Sunday, January 15, 2017

உனக்கும் அடுத்தவர்களுக்கும் பயனுள்ள ஆளுமைகளை வளர்க்கும் மூலோபாயங்கள்...

1- விசேடமாக 10 தொடக்கம் 30 நிமிடங்களை அடிக்கடி ஒதுக்கி அவற்றில் புன்முறுவல் செய்து வாருங்கள்...

2- 10 நிமிடங்கள் மௌனம் காத்து வாருங்கள்..

3- நாளாந்தம் 7 மணித்தியாலங்கள் தூங்குவதை பழக்கப்படுத்திக் கொள்தல்.

4- வாழ்க்கையில் (வலிமை, நம்பிக்கை மற்றும் இரக்கம்) ஆகிய மூன்றையும் பேண வேண்டும்.

5- எப்போதும் உபகாரங்களுக்கு நன்றி சொல்பவராக இருத்தல்.

6- சென்ற வருடம் வாசித்ததை விட அதிகமான புத்தகங்களை இம்முறை வாசித்தல்.

7- உனது நேரத்திலிருந்து ஆன்மீகத்துக்கென விஷேடமாக ஒதுக்கிக் கொள். (தொழுகை, தஸ்பீஹ், குர்ஆன் ஓதுதல், சிந்தனை, பெற்றோருக்கு பரிகாரம் செய்தல் மற்றும் உறவுகளைப் பேனுதல்)

8- உனது நேரத்திலிருந்து வயதானவர்களுடன் சிலதை கழிக்கப் பழகிக் கொள், அவர்கள் 70 வயதை தாண்டியிருத்தல் சிறந்தது. 

9- அதே போன்று சிறுவர்களுடனும் உனது நேரத்தை கழிக்கப் பழக வேண்டும். அவர்கள் 6 வயதுக்குக் குறைந்தவர்களாக இருத்தல் சிறப்பானது,

10- நித்திரையிலிருந்து விளிக்கும் தருனத்தில் அதிகம் கனவு காண்,

11- இயற்கையிலிருந்து கிடைக்கும் உணவை அதிகரித்து கொள், (வீட்டுத் தோட்டத்திலிருந்து, வீட்டு சமையலிலிருந்து), தயாரித்த உணவுப் பழக்க வழக்கத்தைத் தவிர்த்துக் கொள் (டின் வகை மற்றும் கடையிலிருந்து கிடைப்பவை).

12- அதிகமாக நீர் ஆருந்துதுல்.

13- உன்னோடு சிரிப்பதற்றென்றே மூன்று நபர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்.

14- உனது நேரம் வீநாகிவிடாது பாதுகாத்துக் கொள்.

15- உனது கடந்த காலப் பிரச்சினைகளை மறந்து விடு, அவற்றை உன்னைத் தவிர வேறு யாரிடமும் முறையிடாதே, ஏனென்றால் அவை உன்னுடை தற்காலப் பிரச்சினைகளை மறக்கச் செய்து விடலாம்.

16- எதிர்மறையாக சிந்திப்பதைத் தவிர்த்து நேர்மறையாக சிந்திக்கப் பழக்கப்படுத்திக் கொள்.

17- வாழ்க்கை ஒரு பாடசாலை என்பதாகவும், நீ அதில் கற்றுக் கொள்பவனாகவும் கருதிக் கொள்.

18- காலை உனவை ஒரு அரனைப் போல் உட்கொள், பகலுணவை ஒரு படைத் தலைவனைப் போல் உட்கொள், இராப் போசனத்தை ஒரு ஏழையைப் போல் உட் கொள்ளப் பழகிக் கொள்.

19- அதிகமாக புன்முறுவவும் சிரிக்கவும் பழகிக் கொள்.

20- வாழ்க்கை மிகவும் சிறியது, அதில் அடுத்தவர்களை வெறுப்பதில் கழித்து விடாதே,

21- எல்லா விடயங்களையும் சீரியஸாக எடுக்க வேண்டியதில்லை, ஆனால் எல்லாவற்றுக்கும் உன் புத்தியை பயன்படுத்து.

22- கடந்த கால எதிர்மறைகளை மறந்துவிடு, அவை உன் எதிர்காலத்தைப் பாழ்படுத்திவிடாமலிருக்கட்டும்.

23- அடுத்தவர்களுடன் உன் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்காதே.

24- நீ சந்தோஷமாக இருக்க பொறுப்பானவன் நீ ஒருவன் மாத்திரமே.

25- விதிவிலக்ககுகள் எதுவுமின்றி அனைத்தையும் மண்ணித்து விடு, உனக்கு தீங்கிழைக்கப்பட்டிருந்தாலும் சரியே.

26- உன்னைப் பற்றி அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது உனக்குத் தேவையற்ற விடயம்.

27- அல்லாஹ்வைப் பற்றி உன்னிடம் நல்லெண்ணமே எப்போதும் இருக்க வேண்டும். உன்னை நோக்கி வரும் சோதனையின் போதும் கூட. ஏன் அடுத்தவர்கள் பற்றிக் கூட தப்பெண்ணம் தேவையற்றது.

28- அனைத்தும் மாறிப் பொகும் என்ற உணர்வு எப்போதுமு் இருக்க வேண்டும். 

29- உனது பொறுப்புக்கள் என்பது உனது தொழில் மற்றும் உன்னை நோக்கி வரும் கஷ்டங்கள் நோய்கள் மாத்திரமல்ல. அவற்றோடு உனது குடும்பம் மற்றம் உன்னை விரும்புவர்கள் மீது கூட உனக்கு பொறுப்புக்கள் இருக்கின்றன.

30- தேவையற்றதாக, பயனற்றதாக, அழகில்லை எனக் கருதப்படும் அனைத்து விடயங்களையும் உன்னிடமிருந்து கலைந்து விடு.

31- கஸடுகள் நேரத்தை வீணடிக்கப் போதுமானவை.

32- உனக்குத் தேவையானவற்றை நீயே சொந்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

33- எதிர் வர இருப்பவை மிகச் சிறந்தது எனக் கருதுவதில் தப்பில்லை, ஆனால் அல்லாஹ்வின் நாட்டமின்றி எனக்கு வந்து சேரமாட்டாது என்ற விசால மனப்பான்மை இருக்க வேணடும்.

34- நீ எப்படி உணர்ந்து கொண்டாலும் பலவீனமடையாதே, விளித்தெழுந்து பயனித்துவிடு.

35- எப்போதும் ஏதாவது சிறந்த செயலொன்றையாவது செய்வதற்கு முயற்சியெடு.

36- உனது பெற்றோர்களுடன், உறவினர்களுடன் மற்றும் நண்பர்களுடன் தொடர்பு கொள். அதே போன்று உன்னை விட்டும் பிரிந்து சென்று மண்ணறையிலிருப்பவர்களை தரிசித்து அவர்களுக்காக துஆ செய்ய மறக்காதே.

37- நம்பிக்கையாளனாகவும், சந்தோஷமானவனாகவும் வாழ்,

38- உனது எல்லையை நீயே பாதுகாத்துக் கொள், உன் மீதான அடுத்தவர்களின் சுதந்திரத்தை மீட்டிக்கொள்.

39- தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் அல்லாஹ்வுக்கு நன்றி கூறு, அன்றைய பாதுகாப்பை அவனிடமே கேட்டுக் கொள். (அல்ஹம்துலில்லாஹ்)

40- இறுதியாக, யாரையயெல்லாம் நீ விரும்புகிறாயோ அவர்களுக்கு இந்த செய்தியை சொல்லிவிடு. 

நான் உங்கள் அனைவரையும் அல்லாஹ்வுக்காக நேசிக்கிறேன் அதனால் எத்தி வைத்துசிட்டேன்.

கலாநிதி ரஷாத் பகீஹ்.......
தமிழில் அஷ்ஷெய் நஸ்ரிம்

No comments:

Post a Comment