*மனிதா...! துன்பத்தின் பின்னால் உன் இறைவன் இன்பத்தை மறைத்து வைத்துள்ளான்....!!!*
மனிதா...!
கோது உடைந்தால் தான் "குஞ்சு"....
மெழுகு உருகினால் தான் "வெளிச்சம்"....
சிற்பி வெடித்தால் தான் "முத்து"....
நதி பாய்ந்தால் தான் "அருவி"....
கறும்பு சப்பினால் தான் "இனிப்பு"....
சுட்டா தான் அது "நெருப்பு".....
மனிதா...!
இயற்கையின் நியதியும் ஒன்றை இழந்து ஒன்றை அடைவது தான்....
இதில் உன் வாழ்க்கை மட்டும் "விதிவிலக்கல்ல".....
சோதனைகள்,
கவலைகள்,
ஏமாற்றங்கள்,
தோல்விகள்,
இழப்புக்கள்,
காத்திருப்புக்கள்.....
மனிதா...!
இவற்றையெல்லாம் நீ
கடந்தால் தான் வாழ்க்கை "அர்த்தமான வாழ்க்கை....."
உனக்கு வாழ்க்கை நிஜங்கள் புரியும்...
பிறர் உணர்வுகளை மதிப்பாய்.....
இறையன்பு கிட்டும்....
எதிர்பார்ப்புக்கள் குறையும்.....
ஏமாற்றங்கள் பழகிப் போகும்.....
வாழ்க்கையின் நிதர்சனம் புரியும்....
மனிதா...!
என்றாயினும் உள்ளக் குமுறல்கள் ஓய்வதில்லை....
இழந்தவற்றையே ,இதய அறைகள் மீட்டி பார்க்கும்....அது இதயங்களின் இயல்பாகவே இருக்கலாம்.....
மனிதா...!
"இது நடந்திருத்தால், வாழ்க்கை இப்படி இருந்திருக்கும்...."
"அநியாயமாக வாய்ப்ப இழந்துவிட்டோம்...."
"எல்லாம் எங்கட துரதிஷ்டம்....."
"தலையால வந்ததை காலால உதைந்துட்டம்...."
"அப்ப கொஞ்சம் யோசித்திருந்தால் வாழ்க்கை இப்படி ஆகியிருக்காது..."
மனிதா...!
இது தான் உன் இதய அறைகளின் மெளனமான ஓசை....
நீ மறந்தவிட்டாய் உன்னைப் படைத்த மறையோனை....!!!
வாழ்க்கையை அளித்தவன் அவன்....!!
இன்பங்களை அள்ளித் தந்தவன் அவன்....!!
உடலின் இயக்கத்தின் உரிமையாளன் அவன்.....!!
நீ மறைத்து வைத்துள்ள இரகசியங்களை அறிந்தவன் அவன்....!!
இழப்புக்களை தருபவனும் அவன்...!!
வாழ்க்கையின் முடிவும் அவனிடமே....!!
மனிதா...!
இவ்வாறாக எல்லாவற்றிற்கும் அவன் காரணகர்த்தாவாக இருக்கும் போது....
உன்னுடைய வாழ்க்கை மட்டும் அவன் நாட்டமின்றி நடப்பதற்கில்லை....!!!
ஏதோ ஒரு வகையில் உனக்கும் நலவை நாடியிருப்பான்....
மனிதா...!
நதியில் செல்லும் இலைகளுக்கு தெரியாது,நதியின் பாதை முடிவு...
உன் இறைவன் எங்கு உனக்கு நலவை நாடியிருப்பான் என உனக்கும் தெரியாது...
மறைவை அறிந்தவன் "அவனே...."
சில போது உன் சங்கடங்களும்,
இழப்புக்களும் அவன் பக்கம் உன்னை ஈர்ப்பதற்கே...!!!
மனிதா...!
உனக்காக நிச்சயிக்கப்பட்ட ஒன்று தவறுதலாகக் கூட இன்னொருவருக்கு சென்று விடாது....
எது உனக்காதோ அதை நீ அடைந்தே தீருவாய்....!!!
இன்னும் உன் வாழ்க்கையை மற்றவருடன் ஒப்பிட்டு பயனில்லை....
பொறாமை படுவதற்கும் ஒன்றுமில்லை.....
ஆத்திரப்பட்டோ,
ஆவேசப்பட்டோ அர்த்தமில்லை....
மனிதா...!
வாழ்க்கையில் எமக்கே எல்லாம் என்று கண்ணீருடன் உன் காலம் நகரலாம்....
ஒரே ஒரு முறை .....
ஒரு தடவை ,
வைத்தியசாலையின்
வாசலில் நின்றுபார்....
நீ...
உணர தேவையில்லை
உன் உள்ளம் உணர்த்தும்,உதடுகள் நிஷப்தமாக இறையோனை புகழும்....!!!
"நான் தான் வாழ்க்கையின் அதிஷ்டசாளி"
என....
ஏனென்றால்....
👉🏻பலரின் வாழ்க்கையின் ஆரம்பமாகவும் இருக்கலாம்....
👉🏻உறவின் உயிருக்கு துடிக்கும் உயிர்களும் அங்கு தான்....
👉🏻துடிக்க துடிக்க உயிர் பிரியும் இடமும் தான்...
👉🏻கதறி அழுதும்,கண்ணீர் மட்டும் மிஞ்சும் இடமும் தான்....
🔺பணத்தின்
மோகமும்....
🔺ஏழ்மையின்
கோரமும்....
🔺உயிரிழந்த. உள்ளங்களும்....
🔺கண்ணீரின் ஆழமும்...
🔺ஆரோக்கியத்தின் அருமையும்....
🔺நிரந்தரமற்ற இன்பமும்....
ஏன், "இறைவனின் அருளும் "உணரும் தருணம் அங்கே தான்.....
மனிதா....!
உணர்ந்து கொள்வாய்
தெரிந்து விழுந்து விட்டோம்....
உலக ஆசையில் நழுவியல்லயென....!!!
ஒரு நாள்வரும் இழந்தவற்றின் நலவை உணர்வாய்...
அதுவரையில்.....
வாழ்க்கையில் கொஞ்சம் சகித்துக்கொள்...!
சோதனைகளைப் பொறுத்துக்கொள்....!
நிச்சயமாக துன்பங்களின் பின் உன் இறைவன் இன்பத்தை மறைத்து வைத்துள்ளான் என்பது நிச்சயமாகும் வரை......!!!😊😊
(படித்ததில் பிடித்தது )
No comments:
Post a Comment