6FtjAWno80/view?usp=drivesdk
[25/06 11:14 PM] Sake Of ALLAH: தரம் 6 மாணவர்களுக்கான இரண்டாம் தவணை பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்கள் ( முக்கிய வினாத்தாள்கள் மட்டும்)

வினாத்தாள் PDF வடிவில் மட்டுமே தர இறக்கம் செய்யலாம்.

தமிழ்
https://drive.google.com/file/d/11EVa2aMsnc3DahXfG6r8sl35DhFBpp_3/view?usp=drivesdk

கணிதம்
https://drive.google.com/file/d/1rj03vy6Ng9GteCOETQpHwQk-a7kM0gQf/view?usp=drivesdk

விஞ்ஞானம் https://drive.google.com/file/d/1bWW4EGnmb7MoRr8fodzm6g-uzjPvZUaK/view?usp=drivesdk

சித்திரம் https://drive.google.com/file/d/1QA0XV0f2V1Dvb_OXF_RudpwSRgPdRi0z/view?usp=drivesdk

வரலாறு
https://drive.google.com/file/d/12yfGK4W681n00ctvBgqgcTKf3t1CvkCt/view?usp=drivesdk

ஆங்கிலம்
https://drive.google.com/file/d/1ECfiP3oLTgKzUnEetk7_Yy3kl_clLsG6/view?usp=drivesdk

குடியியல் https://drive.google.com/file/d/1nK4PlVhf3b8LyhAAwVA2npO0NtEupvDY/view?usp=drivesdk

புவியியல் https://drive.google.com/file/d/1sZoBptHR9patbIwNbjcjMHE_gw7VgaDA/view?usp=drivesdk

நடனம்     
https://drive.google.com/file/d/1w49Zr8c4YRoWIJ6ypL_ijL0y7UgZjlxu/view?usp=drivesdk


[27/06 10:02 PM] Sake Of ALLAH: #தரம்_9
மாணவர்களுக்கான இரண்டாம் தவணை பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்கள்.

வினாத்தாள் PDF வடிவில் மட்டுமே தர இறக்கம் செய்யலாம்.

#தமிழ்
https://drive.google.com/file/d/1-haoMSXPwWj4o6AYRUUaQ2l8oVHqr9J5/view?usp=drivesdk

#கணிதம்
https://drive.google.com/file/d/1-iDLn4YUdHEn3NOz4s2s3hwsc5_Ifsmw/view?usp=drivesdk

#விஞ்ஞானம்
https://drive.google.com/file/d/1089yi7iA5YXWHFHcSwkv5pOiM1QGgQj9/view?usp=drivesdk

#ஆங்கிலம்
https://drive.google.com/file/d/10Ln57KRuyUPHFzjawe4ZjqmOrZfDmWil/view?usp=drivesdk

#வரலாறு
https://drive.google.com/file/d/10SBoF1vFsbPS36phh89yT-TQYrkHH55j/view?usp=drivesdk

#சுகாதாரம்
https://drive.google.com/file/d/10IwGTuJ5Pmd2FVmblYxZD0lEzsHECE3I/view?usp=drivesdk

#சமயம்
https://drive.google.com/file/d/1-m192Pj05TtzA1nuMBsI9pPsRvZ3dKBe/view?usp=drivesdk

#குடியற்கல்வி
https://drive.google.com/file/d/1-zHN1MTIJrjDoFu_ajXzybC_FiZ9oTFe/view?usp=drivesdk

#சிங்களம்
https://drive.google.com/file/d/10TGKKQEPsqOnrwsKfbE6jwRy0G44o3Nm/view?usp=drivesdk

#சங்கீதம்
https://drive.google.com/file/d/10VfalHHtWrvOKY80KW3Fnd-L4UNrayTz/view?usp=drivesdk

#சித்திரம்
https://drive.google.com/file/d/10Y87HO7BXoYGnNx3Uw80YOWeEoHyPSsw/view?usp=drivesdk

#பரதம்
https://drive.google.com/file/d/1-nV7bhf9rYkhoR7KMDFDJ6oRZQEzntxW/view?usp=drivesdk

Wednesday, May 8, 2019

இதை வாசிப்பவர்களின் கவனத்திற்கு...

   நீங்கள் கட்டாயம் வாசிக்க வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமுமில்லை. ஆனால் வாசிப்பதாயிருந்தால் முழுமையாக வாசிப்பது நன்று.

இது கட்டுரையொன்றல்ல. 
எனவே ஒரே மூச்சில் படித்துமுடிப்பதற்கு பதிலாக சற்று நிறுத்தி நிதானித்து வாசித்துச் செல்வது பொருத்தம் என்று நினைக்கிறேன்.

---------------

 இந்த ஆக்கம் என்னதென்றால் நீங்கள்

- தொழில்செய்பவராகவோ
- கல்விக்கூடங்களில் படிப்பவராகவோ
- வீட்டுத் தலைவியாகவோ
- மாணவராகவோ
- ......

   எந்த சூழ்நிலையில் இருந்தாலும் சரி இந்த ரமழானை பயன்படுத்திக் கொள்வதற்கான சிம்பிளான 3 கட்ட படிமுறைகளை காட்டித் தருகிறது.

    இதை நடைமுறைப்படுத்தும் எவருக்கும் நிச்சயம் தம் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் இது நன்மையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறேன். என்றாலும் உத்தரவாதப்படுத்தல்கள் இல்லை. அது உங்கள் கைகளில்! 

    🔴  ரமழானை பயன்படுத்துவதற்கான 
          3 கட்ட படிமுறைகள்.
-----------------------------------------

1. சாதாரணமாக பயன்படுத்தல்.
2. அதிகமாக பயன்படுத்தல்.
3. உச்சகட்டத்தில் பயன்படுத்தல்.

   முழுமையாக படித்துவிட்டு நீங்கள் எந்த படிமுறையில் இந்த ரமழானை பயன்படுத்துவது என்று தீர்மானித்துக் கொள்ளலாம் இன் ஷா அல்லாஹ்.

1 . சாதாரணமாக பயன்படுத்தல்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இந்த படிமுறையில் ரமழானை கழிப்பவர்களுக்கு மற்ற காலங்களை விட ரமழான் சிறப்பாக அமைய பல காரணங்கள் உள்ளன. 

அதில் ஒன்று தான் தான் நபி (ஸல்) அவர்களால் மொழியப்பட்ட, ரமழானுக்கான ஏகப்பட்ட நன்மாராயங்கள். அத்தோடு இறைவன் இந்த ஒரு மாத காலத்திற்கென்று தனித்துவமாக, ஏற்படுத்திய ஒரு சில விடயங்களும் உள்ளடங்கும். 

இந்த சிறப்பியல்புகளால் முதல் படிமுறையில் ரமழானை பயன்படுத்துபவர் அதீத நன்மைகளை சுவீகரித்துக் கொள்வார்.

அவற்றில் சில தான்....
 # பகல் முழுவதும் நோன்பு
 # சுன்னத்களுக்கு பர்ளின் நன்மை
 # ஷைத்தான் விலங்கிடப்பட்டுள்ளமை

 # சுவனத்தின் வாயில்கள் திறக்கப்பட்டும் நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டுமிருத்தல்.

 # குர்ஆன் ஓதுவதற்கு பல மடங்கு நன்மை.
 # தராவீஹ்.
 # சஹர், இப்தார்
 # etc....

எனவே, சஹருக்கு எழும்புவது முதல் தராவீஹ் முடிந்து படுக்கைக்கு செல்லும் வரை, அதிகமாக நன்மைகளில் ஈடுபடுவதற்கும் தீமைகளை குறைத்துக் கொள்வதற்குமான ஆர்வம் இயல்பாக தொற்றிக் கொள்ளும். இறைவன் ரமழானுக்கென்று ஏற்படுத்திய பாக்கியங்கள் இவை.

இந்த படிமுறையில் ரமழானை கழிக்க திட்டமிடுபவர்கள் தமது நேரத்தை பிரயோசனப்படுத்திக் கொள்வதற்காக பின்வரும் வகையில் உறுதியான சில தீர்மானங்களை எடுப்பதானது, நடுப்பத்துக்களில் வரும் அசௌகரியங்களில் (இயலாமை, சோம்பல்) இருந்து தவிர்ந்துகொள்ள உதவும்.

உதாரணமாக....

*  ஒவ்வொரு நாளும் குர்ஆனில் எவ்வளவு பகுதி 
   ஓதுவது என்று வரையருத்து, விடுபடாமல் 
   இந்த 1 மாதமும் கடைபிடிக்க அதி சிரத்தை 
   எடுத்தல்.

*  குறைந்தது தர்ஜுமாவை முடியுமானளவு 
    வாசிப்பது.

*  தினமும் ரகசியமாக தர்மங்கள் செய்வது

*  இரவு வணக்கத்தை விடாமல் கடைபிடிப்பது.
*  இன்னும்......

~ இந்த படிமுறையில் மாத்திரம் இருந்து ரமழானை பயன்படுத்த முடிவெடுப்பதன் மூலம் - வழமையை விட அதிக நன்மைகளை ரமழானில் ஈட்டலாம். எனவே ரமழான் முடிவதோடு பெருநாள் கொண்டாட்டத்துடன் அனைத்தும் முடிந்துவிடும். 

2 . அதிகமாக பயன்படுத்தல்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இந்த படிமுறையில் ரமழானை பயன்படுத்த திட்டமிடுபவர்கள் 'அதிக நன்மைகளை' ஈட்டிக் கொள்வதோடு (முதல் படிமுறையோடு) சேர்த்து 'ரமழானை ஒரு பயிற்சிக் காலமாக' பயன்படுத்துவார்கள். 

அதாவது இன்னுமொரு பாணியில் சொல்வதென்றால், தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் ஒரு வாகனத்தை ரிபயார் இற்கு உற்படுத்துவது போல்.

இந்த படிமுறையூடாக ரமழானை எதிர்கொள்ளும் ஒருவர், தனது கடந்த வருடத்தை (இன்று வரை) மீட்டி....
தான் செய்த பாவங்கள், தனது போதாமைகள், தனது நடவடிக்கைகள் என்பவற்றை திரும்பிப் பார்த்து,

அவற்றில் முடியுமானளவு வரை குறைகளை நிவர்த்தி செய்தும், சில புதிய விடயங்களை சேர்த்தும், இந்த ஒரு மாதமும் பயிற்சி எடுத்து, அடுத்த வருடத்தை இவ்வருடத்தை விட ஒரு படி மேல் இறைவனுக்கு நெறுக்கமாக வாழ்வதற்கு முயற்சித்தல்.

அதாவது சிம்பளாக சொல்வதானால், அடுத்த 11 மாதத்திற்கான energy save பண்ணுவது. 

எனவே இவரின் மனநிலை எப்படி இருக்கும் என்றால், ரமழானில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும், தான் ஒரு பயிற்சிப் பாசறையிலிருந்து பயிற்சி பெறுவதாகவே எண்ணுவார். 

யாரும் பயிற்சி காலங்களில் கோட்டை விடுவதில்லை. முழுமையாக பயன்படுத்துவார்கள். காரணம் பயிற்சி என்று வந்தாலே அடுத்தது பரீட்சை என்று ஒன்று இருக்கிறது. அதற்கு வெற்றிகரமாக முகம் கொடுக்க வேண்டுமானால் பயிற்சியில் சறுக்கிவிடக் கூடாது.

உதாரணமாக, 

ஒரு ராணுவ சிப்பாய் ராணுவ முகாமில் பயிற்சி பெற்று முடிந்த கையோடு எங்கு அழைத்து செல்லப்படுவார்? போர் களத்திற்குத்தான். ஏன்? அதற்குத்தான் அவ்வளவு பயிற்சியும் எடுத்ததே. 

இதே மனநிலையில் தான் இந்தப் படிமுறையில் ரமழானை எதிர்கொள்ளுமம் ஒருவரும் இருப்பார். ரமழானில் பெற்ற பயிற்சிகளிக்கான களமாக ஏனைய 11 மாதங்களும் முன்னால் இருப்பதால் வெகு சிரத்தையோடு ரமழானை பயன்படுத்துவார்.

எனவே,

பயிற்சி எடுக்கிறேன் என்ற மனநிலையில் இருப்பவர் ரமழானில் optional ஆக இருக்கும் எல்லா வணக்கங்களையும் தனக்கு கட்டாயப்படுத்திக் கொள்ளல்.

உதாரணமாக....

 # இரவு வணக்கங்கள்
 # முன் பின் சுன்னத்துக்கள்.
 # குர்ஆனை ஓதுதல், படித்தல்.
 # etc....

ஏனென்றால், ரமழானுக்குப் பிறகும் தான் இவற்றை தொடரந்து செய்ய வேண்டும். அதற்கான பயிற்சி தான் இந்த முழு மாதமும் எடுக்கிறேன் என்ற மனநிலையில் தனக்கு கட்டாயப்படுத்திக் கொள்வார்.

* ஒருவர், இனி என் வாழ்வில் ஒரு நாளாவது கொஞ்சமாவது குர்ஆன் ஓதாமல் கழிக்க மாட்டேன் என்று தீர்மானித்தால், இந்த ரமழானில் அதற்கு பயிற்சி எடுக்கலாம்.

* அதே போல், ஒவ்வொரு நாளும் சும்மா 
   வீணாக கழியும் நேரமொன்றில் சிரத்தையோடு 
   இஸ்திஃபார் 100 விடுத்தம் செய்வேன் என்று 
   தீர்மானித்தால், இந்த ரமழானிலிருந்து 
   பயிற்சியை ஆரம்பிக்கலாம். 
   ( 10 நிமிடங்கள் தான் போகும்)

* தன்னிடம் இருக்கும் மிக மோசமான இரண்டு
  பண்புகளை இனி என் வாழ்வில் கைவிடுவது 
  என்று தீர்மானித்தால் அதை தவிர்ந்நு 
  கொள்வதற்கான பயிற்சியை எடுக்கலாம்.

* அத்தோடு தன்னிடமில்லாத இரு 
   நற்குணங்களை வளர்த்துக் கொள்ள இந்த 
   ரமழானை பயன்படுத்தலாம்.

*  அடிக்கடி துஆ கேட்பது

*  சந்தர்ப்ப துஆக்களை ஓத நினைவுபடுத்த 
   பயிற்சி எடுக்கலாம்.

இப்படி ஏராளமாக உள்ளன. எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு ஒன்றுமில்லாகிவிடாமல் முடியுமானவற்றை தெரிவு செய்து தம்மை பயிற்சிக்கு உட்படுத்திக் கொள்வர்.

( பயிற்சி என்பது மெத்தையில் தடப்பதல்ல முள்ளில் நடப்பது தான். கஷ்டங்கள் இருக்கும். ஆனால் விளைவு அமிர்தமாக இருக்கும்.)

~ இந்த படிமுறையில் ரமழானை பயன்படுத்தும் ஒருவருக்கு ரழமழானின் பயன் பயிற்சியில் தொடங்கி பண்பாட்டில் முடியும் பெருநாளோடு, எல்லாம் முடிந்து போகாது.

.....! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! !.....
அடுத்த படிமுறையை வாசிக்க முன் சற்று ஓய்வெடுத்துக் கொள்வது நன்று.

3 . உச்சகட்டமாக பயன்படுத்தல்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இந்த படிமுறையில் பயன்படுத்துபவருக்கு, முதல் இரு படிமுறைகளுக்குற்பட்ட விடயங்களோடு சேர்த்து, அவற்றை செய்வதற்குரிய மிகப் பெரும் Motivation  ஆகவும் மிக உந்துதலாகவும் தென்படும் எதுவென்றால்....

இது குர்ஆனின் மாதம்!!!!!!
ரமழான் வஹியின் மாதம்.!!!!!

ரமழானின் அதி அதி விஷேட சிறப்பு என்னவென்று தெரியுமா? 

எந்தளவுக்கென்றால் அல்லாஹ் குர்ஆனில் ரமழானின் ஏனைய எந்த சிறப்பம்சங்களையும் பேசவில்லை இந்த ஒன்றைத் தவிர. இதனை மாத்திரம் அல்லாஹ் குறிப்பிட்டிருப்பது தான் அதன் அதி விஷேடமே. 

ஏனென்றால் ரமழானின் ஏனைய அனைத்து சிறப்புக்களும் நபி (ஸல்) அவர்களாலே கூறப்பட்டுள்ளன. 

ஓகே. அந்த அதி விஷேட சிறப்புத் தான்.                        
‎شَهۡرُ رَمَضَانَ الَّذِىۡٓ اُنۡزِلَ فِيۡهِ الۡقُرۡاٰنُ
"ரமழான் மாதத்தில் தான் குர்ஆன் இறக்கப்பட்டது..."

அதாவது குர்ஆன் இறக்கப்பட்ட மாதம்!!! 
அல்லாஹ், ரமழான் நோன்பின் மாதம் என்று சொல்லவில்லை. என்ன சொல்கிறான் என்றால்...

" ரமழான் மாதத்தில் குர்ஆன் இறக்கப்பட்டது மனித சமூகத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக......

........ ஆகவே அந்த மாதத்திற்கான பிறை கண்டால் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்...."

ஆக, ரமழான்...

* நோன்பு மாதம். 
   எனவே குர்ஆன் ஓத வேண்டுமா? 

   அல்லது

* குர்ஆனின் மாதம். 
   எனவே நோன்பு நோற்பதா?

யெஸ்! ரமழான் குர்ஆனின் மாதம். எனவே தான் நோன்பு நோற்கிறோம். 

எனவே இந்த 3ம் படிமுறையில் பயன்படுத்துபவருக்கு... முதல் கரிசணை குர்ஆன் தான்! 

அதே போல் ரமழானின் இந்த அதி விஷேட சிறப்புக்கு இன்னும் சிறப்பேற்படுத்தும் அடுத்த விடயம் தான் அல்லாஹ் குர்ஆனிலே கூறுகிறான் 'லைலதுல் கத்ர்' இரவு!!!!!

ரமழான் மாதத்திலும் குறிப்பாக இந்த இரவில் தான் அருள் மிகு குர்ஆன்! இறை வார்த்தைகள்!! இறக்கப்பட்டது!!! அது ஆயிரம் மாதங்களைவிட சிறந்ததென்று இறைவனே கூறுகிறான்!

எனவே குர்ஆனும் ரமழானும் இவருக்கு ஒன்றிலிருந்தொன்று பிரிக்க முடியாமலிருக்கும்! 
இந்த படிமுறையினாடாக ரமழானை பயன்படுத்துபவர் 

 # குர்ஆனை அதிகம் ஓதுவதோடு
 # குர்ஆனை படிப்பார்
 # வாழ்க்கையில் செயல்படுத்த பயிற்சி எடுப்பார்.

 # குர்ஆனின் மொழியைப் படித்து, இறைவனின் 
    வார்த்தைகளிலேயே இந்த அற்புத அருளான
    குர்ஆனை விளங்கிக் கொள்ள பெரிதும்
    ஏக்கத்துடனும் ஆர்வத்துடனும் முயற்சிப்பார்.

ரமழானின் ஒவ்வொரு நாளும் இவருக்கு குர்ஆனுடனான உறவு வளர்ந்து செல்லும் அதே நேரம் அதனை பயிற்சியாகவும் கொள்வார். (2ம் படிமுறைப்படி)

ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் குர்ஆனைக் கேட்டது போல் வேறெதனையும் கேட்டதில்லை! 

ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் இந்த துஆவை வாசித்துப் பாருங்கள் கண்ணீர் சொட்டும்!!!

"இறைவா!! நான் உன் அடிமை! உன் அடிமையின் மகன்! உன்னுடைய பெண் அடிமையான என் தாயின் மகன்! என் வாழ்வு உன் கட்டுப்பாட்டிலுள்ளது! நீயே என்னை நிர்வகிக்கிறாய்! என் விடயத்தில் உன் முடிவே நியாயமானது!  உனக்காக எத்தனை பெயர்கள் உள்ளன என்று நீ தீர்மானித்துள்ளாயோ அவற்றைக் கொண்டும், எத்தனை பெயர்கள் உன் வேதத்தில் கூறியிருக்கிறாயோ அவற்றைக் கொண்டும், இன்னும் உன்னுடைய நீ அறிவிக்காத திருப்பெயர்களைக் கொண்டும் நான் உன்னிடம் இறைஞ்சுகிறேன்.!!!😭
திருக்குர்ஆனை என் இதயத்திற்கு வசந்தமாகவும், என்னுடைய கவலைகளுக்கும் துன்பங்களுக்கும் அச்ச உணர்வுக்கும் அருமருந்தாகவும் ஆக்கியருள்வாயாக!!!" 

[அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி)
ஆதாரம்: அஹ்மத்]
(முதல் கமண்ட்டைப்பார்க்க)

இதனை விட பணிவாகவும் அழகாகவும் ஆழமாகவும் யாரால் தான் குர்ஆனைக் கேட்க முடியும்! அந்தளவு இறைஞ்சிக் கேட்டார்கள் ரஸூலுல்லாஹ் (ஸல்)! 

இதையே ரமழானில் அதிகமதிகமாக கேட்கலாம் 3ம் படிமுறையை தெரிவு செய்யும் ஒருவருக்கு. 

இந்த படிமுறையை தெரிவு செய்பவர்....

குர்ஆன் ஆயத்துக்களை வாழ்க்கையாக கொண்டுவர இந்த ரமழானில் பயிற்சி எடுப்பார். 

உதாரணமாக தெரிவு செய்த குர்ஆன் ஆயத்துக்களை படித்து மனனமிட்டு வாழ்க்கையிலும் பின்பற்றும் வரை விட மாட்டார். அதனை படிப்பதற்கும் பின்பற்றுவதற்குமான பயிற்சியை ரமழானில் பெறுவார். 

வாழ்க்கையில் கடைபிடிக்க ஆரம்பித்தவுடன் அந்த குர்ஆன் ஆயத்தை மறந்துவிட்டு அந்த நல்ல விடயத்தை மாத்திரம் கடைபிடிப்பது தவறு. 

உதாரணமாக புறம் பேசக் கூடாது என்று வரும் அந்த ஆயத்தை படித்து, நடைமுறைப்படுத்திக் கொண்டு போகும் போது காலவோட்டத்தில் அந்த குர்ஆன் வசனம் மறந்து போவது பிழை. புறம் பேசக்கூடாது என்று உம் உள்ளத்தில் தொடரும் காலமொல்லாம் இந்த குர்ஆன் ஆயத்தும் நினைவுக்கு வரவேண்டும்.

இப்படியாக குர்ஆனோடு தொடர்பிருக்கும் போது,  ஆத்மார்த்தமான அன்பான உறவு எமக்கும் குர்ஆனுக்கும் இடையில் உருவாகின்றது.

ரமழானின் நாட்கள் இவருக்கு...

* நன்மைகளையும் அள்ளித் தரும். 
   (முதல் படிமுறை)
* அதே போல் அடுத்த 11 மாதத்திற்கான  
   பயிற்சியையும் வழங்கும். 
* அனைத்திற்கும் மேலாய் படைத்த 
   நாயனுடனான அந்நியோன்னிய அன்புப் 
   பிணைப்பும் உறவும் இறைவனது 
   வார்த்தைகளூடாக ஏற்படுத்தும்.

----------------------------------------

இறுதியாக,

நாம் என்ன மனநிலையில் ரமழானை அடைகிறோம் என்பதனைப் பொருத்தே ரமழானினால் பெற்றுக் கொள்ளும் அடைவுகளும் வேறுபடும். 

சாதாரண நோக்கத்துடன் ரமழானை எதிர்கொண்டு முதல் படிமுறையில் பயன்படுத்துவதா 

அல்லது பயிற்சியாக மாற்றி வருடம் முழுவதும் பயன்பெறும் வகையில் அமைத்துக் கொள்வதா

அல்லது அதற்கும் மேலாய் ரமழானின் அடிப்படை நோக்கமான குர்ஆனுடனான உறவை வளர்த்துக் கொள்வதில் பயிற்சி பெறுவதா

என்பதை தீர்மானிப்பது எமது கைகளிலே தங்கியுள்ளது. 

தீர்மானிப்போம். இன்றிலிருந்தே ஆரம்பிப்போம்.

Sunday, May 5, 2019

*💠கம்பளம் விரிக்க காத்திருக்கும் ரய்யான்!💠*

★ அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ் (நளீமி) ★
.
Shared By: PiraiNilas MEDIA​
(Silmiyapura, Srilanka)
+94778 75 65 75
.

உலகம் ஒரு பரீட்சை மண்டபம்
ரமழான் அதில் விஷேட பரீட்சை
மாதம் முழுக்க பயிற்சி
உடலுக்கும் உள்ளத்துக்கும்!

ரமழான்- அது
உள்ளத்து நோய்கள் போக்க
ஏக அதிபதி அனுப்பி வைத்த மருந்துச் சீட்டு!

மனவெளியின் சந்தனத் தோப்புக்களில்
ஈமானியப் பறவை கூடு கட்டும் காலம் இது!

இறைவனின் கருணைச் சுடர்கள்
ஒளிர்ந்து பிரகாசிக்கும் பருவ காலம் இது!

நரகக் கூண்டுகள் அடைக்கப்பட்டு
சுவன மாளிகைகள் அலங்கரிக்கப்படும் மாதம் இது!

ஆன்மிக வெளிச்சம் ஏற்றி வைக்க 
மலக்குகள் அணிவகுக்கும் காலம் இது!

அலைபாயும் ஆசைகளை
அடக்கி வைத்துப் பயிற்றுவிக்கும் கடிவாளமிது!

விரல் நுனிக்கு வந்து விட்ட
விரசங்களின் கழுத்துக்கு கத்தி வைக்க
கனிந்திருக்கும் காலம் இது!

வயிறு பட்டினி கிடப்பதனால் தான்
ஆன்மாவின் வயிறு நிரம்பி வழிகிறது!

குடல் காய்ந்து வற்றிப்போவதனால் தான்
ஈமான் பெருக்கெடுத்துப் பாய்கிறது!

தேக வரட்சியினால் தாகம் எடுக்க
உள்ளம் புரட்சி கீதம் இசைக்கிறது!

இறையை நெருங்க
இன்ஸான் புறப்படும்
ஓர் ஈமானியப் பயணம் ஆரம்பமாகிறது!

வான்மறை வந்த மாதம்!
வாழ்வதற்கு வழிபிறந்த மாதம்!

இதில் அற்ப அமலுக்கும் நன்மைகள் பெருகும்

ஸுஜுதின் பெருமூச்சில் பாவங்கள் கருகும்

லைலதுல் கத்ர் இரவில்
ஆயிரம் ஆயிரம் சூரியன்கள் உதிக்கும்!
அவை வாழ்வுக்கு பிரகாசம் தரும்
பாவங்களை சுட்டெரிக்கும்!

வாயும் நோன்பு
வயிறும் நோன்பு

நாவும் நோன்பு
நாளமும் நோன்பு

கரமும் நோன்பு
கல்பும் நோன்பு

தசையும் நோன்பு
அசைவும் நோன்பு

என்பும் நோன்பு
எண்ணமும் நோன்பு

விழியும் நோன்பு 
வழியும் நோன்பு

தொடையும் நோன்பு
தாடையும் நோன்பு

பேச்சும் நோன்பு
மூச்சும் நோன்பு

சிரசும் நோன்பு
சுவாசமும் நோன்பு...

கற்பும் நோன்பு
கண்ணும் நோன்பு என்றால்
நிச்சயமாக மின்னும் நோன்பு!

விண்ணும் மண்ணும் பூத் தூவ
ஹூருல் ஈன்கள் கண் சிமிட்ட
ரய்யான் கம்பளம் விரிக்கும்!

*சிந்தியுங்கள்...செயல்படுங்கள்...* 
.
 *படியுங்கள்... பகிருங்கள்...* 
.
-------------------------------------------------
 *படித்ததில் பகிர்வது (272)* 
    05  - MAY - 2019
-------------------------------------------------
.
💎❄💎❄💎❄💎❄💎❄
.
 *PiraiNilas MEDIA* உடன் இணைய:
உங்கள் பெயர் முகவரியை *Whatsapp* இல் அனுப்பவும்
(broadcast / Not a Group )
+94778756575
.
 *Twitter:* @PiraiNilas
SMS: Type: F PiraiNilas & send 40404 
Link: www.twitter.com/PiraiNilas
.
 *Facebook Page:* PiraiNilas MEDIA
https://www.facebook.com/PiraiNilas
சுயநலவாத சுதேச முஸ்லிம்களுக்கு!!!
மன்னிக்கவும் பொதுத்தளத்தில் இதனை பகிர்வதற்கு.

கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்த என் நெருங்கிய நண்பர்களில் ஒருவர், வெகு நாட்களின்பின் இன்று என்னை தொடர்பு கொண்டார். அச்சகோதரர் பேசிய வார்த்தைகள் என்னை தலைகுனிய வைத்ததுடன், கண்கலங்க வைத்தது. அவர் பேசிய வார்த்தைகள் இன்னும் என் காதுக்குள் எதிரொலித்து கொண்டிருக்கிறது......

"டேய், ஏன்டா இவங்க எப்படி பண்றாங்க, இவ்வளவு உயிர்கள் போனது இவர்களுக்கு விளையாட்டாய் போச்சா..? நிறைய பேர் ஊனமாகி போய் இருக்கிறாங்க... இன்னும் எத்தனையோ பேர் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறாங்க....  தாய் தந்தையை இழந்து பிள்ளைகளும் , பிள்ளைகளை இழந்து தாய் தந்தையரும்,  குடும்ப அங்கத்தவர்களை இறந்து உறவுகளும்,  நொறுங்கிப்போய் இருக்கிறாங்க... 
நாங்க இன்னைக்கு இறந்தவர்களுக்காக விரதமிருந்து பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம் , முழு கிறிஸ்தவ சமூகமும் உடைஞ்சி போயிருக்கிறோம்....  ஆனால் இதெல்லாம் உங்க முஸ்லிம்களுக்கு விளையாட்டாய் தெரியுது. 
நான் முஸ்லிம்கள் இருக்கிற WhatsApp group களில் இருக்கிறன். அவர்கள் இதை வைத்து விளையாட்டு இருக்கிறாங்க , அவங்க சுய நலன்களை மட்டும் பேசிட்டு இருக்கிறாங்க, இதை எல்லாம் பார்க்கும்போது மிகவும் கவலையாக இருக்குதுடா... முஸ்லிம்கள் இப்படி இருக்கிறாங்க...??" 

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் நாம் எப்படி பதில் கொடுக்க போகிறோம்??? 
தெரிந்தோ தெரியாமலோ இந்நிகழ்வுக்கு முஸ்லிம்கள் காரணமாகி விட்டனர், அல்லது காரணமாக்கி விட்டனர் என்றுதான் கூற வேண்டும்.
முழு உலகமும் முஸ்லிம்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி இருக்கும் இச்சந்தர்ப்பத்தில், கிறிஸ்தவ மத பாதிரியார் முஸ்லிம்களுக்கு சார்பாகவே பேசி வருகிறார். முஸ்லிம்களுக்கு எந்தவிதத்திலும் தீங்கு செய்ய வேண்டாம் என்றே கிறித்தவ சமயத்தினரை வேண்டிக் கொண்டுள்ளார்.

ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்.....
*பொதுத்தளத்தில் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளை கேலி செய்து கொண்டிருக்கிறோம். (அனைத்தையும் நியாயம் என்று கூறவில்லை)

*கீழ்த்தரமாக இயக்கங்களின் பெயர்களை வைத்து meems செய்து கொண்டிருக்கிறோம்.

*உயிர்களை இழந்து துக்கம் அனுபவிக்கும் காலத்தில், face cover பறிபோனதற்கு பிரியாவிடை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

*நாட்டில் நடந்த இழப்புக்களை கொஞ்சமும் யோசிக்காமல் சுயநலமாக வேடிக்கை களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

*இது ஒரு பக்கம் இருக்க, online போராளிகள் online இல் சமூக சீர்திருத்தம் செய்கிறார்களாம். இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் offline போனதுடன் இவர்களது உயரிய பணியும் off  ஆகி விடுவதுதான்.

மன்னிக்கவும் சகோதரர்களே... எமது ஒவ்வொரு பகிர்வுக்கு முன்னரும் நாட்டின் நிலையை சிறிது சிந்தித்துப் பாருங்கள். உறவுகளை இழந்து தவிக்கும் ஒரு சமூகத்தை பற்றி சிந்தியுங்கள். மத ஸ்தலம் பாதிக்கப்பட்டும், பொறுமையுடன் செயல்படும் கிறிஸ்தவ சகோதரர்களைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நம்மில் சில முட்டாள்கள் செய்த தவறால் இந்த நாடும், நாட்டு மக்களும் படும் அவஸ்தைகள் போதும்!!! *இனியும் உணர்வற்ற முறையில், உங்கள் பதிவுகளால் அவர்களை நோகடிக்காதீர்கள்* 

*இனியேனும் இஸ்லாமிய அடிப்படையான தேசப்பற்று எனும் அழகான நல்லமலையும், நிய்யத்தையும் மனதில் சுமந்து செயல்படுவோம். இலங்கைத் தாயின் நிம்மதி, நம் ஒன்றினைவிலும் ஒத்துழைப்பிலுமே தங்கியுள்ளது.*


         ✒ Fazlan A Cader
               04/05/2019
         📞0779708762


https://m.facebook.com/story.php?story_fbid=837151466641401&id=100010396652155
ரமழான் மாதத்தில் மூன்று நேரங்கள் இருக்கின்றன. 
எவ்வளவு முக்கியமான வேலையாக இருப்பினும் அம்மூன்று நேரங்களையும் அலட்சியம் செய்யாமலிருக்க முயற்சிப்போம். ஏனெனில்,  ஒரு மாதத்திலுள்ள நாட்களின் எண்ணிக்கைக்கு அந்நேரங்கள் சமமாக இருக்கின்றன. எனவே, அந் நேரங்களைப் பேணிக் கொண்டு, அவற்றை  வணக்க வழிபாடுகளில்  கழிக்கும் போது மொத்தம் 90 மணித்தியால வணக்கங்களின்  நன்மைகளை  ஒரு நாளிலேயே சம்பாதித்துக் கொள்ள முடியும் . அவை,

🌙 *நோன்பு திறக்கும் நேரம்.* இப்தாருக்குரிய ஏற்பாடுகளை நேர காலத்துடன் முடித்துக் கொண்டு, பிரார்த்தனை செய்வதில் முழுமையாக எங்களை ஈடுபடுத்திக் கொள்வோம். ஏனெனில், நோன்பாளி இப்தாருடைய நேரம் கேட்கும் துஆ  மறுக்கப்பட மாட்டாது. எனவே, எங்களுக்காககவும் எங்கள் அன்புக்குரியவர்களுக்காகவும் பிராத்திப்பதற்காக  அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வோம். பிரார்த்தனையின் போது மரணித்தவர்களை மறந்துவிடக் கூடாது. ஏனெனில், எங்கள் துஆவின் பால் அவர்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றனர். 
🌙 * *இரவின் இறுதிப் பகுதி.**   அல்லாஹ்வுடன் தனிமையில் உறவாடுவதற்குரி நேரமாக இந்நேரத்தை ஆக்கிக் கொள்வோம். ஏனெனில்,  "நான் கொடுப்பதற்காக என்னிடம் கேற்போர் யாரும் உள்ளனரா? " ,  "நான் மன்னிப்பதற்காக என்னிடம் மன்னிப்புக் கோறும் எவரும் உள்ளாரா?" என்று அல்லாஹ் அழைத்துக் கொண்டிருக்கும் பாக்கியமிக்க நேரமது. அதனால் இந்நேரத்தில் அதிகம் பாவ மன்னிப்புக் கோறுவோம். 

🌙 * *பஜ்ர் தொழுகை முடிந்ததிலிருந்து சூரிய உதயம் வரையிலான நேரம்.  தொழுத இடத்திலே அமர்ந்திருந்து அல் குர்ஆனை ஓதுதல், இறை சிந்தனை போன்றவற்றில் இந்நேரத்தைக் கழிப்போம் .* 

✨ இந்நேரங்களைப் பேணி, வணக்கங்களில் ஈடுபடுவதுடன் ஏனைய நேரங்களில் திக்ர் (இறை நினைவு) செய்தல், புறம் பேசுவதிலிருந்து தவிர்ந்து நடத்தல் போன்றவற்றில் கரிசனையாய் இருப்போம். மேலும், கடமையான தொழுகைகளைத் தவறாமல் நிறைவேற்றுவதற்கு மனதளவில் உறுதி கொள்வோம்.  மேலும், உபரியான வணக்கங்களை முடியுமான அளவு அதிகரிக்க  முயற்சிப்போம். ஏனெனில், இந்த முப்பது நாற்களும் விரைவாகவே சென்று, ரமழான் மாதமும் நிறைவு பெறும்.

📞 மூன்று வகையான துஆக்கள் இருக்கின்றன. அவற்றை ஸுஜூதில் அல்லாஹ்விடம் கேற்பதற்கு மறக்கக் கூடாது. 
1⃣ *இறைவா! என்னுடைய இறுதி முடிவை சிறப்பானதாக ஆக்கி வைப்பாயாக.* 

2⃣ *இறைவா! நான் மரணிக்க முன்னர் நான் செய்த அனைத்துப் பாவங்களையும் மன்னித்தருள்வாயாக.*  

3⃣ *உள்ளங்களைப் புறட்டுபவனே! உனது மார்க்கத்திலே எனது உள்ளத்தை உறுதிப்படுத்துவாயாக.*

#################

🎗இச்செய்தியை நன்மை நாடிப் பிறருக்கு எத்திவைக்கும் போது , நிச்சயம் ல்லாஹ் ஈருலகக் கஷ்டங்களையும் நீக்கி வைப்பான். 

🎗நன்மையான காரியமாக இருந்தால், நீ அதனை அற்பமாகக் கருதினாலும், அதனை செய்துவிடு. ஏனெனில், உனது எந்தக் காரியம் உன்னை சுவனத்தில் நுழைவிக்கும் என்பது உனக்குத் தெரியாது.

Saturday, May 4, 2019


 *புனித ரமழான் நோன்பு பற்றிய விளக்கம்* 
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே அல்ஹம்துலில்லாஹ். ஸலவாத்தும் ஸலாமும் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் மீது என்றென்றும் உண்டாவதாக. 12 மாதங்களில் அல்குர்ஆன் இறங்கிய மாதமாகிய புனித ரமழான் மாதத்தை நாம் அடையப்பெற்றது அல்லாஹ்வின் மிகப்பெரிய பாக்கியமே. இந்த சிறப்பு மிக்க மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்களை பின்வரும் ஒழுங்குகளில் நோக்கலாம்.

ரமழானைப்பற்றி குர்ஆனிலும் ஹதீஸிலும்

‘ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் நேர்வழியிலிருந்து தெளிவானதாகவும் (சத்திய, அசத்தியத்தைப்) பிரித்துக்காட்டக்கூடியதாகவும் உள்ள இந்த குர்ஆன் இறக்கியருளப்பட்டது. ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைந்து கொள்கிறாரோ அதில் அவர் நோன்பு நோற்கவும்’. (அல் பகறா - 185)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவன வாயில்கள் திறக்கப்பட்டு நரக வாயில்கள் மூடப்படும். இன்னும் ஷைத்தான்கள் விலங்கிடப்படுவார்கள். (ஆதாரம் : புஹாரி 1898 - முஸ்லிம் 1097)

இது ஹிஜ்ரி 2ம் வருடம் ஷஃபான் மாதம் கடமையாக்கப்பட்டது.

ரமழானின் இரகசியம்:

1. வழிபாடுகளில் மிக மகத்தானது.

2. அடியானுக்கும் அல்லாஹ்வுக்கும் மத்தியில் உள்ள ஒரு ரகசியம்.

3. பொறுமையை ஏற்படுத்துவதுடன் நப்ஸை கட்டுப்படுத்தல்.

4. அல்லாஹ்வின் நிஃமத்துக்களை ஞாபகமூட்டல்.

5. சமிபாடு அடைவதற்கு உறுதுணையாக இருப்பதுடன் உடல் ஆரோக்கியத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துதல்.

பின்வரும் மூன்று விடயங்களில் ஒன்றின் மூலம் புனித ரமழான் உறுதிப்படுத்தப்படும்:

1. பிறை காணுதல்: இச்சந்தர்ப்பத்தில் பின்வரும் துஆவை ஓதுவது சுன்னத்தாகும். அல்லாஹு அக்பர் - அழ்ழாஹும்ம அஹில்லஹு அலைனா பில் அம்னி வல் ஈமானி வஸ்ஸலாமதி வல் இஸ்லாமி வத் தவ்பீகி லிமா யுஹிப்பு ரப்புனா வயர்ழா (ஆதாரம்: திர்மிதி)

2. பிறை கண்டதாக நேர்மையான ஒருவர் சாட்சி கூறுதல்.

3. ஷஃபான் 30 நாட்கள் பூர்த்தி அடைதல்.

நோன்பு கடமையாகுவதற்குரிய நிபந்தனைகள்:

1. முஸ்லிமாக இருத்தல்.

2. பருவ வயதையடைந்திருத்தல்.

3. புத்தி சுவாதீனமுள்ளவராக இருத்தல்.

4. நோன்பு நோற்க சக்தியுள்ளவராக இருத்தல்.

5. பெண்களுக்கு மாதாந்த ருது அல்லது பிரசவ ருது ஏற்படாதிருத்தல்.

நோன்பை விடுவதற்கு ஆகுமான காரணங்கள்:

1. கடுமையான நோய்.

2. தொழுகையை சுறுக்குவதற்கு ஆகுமான (பிரயாணத்தின் தூரம் 89 கி.மீ) அதிகமாக பயணம் செய்தல்.

3. வயது முதிர்ச்சியின் காரணமாக உடல் பலவீனம் அடைந்திருத்தல்.

4. பெண்களுக்கு மாதாந்த ருது அல்லது பிரசவ ருது ஏற்படுதல்.

5. கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் மீதோ அல்லது தங்கள் குழந்தைகள் மீதோ பயப்படுதல்.

6. தாங்கமுடியாத அளவு பசி, தாகம் ஏற்படுதல்.

நோன்பின் பர்ளுகள்:

1. ஒவ்வொரு நாள் இரவிலும் பஜ்ருக்கு முன் ரமழானின் பர்ழான நோன்பை நோற்பதாக நிய்யத்து வைத்தல்.

2. நோன்பை முறிக்கும் காரியங்களிலிருந்து தவிர்ந்திருத்தல்.

நோன்பை முறிக்கும் காரியங்கள்:

1. வேண்டுமென்றே உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்ளுதல்.

2. சுய முயற்சியின் மூலம் இந்திரியத்தை வெளியாக்குதல்.

3. பெண்களுக்கு மாதாந்த ருது அல்லது பிரசவ ருது ஏற்படுதல்.

4. வேண்டுமென்று வாந்தி எடுத்தல்.

5. இரத்தம் குத்தி எடுப்பதன் மூலம் அதிகமாக இரத்தத்தை வெளியேற்றல்.

6. ஊசி அல்லது சேலைன்கள் மூலம் உடம்புக்கு உணவுப் பதார்த்தங்களை உட்செலுத்துதல்.

7. பைத்தியம் ஏற்படுதல்.

8. மதம் மாறுதல்.

9. காதுக்கு (ரிar ளிrops) இடுவது, மூக்குக்கு (னிasal ளிrops) ஆஸ்த்துமா நோய்க்கு (யிnhalலீr) பாவிப்பது, பஸ்தி அடிப்பது.

நோன்பை முறிக்காத காரியங்கள்:

1. மறதியாக உண்ணுதல், பருகுதல்,

2. சுர்மா இடுதல்.

3. ஊசியின் மூலம் உடம்புக்கு அவசியமான மருந்தை உட்செலுத்தல்.

4. மருந்து கட்டுதல், உடம்புக்கு கிரீம், பாம் பூசுவது, கண் நோய்க்கு (ரிyலீ ளிrops) இடுவது.

5. சுய முயற்சியின்றி இந்திரியம் வெளியாகுதல். (உ+ம் : தூக்கம்)

6. குழந்தைகளுக்குப் பால் ஊட்டுதல்.

நோன்பின் சுன்னத்துக்கள்:

1. நோன்பு திறப்பதை அவசரப்படுத்துதல்.

2. பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு திறத்தல்.

3. நோன்பு திறந்ததும் பின்வரும் துஆவை ஓதுதல். அல்லாஹும்ம லக சும்து, வ அலா ரிஸ்கிக அப்தர்து தஹப்பழ் ழமஉ, வப்தல்லதில் உருகு வதபதில் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்.

பொருள்: யா அல்லாஹ் உனக்காகவே நோன்பு நோற்றேன். உனது ஆகாரத்தைக் கொண்டே நோன்பு திறந்தேன். தாகம் தீர்ந்து விட்டது, நரம்புகள் நனைந்து விட்டன. அல்லாஹ் நாடினால் கூலி உறுதியாகிவிட்டது.

4. நோன்பாளிகளை நோன்பு திறக்கச் செய்தல்.

5. பிறரிடத்தில் நோன்பு திறந்தால் பின்வரும் துஆவை ஓதுதல்.

அப்தர இன்தகுமுஸ் ஸாயிமூன் வ அகல தஆமுகமல் அப்ரார் வசல்லத் அலைகுமுல் மலாயிகது

பொருள்: நோன்பாளிகள் உங்களிடத்தில் நோன்பு திறந்து விட்டனர். நல்லோர்கள் உங்களது உணவைச் சாப்பிட்டனர். மலக்குமார்கள் உங்கள் மீது ஸலவாத் கூறிவிட்டனர்.

6. ஸஹர் செய்தல் (ஸஹரைப் பிற்படுத்துவது ஏற்றமாகும்)

7. அதிகமாக ஸதகா செய்தல், குர்ஆன் ஓதுதல், திக்ரு செய்தல், இரவில் நின்று வணங்குதல், அதிகமாக துஆ செய்தல்.

8. குடும்பத்தினருக்காக செலவழித்தல், உறவினர்களுடன் சேர்ந்து நடத்தல், ஏழைகளுக்கு உதவி செய்தல்.

9. விசேடமாக கடைசிப் பத்தில் பள்ளியில் இஃதிகாப் இருத்தல்.

10. குளிப்பு கடமையானவர்கள் பஜ்ருக்கு முன்னால் குளித்தல், நாவையும் உறுப்புக்களையும் தேவையில்லாத விடயங்களிலிருந்து பாதுகாத்தல்.

நோன்பில் வெறுக்கப்பட்டவைகள்:

1. புறம், கோள் பேசுதல், ஏசுதல் விமர்சித்தல்.

2. பிறரை நோவினைப்படுத்தல், கோபித்தல்.

3. அந்நிய பெண்களைப் பார்த்தல்.

4. இரத்தம் குத்தி எடுத்தல்.

5. நோன்பு நோற்ற நிலையில் மனைவியை முத்தமிடல்.

6. உணவுப் பண்டங்களை ருசி பார்த்தல்.

7. அதிகமாக வாய் கொப்பளித்தல்.

நோன்பைக் களாச் செய்ய வேண்டியவர்கள்

1. நோன்பு காலத்தில் நோன்பு பிடிக்க முடியாதளவு நோயாளியாக இருந்து விட்டு பின்னர் குணமடைந்தவர்.

2. நீளமான பிரயாணத்திற்காக நோன்பை விட்டவர்.

3. மாதாந்த ருது, பிரசவ ருது ஏற்பட்ட பெண்கள்.

4. கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்கள் (உடல் ரீதியாகத் தங்களுக்கு ஏதும் பாதிப்புக்கள் ஏற்படும் எனப் பயந்து நோன்பை விட்டவர்கள்.)

நோன்பை களாச் செய்வதுடன் குற்றப் பரிகாரமாக ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டியவர்கள்.

1. தன் கர்ப்பத்தில் குறைகள் ஏற்படும் எனப் பயந்து நோன்பை விட்ட கர்ப்பிணிகள்.

2. போதியளவு பால் குழந்தைக்குக் கிடைக்காது எனப் பயந்து பாலூட்டுவதற்காக நோன்பை விட்ட தாய்.

3. களாச் செய்ய வேண்டிய நோன்பை களாச் செய்யாமல் அடுத்த ரமழான் வரை பிற்படுத்தியவர்.

கொடுக்கப்படும் உணவின் அளவு.

ஒரு நாளைக்கு ஒரு முத்து (600g) உணவு அல்லது உணவுக்குரிய பொருள்.

களாச் செய்யாமல் ஏழைகளுக்கு உணவு மாத்திரம் கொடுக்க வேண்டியவர்கள்.

1. வயது முதிர்ச்சியின் காரணமாக உடல் பலவீனம் அடைந்தவர்கள்.

2. நீங்காத நோயுடையவர்.

நோன்பை உடலுறவின் மூலம் முறித்ததற்கான குற்றப்பரிகாரம்.

ஒரு முஃமீனான அடிமையை உரிமை விடல். அது முயாவிடின் தொடராக இரு மாதம் நோன்பு நோற்றல். அதுவும் முடியாத பட்சத்தில் 60 ஏழைகளுக்கு உணவளித்தல்.

லைலதுல் கத்ர் இரவு.

லைலதுல் கத்ர் இரவு 1000 மாதங்களைவிடச் சிறந்தது. (சூறதுல் கத்ர் : 02)

யார் லைலதுல் கத்ர் இரவில் ஈமான் கொண்ட நிலையில் நன்மையை மாத்திரம் எதிர்பார்த்தவராக நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் (அனைத்தும்) மன்னிக்கப்படும். (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

இந்த இரவு லைலதுல் கத்ர் இரவு என்று குறிப்பாகக் கூறப்படவில்லை. ஆனாலும் இது றமழானின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படையான நாட்களில் இருப்பதாக பல ஹதீஸ்களில் வந்துள்ளன. லைலதுல் கத்ர் இரவில் அதிகமாக ஓத வேண்டிய துஆ.

“அல்லாஹும்ம இன்னக அப்வுன் துஹிப்புல் அப்வ, பஃபு அன்னி

பொருள்: யா அல்லாஹ்! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறவன், எனவே என்னை மன்னித்தருள்வாயாக.

(தொடரும்)

லைலத்துல் கத்ர் அடையாளங்கள்:

1. அடுத்த நாள் சூரியன் சூடாகவோ அன்றி உதயமாகும்.

2. தூறலான மழை பெய்யும். (ஆதாரம் புஹாரி - 669)

3. சூரியன் ஒளிக் கதிர்களின்றி உதயமாகும். (ஆதாரம் முஸ்லிம் - 762)

ஸகாதுல் பித்ர்

பிரதான உணவாக உட்கொள்ளப்படக் கூடிய தானிய வகையிலிருந்து குறிப்பிட்ட அளவு பெருநாள் தொழுகைக்கு முன்னால் கொடுக்கப்பட வேண்டிய உணவிற்கு ஸகாத்துல் பித்ர் என்று கூறப்படும்.

இதன் ஆதாரம்: நபி (ஸல்) அவர்கள் பேரீத்தம் பழத்திலிருந்து ஒரு சாஹ்வையும் அல்லது தொலிக்கோதுமையிலிருந்து ஒரு சாஹ்வையும், முஸ்லிம்களில் அடிமை, சுதந்திரவாதி ஆண், பெண், சிறியவர், பெரியவர் அனைவர்கள் மீதும் கடமையாக்கினார்கள். மேலும் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள் வெளியேறுவதற்கு முன்னால் அதனை நிறைவேற்றுமாறு ஏவினார்கள். (ஆதாரம்: புஹாரி - 1433, முஸ்லிம் 984)

ஸகாதுல் பித்ர் கடமையாகும் நிபந்தனைகள்

1. முஸ்லிமாக இருத்தல்.

2. புத்தியுள்ளவராக இருத்தல்.

3. ரமழானின் கடைசி தினம் சூரியன் மறைவதற்கு முன்னாலும் பின்னாலும் உயிருடன் இருத்தல் (உ+ம்: ரமழானின் கடைசி தினம் சூரியன் மறைவதற்கு முன்னால் மரணித்தவருக்காகவும் சூரியன் மறைந்ததன் பின்னர் பிறக்கும் குழந்தைக்காகவும் ஸகாதுல் பித்ர் கொடுப்பது கடமையாகமாட்டாது.)

4. பெருநாள் தினம் தனக்கும், தனது பொறுப்பில் உள்ளவர்களுக்குமுரிய செலவு போக மேலதிகமாக இருக்கக்கூடிய பொருளில் கடமையாகும்.

ஸகாதுல் பித்ர் யாருக்காக கொடுக்கப்பட வேண்டும்

1. தனக்காக 2. மனைவி 3. சிறிய குழந்தைகள் 4. தந்தை (தனது பொறுப்பில் இருந்தால்) 5. தாய் (தனது பொறுப்பில் இருந்தால்) 6. சுயதொழில் வாய்ப்பை இழந்த தன் பராமரிப்பின் கீழ் உள்ளவர்கள் கொடுக்கப்பட வேண்டிய தானியப் பொருளின் அளவும் காலமும்.

ஊரில் பெரும்பாலும் உணவாக உட்கொள்ளக்கூடிய தானியம் (அரிசி) 2,400g மு.ப. நேரம்: ரமழானின் ஆரம்பத்தில் இருந்து பெருநாள் தினம் வரும் வரைக்கும் கொடுக்கலாம். ஆனாலும் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகைக்கு செல்வதற்கு முன்னால் நிறைவேற்றுவது மிக முக்கிய சுன்னத்தாகும். தொழுகையை விடப் பிற்படுத்துவது மக்ரூஹ் (வெறுக்கப்பட்டது) சூரியன் மறையும் வரை பிற்படுத்துவது குற்றமாகும். அதனை களாச் செய்வது அவசியம்.

பள்ளியில் இஃதிகாப் இருத்தல்.

நீங்கள் பள்ளிகளில் இஃதிகாப் இருக்கக்கூடிய நேரத்தில் மனைவிமாருடன் சேர வேண்டாம். (அல் பகறா - 187)

இஃதிகாப் நபி (ஸல்) அவர்கள் புனித ரமழான் மாதத்தில் கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பார்கள். பின்பு அவர்களின் மனைவிமார்களும் இஃதிகாப் இருந்தார்கள். (ஆதாரம்: புஹாரி 1922) முஸ்லிம் 1272)

நபி (ஸல்) கூறினார்கள்; இஃதிகாப் இருப்பது எல்லாக் காலங்களிலும் சுன்னத்தாகும் அதிலும் ரமழான் மாதம் முழுவதிலும் இருப்பது மிக ஏற்றமானதாகும். மேலும் கடைசி பத்தில் மிக மிக ஏற்றமானதாகும். இஃதிகாப் இருப்பதாக நேர்ச்சை வைத்திருந்தால் அதனை நிறைவேற்றுவது கடமையாகும்.

இஃதிகாப் நிபந்தனைகள்:

1. முஸ்லிமாக இருத்தல்.

2. புத்தி சுவாதீனமுள்ளவராக இருத்தல்.

3. நிய்யத்து வைத்தல்.

. பள்ளியில் இருத்தல் (பெண்கள் வீட்டில் ஒரு இடத்தை குறிப்பாக்கிக் கொள்ளுதல்.)

5. பெருந்தொடக்கை விட்டும் நீங்கியிருத்தல்.

இஃதிகாபின் சுன்னத்துக்கள்:

1. நபிலான தொழுகை, திக்ரு, குர்ஆன் திலாவத் போன்ற விடயங்களில் ஈடுபடுதல்.

2. நோன்பு நோற்றல்.

3. ஜும்ஆப் பள்ளியில் இருத்தல்.

4. நல்ல விடயங்களை பேசுதல்.

5. நாவையும் ஏனைய உறுப்புக்களையும் தேவையற்ற விடயங்களை விட்டும் பாதுகாத்தல்.

இஃதிகாபில் வெறுக்கப்பட்டவைகள்.

1. தேவையில்லாத விடயங்களில் ஈடுபடல்.

2. புறம், கோள் போன்றவற்றில் ஈடுபடல்.

3. வியாபாரம் செய்தல்.

இஃதிகாபை முறிக்கக்கூடியவைகள்:

1. மனமுரண்டாக உடலுறவு கொள்ளுதுல்.

2. வேண்டுமென்றே தேவையில்லாமல் பள்ளியிலிருந்து வெளியேறுதல்.

3. மதம் மாறுதல், போதை, பைத்தியம் ஏற்படுதல்.

4. பெண்களுக்கு மாதாந்த ருது அல்லது பிரசவ ருது ஏற்படுதல்.

சுன்னத்தான நோன்புகள்:

1. ஷவ்வால் மாதத்தில் 6 நாட்கள்.

எவர் ரமழான் மாதம் நோன்பு நோற்று அதனை தொடர்ந்து வரக்கூடிய ஷவ்வால் மாதத்தில் 6 நாட்கள் நோன்பு நோற்கிறாரோ அவர் காலம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போன்றவர். (ஆதாரம்: முஸ்லிம் - 1164).

(இதை தொடராக நோற்பது சிறப்புக்குரியதாகும் என்றாலும் ஷவ்வால் மாதத்திற்குள் விட்டுவிட்டு நோன்பு நோற்றாலும் மேற்கூறப்பட்ட நன்மை கிடைக்கும்).

2. அரபா தினம் (துல்ஹஜ் பிறை 9)

அரபா தினம் நோன்பு நோற்பது சென்ற வருட, வருகின்ற வருட பாவத்திற்கு குற்றப் பரிகாரமாகும். (ஆதாரம்: முஸ்லிம் - 1162)

இதில் புனித ஹஜ் சென்றவர்கள் புனித நோன்பை விடுவது சுன்னத். ஹஜ் செல்லாமல் இருப்பவர்களுக்குத்தான் நோன்பு பிடிப்பது சுன்னத்.

3. ஆஷ¤ரா, தாஸ¤ஆ தினங்கள் (முஹர்ரம் பிறை 9, 10)

ஆஷ¤ரா தினம் நோன்பு நோற்பது சென்ற வருட பாவத்திற்கு குற்றப் பரிகாரமாகும். (ஆதாரம்: முஸ்லிம்- 1162

4. திங்கள், வியாழன் ஆகிய தினங்கள்

திங்கள், வியாழன் நாட்களில் அமல்கள் அனைத்தும் (அல்லாஹ்விடம்) எடுத்துக் காட்டப்படுகின்றன. நான் நோன்பாளியாக இருக்கக் கூடிய நிலையில் என்னுடைய அமல்கள் எடுத்துக் காட்டப்படுவதை விரும்புகிறேன். என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி - 747)

5. அய்யாமுல் பீழ் மாதாந்தம் மூன்று நோன்பு நோற்றல் (பிறை 13, 14, 15)

மாதாந்தம் மூன்று நோன்பு நோற்பது காலம் முழுவதும் நோன்பு நோற்பதைப் போன்றது. (ஆதாரம்: முஸ்லிம் - 2449)

நோன்பு நோற்பதற்கு வெறுக்கப்பட்ட தினங்கள்:

1. தனியாக ஜும்ஆ அன்று மாத்திரம் நோன்பு நோற்பது

2. தனியாக சனி அன்று மாத்திரம் நோன்பு நோற்பது

3. காலம் பூராகவும் நோன்பு நோற்பது (இது தனக்கு அல்லது பிறருக்கு தங்கடம் ஏற்படுவதை பயந்தால், அவ்வாறு இல்லாவிட்டால் காலம் முழுவதும் நோன்பு நோற்பது விரும்பத்தக்கதாகும்.)

நோன்பு நோற்பதற்கு தடுக்கப்பட்ட தினங்கள்

1. இரு பெருநாள் தினங்கள்:

2. துல்ஹஜ் பிறை 11, 12, 13

3. சந்தேகத்திற்குரிய தினம் (ஷஃபான் பிறை 30)

4. ஷஃபான் மாதம் பிறை 15யிலிருந்து (பிறை 15ற்கு முன்னால் நோன்பு நோற்றவருக்கும், களா, நேர்ச்சை நோன்புகள் உடையவருக்கும் நோன்பு நோற்பது ஆகுமாகும்.

தொகுப்பு
மெளலவி ஆதம் யாkம் (ரஹ்மானி)
From Rasmy Galle 

குற்றம் எதுவும் செய்யாமலேயே குற்ற உணர்வோடும், குற்றவாளிகள் போன்றும் அந்நிய சமூகங்களுக்கு மத்தியில் எம்மை தலைகுனிந்து வாழ வைத்து விட்டார்கள் இந்த போலி ஜிஹாதிஸ்ட்டுகள். கிந்தோட்டைப் பிரச்சினையின் போதும், உணவுப் பொருட்களில் கருத்தடை மாத்திரை கலத்தல் தொடர்பான பிரச்சினையின் போதும் தமிழிலும், சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எமது சமூகத்தின் “கற்பின் தூய்மை” யைப் பறைசாட்டி பந்திக் கணக்கில் எழுதி, சிங்களவர்களுக்கும் பகிர்ந்து விட்டு இன்று வெட்கத்தோடு அலுவலகத்தில் சிங்கள சக ஊழியர்களை சந்திக்கின்றேன்.

ஐந்து வருடங்களுக்கு மேலாக நாம் சமூக வலைதளங்களில் இதைத்தான் வலியுறுத்தி வலியுறுத்தி எழுதி வந்தோம். ஆனால் பெரும்பாலானவர்கள் எம்மைக் கோழைகள் என்று எள்ளி நகையாடினார்கள். இன்று அந்த தைரியசாலிகள் முகநூலில் மன்னிப்புக் கேட்டு கெஞ்சி எழுதும் பதிவுகளைக்  காணும் போது இந்த ஆழ்ந்த துக்கத்திலும் சிரிப்புத்தான் வருகின்றது.



சிங்கள வெகுமக்களுக்கு ஐஸ்ஐஸ், தலிபான் போன்ற அமைப்புக்களின் உருவாக்கத்தின் பின்னணி, அதன் நோக்கம், இது போன்ற பயங்கரவாத இயக்கத்தின் உருவாக்கத்தில் உள்ள பிராந்திய அரசியல் நலன்கள், சியோனிஸ சதித்திட்டங்கள் பற்றி எதுவும் தெரியாது. தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லை. ஏனெனில் அவர்கள் எம்மைப் போன்ற சர்வதேச இனமல்ல. இலங்கையில் மாத்திரமே அவர்கள் வாழ்கின்றார்கள். உண்டு, களித்து சந்தோசமாக வாழ விரும்புகின்றார்கள். இப்படியிருக்க, எமது அரபு நாட்டுப் பாணியிலான கலாச்சார மாற்றங்கள்,  எமது இயக்கச் சண்டைகள் போன்றவற்றை மத்திய கிழக்கில் அரங்கேரும் அவலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து அவர்கள் பீதியடைவதில் நியாயம் இல்லாமல் இல்லை.

இஸ்லாத்தின் உன்னதக் கொள்கைகளை, இஸ்லாம் கடமையாக்கிய இபாதாக்கள் மூலம் அது எதிர்பார்க்கும் உன்னத சமூக மாற்றத்தை நாம் அந்நிய சமூகங்களுக்கு மத்தியில் எடுத்துச் செல்லவில்லை. மாற்றமாக அடையாள இஸ்லாத்திற்கே (Symbolic Islam)  அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுத்து அந்நிய சமூகங்கள் மத்தியில் பீதிகளைக் கிளப்பினோம். எமக்கென்று ஒரு அழகான சோனக முஸ்லிம் கலாச்சாரம் இலங்கையில் இருந்தது. திடீர் திடீர் என்று புதிய புதிய மாற்றங்கள். பருவமடையாத பெண்களை எல்லாம் முகம் மூக வைத்தது, உலமாக்கள் மாத்திரம் அணிய வேண்டிய ஜூப்பா என்ற  ஆடையினை கண்ட கண்ட காவாலிகள் எல்லாம் அணியத் தொடங்கியது, தெருவுக்குத் தெரு பள்ளிவாயல்கள்,  எல்லாப் பள்ளிகளிலும் போட்டிக்குப் போட்டி ஒலிபெருக்கிகள், இருக்கின்ற எல்லா ஆங்கிலப் பெயர்களிலும் இஸ்லாமிய ? இயக்கங்கள், புதுப்புது பத்வாக்கள்,  சுவர்க்கத்துக்கான அழைப்புக்கள், வழிகேட்டுப் பட்டங்கள். கூடப் பிறந்த சகோதரனுக்கே ஆயிரம் ரூபா கொடுக்காத பச்ச  உலோபிகளெல்லாம் ஹஜ்ஜூப் பெருநாள் அன்று பேருக்கும், புகழுக்கும் பெரிய மாடுகளை உள்ஹிய்யா கொடுத்தல், வருடாந்தம் பல உம்றாக்கள். புற்றீசல் போல் மத்ரஸாக்கள், இஸ்லாமிய ? இன்டர்நெசனல் ஸ்கூல்கள். முஸ்லிம் பாடசாலைகளின் ஒழுக்கம், தரம், பரீட்சைப் பெறுபேரு எந்தவித அக்கறையும் இல்லாவிட்டாலும் மாணவிகள் முகம் மூட வேண்டும், மாணவர்கள் தாடிவைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று சாரத்தினைத் தூக்கிக் கொண்டு மல்லுக்கு நிற்றல், கண்ட கண்ட பொருட்களுக்கெல்லாம் ஹலால் ஸர்டிபிகட்.  நாம் எப்படியான ஒரு நாட்டில், சூழலில் வாழ்கின்றோம் என்று விளங்கவில்லை. விளங்கிய உலமாக்கள் “பிக்ஹூல் அவ்லவியாத்” என்ற முன்னுரிமைப்படுத்த வேண்டிய விடயங்களைக் கற்பித்தார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைத்த பட்டம் “கோழைகள், பயந்தாங்கொல்லிகள், நவீன உலமாக்கள்”.

இதனாலேயே நாம் முகநூலில் எம்மால் முடிந்தளவில் எழுதினோம். நாம் ஒன்றும் ஆலிம்கள் இல்லை. மெத்தப் படித்த மேதாவிகளும் இல்லை. என்றாலும் பெரும்பான்மை சமூகத்தின் உளவியலை அப்போதே கற்று வரவிருக்கும் ஆபத்துக்கள் பற்றி முடிந்தளவில் எழுதினோம்.

சமூக வலைதளங்கள் ஆட்சி மாற்றத்தினையே ஏற்படுத்தும் வல்லமை படைத்தவை. ஆனால் எமது சமூகம் அதனை எதற்காகப் பயன்படுத்தியது?. ஆளுக்கால் சேற்றை வாரியிறைத்தோம். இயக்கங்களாகப் பிரிந்து சண்டை பிடித்தோம். சின்னச் சின்ன விடயங்களுக்கெல்லாம் முர்த்த்த், முஷ்ரிக், காபிர் என்று முடிவுகளை வாரியிறைத்தோம். ஐஸ்ஐஸ் தீவிரவாதிகள் என்று தெரிந்தும் அவர்களோடு எம்மவர்கள் கொஞ்சிக் குலாவினார்கள். எச்சரித்தும் கேட்கவில்லை. அந்த  ஐஸ்ஐஸ் தரப்பில் உலமாக்கள்  என்ற போர்வையில் இருந்து கொண்டு பெரிய வீராவசனம் பேசிய “ஆதார நாயகர்” களின் பதிவுகளுக்குச் சென்று ஏதோ அவர்கள் அல்லாமா குல்லிகள் போட்டு ஹார்டிங் போட்டார்கள். தாம் விரும்பாத இயக்கத்தினரின் தனிப்பட்ட பலவீனங்கள், குறைகளை எல்லாம் பகிரங்கப்படுத்தினார்கள்.  அல்ஹம்து சூறாவுக்குப் பொருள் தெரியாத விடலைப் பசங்கள் எல்லாம் பத்வா கொடுத்த்த் துணிந்தார்கள். சகவாழ்வைக் கேவலப்படுத்தி எழுதினார்கள். குட்மோனிங் சொல்வது ஹராம், அந்நியருக்கு புத்தாண்டு வாழ்த்துக் கூறுவது ஹராம், அவர்கள் தரும் பலகாரங்களைச் சாப்பிடுவது ஹராம். இப்படி அந்நிய சமூகங்கள் மீதான வெறுப்பினை இன்னும் இன்னும் அதிகப்படுத்தினார்கள். நிர்ப்பந்தமான ஒரு சூழலில் மங்கள விளக்கில் தீப்பந்தம் ஏற்ற நிர்ப்பந்திக்கப்பட்ட உலமாக்களை நாட்கணக்கில் முகநூலில் கழுவி ஊற்றினார்கள். எல்லாவற்றுக்கும் “மீம்ஸ்” என்றும் பகிடி என்றும், சிரிப்பும், கூத்துமாக இருந்தார்கள். சமூகத்தின் சீரியஸான பகுதியினை நாம் எழுதினால் எம்மை நாட்கணக்கில் சீண்டுவார்கள். இப்படிக் கூத்தும் கும்மாளமுமாக காலம் கழித்தவர்கள் இன்று முகநூலில் அழுதுபுலம்புகின்றார்கள். இனி வௌளம் தலைக்கு மேலால் சென்று விட்டது.



இனியாவது இருக்கின்ற கௌரவத்தினைப் பாதுகாத்து மியன்மார் அளவுக்கு நாம் சென்று விடாமல் புத்தி சாதூர்யமான முடிவுகளை எடுத்து ஆக்கபூர்வமான செயற்றிட்டங்களை முன்னெடுப்போம். தீவிரவாதம் இல்லாத நல்ல தலைவர்களை  தெரிவு செய்வோம். அடையாள இஸ்லாத்திற்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுக்காமல் விழுமிய இஸ்லாத்திற்கு முக்கியத்துவம்  கொடுப்போம். முஸ்லிம் பாடசாலைகளைக் கட்டியெழுப்பி கல்வித் துறையில் முன்னேறுவோம். உம்றாக்கள், ஆடம்பர வீடுகள், ஆடம்பரத் திருமணங்கள் என்று பணத்தினை விரயமாக்காமல் சமூகத்தினை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவோம். இல்லாவிட்டால் மியன்மார் முஸ்லிங்கள் போன்று கப்பல்களில் நாடுகளைத் தேடித் தேடி தஞ்சம் அடைய நேரிடும். இதனை நான் சும்மா சொல்லவில்லை. நாளாந்தம் சிங்கள முகநூல் பக்கங்கள், வெப்சைட்டுக்களில் உள்ள ஆக்கங்கள், அதற்கு வரும்  சிங்கள இளைஞர்களின் பின்னூட்டங்களை அடிப்படையாக வைத்து சொல்கின்றேன். அடித்துச் சொல்வேன் சிங்கள இளம் சமுதாயத்தில் நூற்றிற்கு தொன்னூறு வீதம் எம்மை மிகவுமே வெறுக்கின்றார்கள்.

எமது ஜிஹாதிக் குஞ்சுகளுக்கு நாம் தெரிவித்துக் கொள்வது, உங்கள் தியாகத்தினால் நாம் இப்போது மிகவும் கௌரவத்துடன் தலைநிமிர்ந்து ? வாழ்கின்றோம். அதற்குக் கூலியாக  நீங்கள் சுவர்கங்களில்  கன்னிகளோடு நன்கு சல்லாபியுங்கள். இங்கு எமது பெண்களுக்கு பாதையில் போக முடியவில்லை. பர்தா கொச்சைப்படுத்தப்படுகின்றது. வாழக்கையிலேயே கேட்காத தூசனங்களால் துவட்டி எடுக்கப்படுகின்றோம். எம்பெருமானார் இனி இல்லை என்ற அளவுக்கு வசைபாடப்படுகின்றார். ஒவ்வொரு முஸ்லிமையும் சந்தேகத்துடன் பார்க்கின்றார்கள். நீங்கள் சுவர்க்கத்தில் நன்கு அனுபவியுங்கள்.

அதே போன்று, காத்தான்குடி போன்ற தனி முஸ்லிம் ஊர் சகோதரர்களுக்கு நாம் மிக அன்போடு வேண்டிக் கொள்வது, உங்களையும், உங்கள் ஊர்களையும் நாம் நேசிக்கின்றோம். நீங்கள் மிகவும் நல்லவர்கள். மனிதாபிமானம் மிக்கவர்கள். ஆனால் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். நாம் வாழும் ஊர்கள் உங்களைப் போன்று முஸ்லிங்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஊர்கள் இல்லை. சுற்றி வர சிங்கள ஊர்கள். எமக்கென்று பாராளுமன்ற உறுப்பினர் எப்படிப் போனாலும், மாகாண சபை ஏன் பிரதேச சபை உறுப்பினர்களே இல்லை. எல்லாம் சிங்களவர்கள். கிராம சேவகர் முதல் பிரதேச செயலாளர் காரியலாம், மாவட்ட செயலகம், கல்விக் காரியாலயங்கள், வைத்தியசாலைகள், அரச அலுவலகங்கள், வைத்தியசாலை டாக்டர்கள் முதல் நேர்ஸ் மார் எல்லாமே சிங்களவர்கள். ஆக, உங்கள் ஊர்களில் இருந்து சில செத்த மூளைகளால் உருவாக்கப்படும் இயக்கங்களின் குப்பைகளை எல்லா முஸ்லிம் ஊர்களுக்கும் நகர்த்துபவர்கள் தொடர்பில் அவதானமாக இருந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். இன்றோ, நாளை என்றோ எனது மனைவி பிள்ளை பெற்றெடுக்க தயாராக இருக்கின்றார். அரச வைத்தியசாலைக்குப் போகவே முடியாது. அங்கு எம்மை குத்திக் காட்டிக் கொண்டே இருப்பார்கள். தனியார் வைத்தியசாலைக்குப் போவோம் என்கின்றார். ஒரு சாதாரண அரச ஊழியர் எப்படி தனியார் வைத்தியசாலைக்கு இலட்சங்களைக் கட்டுவது? ஓரளவு படித்த எங்களுக்கே வைத்தியசாலைகளில் இந்தக் கதியென்றால் பெரும்பான்மையாக இருக்கும் பாமர முஸ்லிம் தாய்மார்களின் நிலை என்ன ? சற்று சிந்தித்து செயற்படுங்கள்.

கடைசியாக, இந்தக் கொடூரத்  தாக்குதலை எம்மவர்கள் செய்திருக்கலாம். அல்லது வேறு பயங்கரவாத இயக்கங்கள், அல்லது அரசியல் குருகிய நோக்கம் கொண்டவர்கள் செய்திருக்கலாம். அல்லது பிராந்திய அரசியல் நலன்கள் பின்னணியாக இருக்கலாம். எப்படியிருந்தாலும், நாம் எமது சமூகத்தினை இனி வலுப்படுத்த வேண்டும். அதிக குருதி கொடை கொடுத்த சமூகம், அனர்த்தங்களின் போது எந்தவொரு இனமும் செய்யாத அளவு களப்பணி செய்ய சமூகம் இன்று கூனிக் குருகி நிற்கின்றது. நாம் எமது  பிழையான செயற்பாடுகளால் படைத்த இறைவனுக்கும்,  எம்பெருமானாருக்கும் களங்கத்தினை, கெட்ட பெயரை  வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இதுவே சுதாகரித்து மீண்டும் எழும்புவதற்கான கடைசி சந்தர்ப்பம் என்பதனை புரிந்து கொள்வோம்.

Thursday, May 2, 2019

தாக்குதல்களும் அவற்றுக்குப் பின்னரும்



அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். ஃபளீல் (நளீமி)

1.    தாக்குதல்கள் கொடூரமானவை, அவற்றைக் கண்டிக்க வார்த்தைகள் இல்லை.மார்க்க அடிப்படையில் அவற்றை அனுமதிக்க முடியாது என்பது ஒருபுறமிருக்க மனிதாபிமான அடிப்படையிலும் அவை மிகப் பிழையானவை.

2.    அவற்றை செய்தவர்கள் முஸ்லிம் பெயர்களில் இருந்ததற்காக அவற்றுக்கு இஸ்லாத்தின் அங்கீகார மிருப்பதாக நினைப்பது முற்றிலும் தவறு.

3.    அவர்களும் அவர்களை சார்ந்தவர்களாக இருப்பவர்களும்  உரிய முறையில் அடையாளம் காணப்பட்டு இந்த நாட்டிலிருந்து அந்தச் சிந்தனை வேர் பிடுங்கப்பட வேண்டும்.



அவர்களது நடவடிக்கைகளது விளைவுகள்


1.    இஸ்லாத்திற்கு அவப்பெயர் வந்துள்ளது.

2.    முஸ்லிம்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று பலரும் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

3.    இஸ்லாத்தை இந்த நாட்டின் போக்கிற்கு ஏற்ப நடுநிலை நின்று நடைமுறைப்படுத்தியவர்களும் கூட வலைவிரிப்பில் அகப்பட்டு தவிக்கிறார்கள்.

4.    மத்ரஸாக்கள் இஸ்லாமிய இயக்கங்கள் பலத்த சந்தேகத்திற்கு உட்பட்டுள்ளன.

5.    பல வீடுகளிலிருந்து இஸ்லாமிய நூல்கள், சஞ்சிகைகள் கூட அவ்வீட்டாராலேயே தீ வைக்கப்பட்டன. அவற்றில் தீவிரவாத கருத்துக்கள்  இல்லாவிட்டாலும் இது எதிர்காலப் பரம்பரைக்காக ஒவ்வொரு வீட்டிலும் பாதுகாக்கப்பட்ட அறிவு முதுசொம்களது அழிவாகும்.

6.    முஸ்லிம்களது வியாபார நிலையங்களுக்கு பொருட்கள் வாங்க வரும் மற்றும் முஸ்லிம்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்வோரது தொகை கணிசமான அளவு குறைந்து விட்டதாக அறிய முடிகிறது.

7.    முகம் மூடியிருந்த பெண்கள் எப்படி போனாலும் சாரி அணிந்த நிலையில் முக்காடு போடுகிறவர்களுக்கே அவற்றை அகற்றும் படி பலாத்காரத்தை பலாத்கார படுத்திய பல சம்பவங்கள் நடந்துள்ளன.

8.    பஸ் வண்டிகள், காரியாலங்கள், கடைகள் போன்றவற்றின் கதவுகள் அருகே எந்த வகையிலும் எதிர்பாராத வகையில்  ‘புர்கா’ உடன் நுழைய வேண்டாம் என்ற அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது. புர்காவை அரசு உத்தியோக பூர்வமாகவே தடை செய்துள்ளது.

9.    நாட்டின் பொருளாதாரம் படுமோசமான நிலையில் ஏற்கனவே இருந்தது. தற்போது அது கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைக்கு மாறிவிட்டது.

10.   முஸ்லிம் சமூகம் ஏற்கனவே கல்வி பொருளாதாரம் சமூக உறவுகள் ஆகிய துறைகளில் பாதாளத்தை நக்கிப் போய் இருந்தது.தற்போது அதன் வேகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

11.  ஊடகங்கள் துவேஷத்தை மிக மோசமாக தூண்டுகின்றன .செய்திகளில் நூறு விதமானவை தாக்குதல்கள் பற்றியும் தாக்குதல்களுக்கு பின்னால் இடம்பெறும் சோதனைகள் பற்றியுமே அமைந்திருக்கின்றன. இறந்தவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்படும் படங்களும் அந்த நேரம் உறவினர்கள், நண்பர்கள் அழுது புலம்பும் காட்சிகளும் காட்டப்படுகின்றன. பெரும்பாலும் வெறுப்பையும் உண்டுபண்ணும் வகையில் செய்தி அறிவிப்புக்கள் அமைவதால் பொது மக்களது மனநிலை முஸ்லிம்களுக்கு எதிராக படுமோசமாக தூண்டப்படுகிறது.

12. குறிப்பாக பௌத்த குருமாரின் ஊடக அறிக்கைகளும் கருத்துக்களும் துவேஷத்தை கக்குகின்றன. இனவாத அமைப்புக்கள் எக்காளமிட்டுச் இருக்கின்றன. அவர்கள்  ‘நாம் எப்போதோ சொன்னோமே, நீங்கள் கேட்கவில்லையே’ என்று பொறுப்பான பதவிகளில் இருப்போரையும் பொது மக்களையும் நோக்கி பரிகாசமாகக் கேள்வி எழுப்புகிறார்கள்.  ‘மதரசாக்களை தடை செய்யச் சொன்னோம்,  ‘புர்கா’ வேண்டாம் என்றோம். எம்மைத் தான் சிறையில் போட்டீர்கள். இப்போது என்ன நடந்திருக்கிறது?’ என்று அவர்கள் கேட்கிறார்கள்.

13. இவற்றை பார்க்கும் பெரும்பான்மை சமூகத்தில் உள்ள நிதானமாக சிந்தித்து வந்த, முஸ்லிம்களது பக்கத்திலிருந்த நியாயங்களுக்காகவும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காகவும் குரல் கொடுத்த பலர் தற்போது  தலைகாட்ட பயப்படுகிறார்கள்.அல்லது கொஞ்சமாகவே பேசுகிறார்கள்.என்னவெல்லாம் நடக்க வேண்டுமென்று முஸ்லிம் விரோத சக்திகள் நினைத்தனவோ அவை அனைத்தும் நடந்தேறிவிட்டன.

14.    இந்த விளைவுகள் எதனையும் யோசிக்காத, முஸ்லிம் சமூகத்துக்குள் இருந்த கோடாரிக் காம்புகளான, வழிகெட்ட தீவிரவாத சிந்தனைகளுக்கு உள்ளாக்கப்பட்ட சிலர் இந்த நாடகத்தை அரங்கேற்றி இருக்க  இனவாதிகள் மிக மிக சுதந்திரமாக பேசவும் நடக்கவும் அவர்கள் வழி சமைத்துக் கொடுத்துவிட்டார்கள் .

15.  இதனால் நாடு ஒட்டுமொத்தமாக குட்டிச்சுவர் ஆகிவிட்டது. முஸ்லிம் சமூகம் சுமார் 200 வருடம் பின் தள்ளப்பட்டு விட்டது. ஏற்கனவே அது பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டு இருந்தவேளை இந்த சம்பவம் நிலைமையை இன்னும் மோசமாகி விட்டது.

16.   முஸ்லிம் சமூகமானது பெரும் குழப்பத்திலும் அதேநேரம் பயத்திலும் இருக்கிறது. தூக்கத்தில் இருந்தவனுக்கு திடீரென கன்னத்தில் ஓர் அறை விழுந்தால் எப்படி இருக்குமோ அப்படியான நிலை இந்த நாட்டில் ஏற்பட்டுள்ளது.தர்காநகர் ,திகனை, கிந்தோட்டை கலவரங்கள் தூங்கியவன் மீது திடீரென விழுந்த அடிகள் தான். ஆனால், அவற்றைத் தொடர்ந்து நாம் எம்மை ஒழுங்குபடுத்தத் தவறிவிட்டோம். மிதவாத, நடுநிலைமையான தூரநோக்கோடு பார்க்கின்றவர்கள் உரிய முறையில் நடவடிக்கைகளை எடுக்காததன் காரணமாகவும் மூலோபாய திட்டங்களை வகுத்து குறிப்பாக இளைஞர்களை வழிநடாத்தத் தவறியதன் காரணமாகவும் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.



 சில ஆலோசனைகள்

பின்வரும் ஆலோசனைகளை இந்த சந்தர்ப்பத்தில் முன்வைக்க முடியும்

1.    இது ஒரு சோதனை மிக்க காலகட்டம். இதில் மிகுந்த ஜாக்கிரதையோடும் கவனமாகவும் தூரநோக்கோடு சிந்தித்தும் நாம் நடந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் முஸ்லிம் சமூகத்தை தண்டித்திருக்கிறானா அல்லது சோதிக்கிறானா என்பதை இனம் கண்டு கொள்வது கஷ்டமாக இருக்கிறது. சோதனை என்பது நல்லடியார்களை அதாவது நற்கருமங்களில் ஈடுபடக் கூடியவர்களை பரிசோதித்து, நன்மை வழங்குவதற்காக செய்யப்படும் ஏற்பாடுகளாகும். தண்டனைகள் என்றால் கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றாமல் பொடுபோக்காக இருந்து அல்லாஹ்வுடைய கட்டளைகளை நிறைவேற்றாமல் பாவங்களில் ஈடுபட்டவர்களுக்கு அல்லாஹ் கொடுப்பவையாகும்.இவற்றில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை பற்றி நாம் சிந்திக்க முடியும். சோதனை என்பது நல்லடியார்களுக்கு வரும் என்று
குர்ஆன் சொல்லியிருக்கிறது. அந்த நேரத்தில்  ‘இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி  ராஜிஊன்’ என்று சொல்வதோடு பொறுமையாகவும் இருக்க வேண்டும் என்றுதான் அல்லாஹ் கூறுகிறான். ஆனால், தண்டனை என்று வருகின்ற பொழுது நாமாக சம்பாதித்துக் கொண்டவையாகவும் இவை இருக்கலாம். உஹது யுத்தத்தில் 70 சஹாபாக்கள் கொல்லப்பட்டு 70 பேர் காயப்பட்ட பொழுது  ‘இது எந்கிருந்து வந்தது?’ என்று சகாபாக்கள் தமக்குள் கேள்வி கேட்டார்கள். அந்த நேரத்தில் அல்லாஹ்  ‘அது உங்களிடம் இருந்து தான் வந்தது’ என்று சொன்னான். ‘குல் ஹுவ மின் இந்தி அன்ஃபுசிகும்’. அந்த வகையில் இந்த சூழ்நிலையானது எமக்கான தண்டனையாக தரப்பட்டதா என்றெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.அப்படியாயின் நாம் எம்மை மீள்பரிசீலனைக்கு தீவிரமாக உட்படுத்த வேண்டும்.



2.    எல்லா நிலைகளிலும் நாம் அல்லாஹ்வை அஞ்சி, பாவங்களைத் தவிர்த்து, அவனிடத்திலே மன்றாடி அவனது உதவியை மாத்திரமே நாம் அடிக்கடி வேண்டி நிற்க வேண்டும்.



3.    எந்த சந்தர்ப்பத்திலாவது நாம் வன்முறைகளால் வன்முறைகளை எதிர் கொள்ள முயற்சிக்கக் கூடாது. வன்முறைகள் நல்ல விளைவுகளைத் தரமாட்டாது.   “மிகவுமே நல்ல முறையில் நீங்கள் உங்களுக்கு வருகின்றவற்றை (சவால்களை) எதிர்கொள்ளுங்கள்” என்று குர்ஆனில் அல்லாஹ் சொல்லிவிட்டு  ‘அப்படி நீங்கள் செய்தால் எதிரி கூட உற்ற நண்பனாகிவிடுவான்’ என்று குர்ஆன் சொல்கிறது.

4.    பொறுமையாகவும் சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே வன்முறையாளர்களை எதிர்கொள்ள வேண்டும்.எம்.எல்.ஏ.என்ற முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கத்துக்கு இது விடயமாக அதிகம் உதவமுடியும்.

5.     தற்போது நாட்டிலே அரங்கேற்றப்படும் துவேஷ செயல்பாடுகளை தடுத்து நிறுத்தி குறிப்பாக மீடியாக்களை நெடு நிலைமைக்கு கொண்டு வருவதற்கும் நாட்டில் சாந்தி சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் அரசியல்வாதிகளும் முஸ்லிம் மீடியா ஃபோரமும் உதவ முடியும்.அவர்கள் அதிகமாக பங்களிப்பு செய்ய வேண்டியிருக்கிறது.

6.     உலமாக்களை பொறுத்தவரையில் சமூகத்தை தைரியப்படுத்தி, அவர்களை நிதானப்படுத்தவேண்டி இருக்கிறது. ஏனைய சமூகங்கள் உடனான உறவை முஸ்லிம்கள் அழகாக அமைத்துக் கொள்ளும் படி சொல்லவேண்டும்.கரைந்து போகாமல் கலந்து வாழும் முறை பற்றிய தெளிவை அவர்களால் மட்டுமே வழங்க முடியும்.

7.    சமூகத்தில் இருக்கின்ற பொறுப்புதாரிகளும் முக்கியஸ்தர்களும் தாமும் தம் பாடும் என்று இருந்துவிடாமல் இந்த  முக்கியமான இக்கட்டான கட்டத்தில் சமூகத்தை நெறிப்படுத்தி தைரியப்படுத்தி ஒழுங்குபடுத்த வேண்டிய கடமையை அவர்கள் சுமந்து இருக்கிறார்கள்.

8.     எமக்கு மத்தியில் இருக்கின்ற கொள்கை வேறுபாடுகளை பயன்படுத்தி அடுத்த இயக்கத்தவரை பழிவாங்குவதும் அந்த இயக்கம் சம்பந்தமாக மனதில் ஏற்கனவே இருக்கின்ற காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அவர்களைப் பற்றி மோசமான, இல்லாத தகவல்களை அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறி சிக்கலான நிலையை உருவாக்கி விடும் சகலரும் அல்லவைப் பயந்து கொள்ள வேண்டும்.ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இது ஒற்றுமையாகவும் அறிவோடும் நிதானமாகவும் தக்வாவோடும் இக்லாஸோடும் விடயங்கள் கையாளப்பட வேண்டிய நேரமாகும்.

9.எமது சமூகத்தின் பெற்றார் தமது பிள்ளைகள் விடயமாக அதிக கரிசனை காட்டவேண்டும் என்பதை இது காட்டுகிறது.உலமாக்கள் இஸ்லாத்தின் மிகச் சரியான நடுநிலையான கருத்துக்களை பரப்ப தீவிர கரிசனை எடுத்திருக்க வேண்டும் என்பதையும் அது கூறி நிற்கிறது. இது பன்மைத்துவ சமூகம் என்பதால்.இதற்கேற்ப வாழ்வு முறை ஒழுங்குபடுத்தப் பட்டிருக்க வேண்டும். எமது சமூகத்தில் இருந்த இவ்வாறான இளைஞர்கள் சர்வதேச இஸ்லாமிய விரோதிகளது கைப் பொம்மைகளாக மாறுவதற்கு நாம் அனைவரும் காரணமாக இருந்தமையை கசப்பாக இருந்தாலும் ஏற்க வேண்டியிருக்கிறது.

10.இஸ்லாம் பற்றிய அச்சத்தத்தை உலக மக்களது மனங்களில் ஏற்படுத்த பல சக்திகள் எல்லா நாட்களிலும் வேலை செய்கின்றன என்பதையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டு.

இந்த நாடு சுபீட்சமான நிலைக்குத் திரும்பவும் எல்லா இனங்களும் சகோதரத்துவ வாஞ்சையோடு வாழும் சூழல் உருவாகவும் அனத்து இனங்களோடு இணைந்து செயல்படுவோமாக! 



அல்லாஹ்வே போதுமானவன்.யா அல்லாஹ் எம்மையும் எமது தேசத்தையும் அனைத்துவித தீவிரவாதங்களில் இருந்தும் பாதுகாப்பாயாக!