Sunday, February 26, 2017

81 கற்கை நெறிகளும் அதற்கான தமிழ் விளக்கங்களும்!   க.பொ.த. உயர்த்தரம், க.பொ.த. சாதாரணத்தரம், பல்கலைகழகம், புலமைப்பரிசில், போட்டிப்பரீட்சை, மாணவர் மட்டும் 

1. Anthropology – மானுடவியல்/ மானிடவியல்

2. Archaeology – தொல்பொருளியல்

3. Astrology – சோதிடவியல் (சோதிடம்)

4. Astrology – வான்குறியியல்

5. Bacteriology பற்றுயிரியல்

6. Biology – உயிரியல்

7. Biotechnology – உயிரித்தொழில்நுட்பவியல்

6. Climatology – காலநிலையியல்

7. Cosmology – பிரபஞ்சவியல்

8. Criminology – குற்றவியல்

9. Cytology – உயிரணுவியல்/ குழியவியல்

10. Dendrology – மரவியல்

11. Desmology – என்பிழையவியல்

12. Dermatology – தோலியல்

13. Ecology – உயிர்ச்சூழலியல்

14. Embryology – முளையவியல்

15. Entomology – பூச்சியியல்

16. Epistemology – அறிவுநெறியியல்/ அறிவாய்வியல்

17. Eschatology – இறுதியியல்

18. Ethnology – இனவியல்

19. Ethology – விலங்கு நடத்தையியல்

20. Etiology/ aetiology – நோயேதியல்

21. Etymology – சொற்பிறப்பியல்

22. Futurology – எதிர்காலவியல்

23. Geochronology – புவிக்காலவியல்

24. Glaciology – பனியாற்றியியல்/ பனியியல்

25. Geology – புவியமைப்பியல்/ நிலவியல்

26. Geomorphology – புவிப்புறவுருவியல்

27. Graphology – கையெழுத்தியல்

28. Genealogy – குடிமரபியல்

29. Gynaecology – பெண்ணோயியல்

30. Haematology – குருதியியல்

31. Herpetology – ஊர்வனவியல்

32. Hippology – பரியியல்

33. Histrology – இழையவியல்

34. Hydrology – நீரியல்

35. Ichthyology – மீனியியல்

36. Ideology – கருத்தியல்

37. Information Technology – தகவல் தொழில்நுட்பவியல்

38. Lexicology – சொல்லியல்

39. Linguistic typology – மொழியியற் குறியீட்டியல்

40. Lithology – பாறையுருவியல்

41. Mammology – பாலூட்டியல்

42. Meteorology – வளிமண்டலவியல்

43. Metrology – அளவியல்

44. Microbiology – நுண்ணுயிரியல்

45. Minerology – கனிமவியல்

46. Morphology – உருவியல்

47. Mycology – காளாம்பியியல்

48. Mineralogy – தாதியியல்

49. Myrmecology – எறும்பியல்

50. Mythology – தொன்மவியல்

51. Nephrology – முகிலியல்

52. Neurology – நரம்பியல்

53. Odontology – பல்லியல்

54. Ontology – உளமையியல்

55. Ophthalmology – விழியியல்

56. Ornithology – பறவையியல்

57. Osteology – என்பியல்

58. Otology – செவியியல்

59. Pathology – நொயியல்

60. Pedology – மண்ணியல்

61. Petrology – பாறையியல்

62. Pharmacology – மருந்தியக்கவியல்

63. Penology – தண்டனைவியல்

64. Personality Psychology – ஆளுமை உளவியல்

65. Philology – மொழிவரலாற்றியல்

66. Phonology – ஒலியியல்

67. Psychology – உளவியல்

68. Physiology – உடற்றொழியியல்

69. Radiology – கதிரியல்

70. Seismology – பூகம்பவியல்

71. Semiology – குறியீட்டியல்

72. Sociology – சமூகவியல்

73. Speleology – குகையியல்

74. Sciencology – விஞ்ஞானவியல் (அறிவியல்)

75. Technology – தொழில்நுட்பவியல்

76. Thanatology – இறப்பியல்

77. Theology – இறையியல்

78. Toxicology – நஞ்சியல்

79. Virology – நச்சுநுண்மவியல்

80. Volcanology – எரிமலையியல்

81. Zoology – விலங்கியல்
*க.பொ.த. உயர் தரம்:-12*

*Teacher's guide*
*Tamil medium*

*Linkஐ Click செய்வதன் மூலம் உங்களுக்கு தேவையான பாடத்தின் teacher's guide ஐ PDF வடிவில் பெற்று கொள்ள முடியும்*

*Agricultural Science(2010)*

http://www.nie.lk/pdffiles/tg/t13tim52.pdf


*Agro Technology(2010)*

http://www.nie.lk/pdffiles/tg/t13tim76.pdf

*Bharatha Natiyam*

http://www.nie.lk/pdffiles/tg/ebook/t13tim37.pdf


*Bio Resource Technology(2010)*

http://www.nie.lk/pdffiles/tg/t13tim74.pdf


*Civil Technology(2010)*


http://www.nie.lk/pdffiles/tg/t13tim73.pdf


*Combined Mathematics(2010)*

http://www.nie.lk/pdffiles/tg/t13tim53.pdf


*Drama & Theater Arts(2010)*


http://www.nie.lk/pdffiles/tg/t13tim22.pdf



*Geography*


http://www.nie.lk/pdffiles/tg/t13tim43.pdf


*Hindu Civilization*

http://www.nie.lk/pdffiles/tg/t13tim43.pdf



*Hinduism(2010)*

http://www.nie.lk/pdffiles/tg/t13tim75.pdf


*History(2010)*


http://www.nie.lk/pdffiles/tg/t13tim11.pdf



*Information Communication Technology(2010)*

http://www.nie.lk/pdffiles/tg/t13tim33.pdf


*Carnatic Music(2010)*

http://www.nie.lk/pdffiles/tg/t13tim38.pdf


*Mechanical Technology(2010)*

http://www.nie.lk/pdffiles/tg/t13tim70.pdf


*Political Science(2010)*


http://www.nie.lk/pdffiles/tg/t13tim56.pdf


*Tamil(2010)*


http://www.nie.lk/pdffiles/tg/t13tim47.pdf


*Accounting(2010)*

http://www.nie.lk/pdffiles/tg/t13tim58.pdf

*Home Economics(2010)*

http://www.nie.lk/pdffiles/tg/t13tim27.pdf

*Electrical, Electronic & Information Technology(2010)*

http://www.nie.lk/pdffiles/tg/t13tim27.pdf


*Christianity(2010)*

http://www.nie.lk/pdffiles/tg/t13tim9.pdf


*Christian Civilization(2010)*


http://www.nie.lk/pdffiles/tg/t13tim54.pdf


*Islam Civilization(2010)*


http://www.nie.lk/pdffiles/tg/t13tim45.pdf


*Economics(2010)*

http://www.nie.lk/pdffiles/tg/t13tim49.pdf

*Islam(2010)*

http://www.nie.lk/pdffiles/tg/t13tim34.pdf

*Biology (Revisited)-2012*

http://www.nie.lk/pdffiles/tg/t13tim92.pdf



*Physics (Revisited)-2012*

http://www.nie.lk/pdffiles/tg/t13tim93.pdf

*Chemistry(Revisited)-2012*

http://www.nie.lk/pdffiles/tg/t13tim93.pdf


*Communication & Media Studies(2010)*


http://www.nie.lk/pdffiles/tg/t13tim42.pdf


*Technology Stream(Engineering Technology)(2014)*

http://www.nie.lk/pdffiles/tg/t13tim97.pdf


*Technology Stream(Biosystems Technology)(2014)*


http://www.nie.lk/pdffiles/tg/t13tim98.pdf



*Technology Stream(Science for Technology)(2014)*

http://www.nie.lk/pdffiles/tg/t13tim98.pdf



நன்றி:- www.nie.lk


Sunday, February 19, 2017

$   நட்பால் நட்புக்கு... $
வண்ணங்கள் வேறாகலாம்
எண்ணங்கள் ஒன்றாகியதால்
மண்ணகத்தில் இங்கே 
நம் உறவுக்குப் பெயர் 
நட்பென்ற மூன்றெழுத்து

நானிலம் போற்றிடும் 
நட்பெனும் வார்த்தையிங்கே 
நமக்கெல்லாம் உயிர் மூச்சு!
நம் ஆயுளுக்கும் சேர்த்து 
நட்பைப் போற்றிடுவோம்..

நம்பிக்கை இங்கே 
நாம் கூறி வருவதில்லை 
நட்புக்குள் அதுவே 
தானாக வருவது...

நட்பெனும் வார்த்தையை
உச்சறிக்கத் தொடங்கயிலே
உள்ளுக்குள் எழுந்திடும் 
ஓராயிரம் ஒளியலைகள்!!!

தோல் தட்டி துணிவு கொடுத்து 
தோழமை பகிர்வதே
உண்மை நட்பிற்கான 
உறுதி மொழித் தத்துவம் 

மூச்சாய் நாம் இங்கே 
சுவாசிக்கும் நட்பினை 
நம்மில் பலர் 
முழுதாய்ப் புரிவதில்லை

நட்பின் இறக்கையுடன் 
நாளும் சிறகடித்து 
பட்டாம் பூச்சிகளாய் 
பறந்து திரிந்து 
ஓருவர் மடியில் ஒருவர் சாய்ந்திருந்த
மகிழ்வான நிமிடங்களை
மனதில் மீட்டிய அழகிய பொழுதுகள்
நம் நட்பில் உதிர்ந்த 
அழகிய தருணங்கள்...

என்றோ தொலைந்த 
நம் நட்பின் சந்திப்புக்களை 
இன்றும் நினைத்து 
நினைவுகளோடு கரைகிரது
இனிமையான நாட்களின்
ஒவ்வொரு நொடிகளும்
இழந்த மகிழ்ச்சியை
இடைவிடாது நினைத்தபடி...

நட்புடன் : $@₩€€

Friday, February 17, 2017

 இறுதி  பல்கலை நாட்களில் என் நண்பர்களின் உள்ளத்து உணர்வுகள்
மணக் குமுறல்களை 
பொன் எழுத்துகளால் கொட்டித் தீர்த்த விதம்

$$$$$$////$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
பல்கலை
இன்று எங்களது இறுதிப்பரீட்சையும் முடிவடைந்தது.எங்களை பரீட்சையில் கண்காணிக்கும் கண்காணிப்பாளர் எங்களிடம் இறுதி ஐந்து நிமிடம் இருக்கின்ற போது ஒருவார்த்தை வெளியானது"இந்தப்பல்கலையில் இதுதான் உங்கள் இறுதிப்பரீட்சையும் இறுதி ஐந்து நிமிடமும் "என்றார்.

அந்த நிமிடத்தில் இருந்து இறுதி ஐந்து நிமிடமும் என்னால் எழுத்துக்களை தொடர முடியவில்லை.ஒரு ஓரமாக பேனாவினை தூக்கி எறிந்துவிட்டேன்.

என் மேல் தொடர் அடுக்கு மாடிகள் விழுந்தது போன்றும் அதில் நான் மட்டும் சிக்குண்டது போல் ஓர் உள்ளுணர்வு .

 துரோகம்,அன்பு,கோபம்,பாசம்,தியாகம்,வெறுப்பு,உயிர்த்தோழி,உயிர்த்தோழன்,நண்பனின் சொன்ன காதல்,சொல்லாத காதல்,சேர்ந்த காதல்,சேராத காதல் என எல்லாம் இன்றுடன் முற்றுப் பெறப்போகிறதா?

 என்னையும் உயிர்த்தோழனாக  நினைத்த என் நண்பிகள் என்னை விட்டு நகரப்போகின்றார்களா? இனி எனக்கு கையொப்பம்  இடுவது யார் ?மன்னித்து விடுங்கள் மறந்து விட்டேன் இனி எனக்கு விரிவுரைகளே இல்லயே       என ஒவ்வொரு கேள்விகளை எழுப்பியது என் உள் மணம்!..

பரீட்சை முடிவடைந்ததாக சொல்கிறார் கண்காணிப்பாளர் கண்களை கசக்கி விட்டு பரீட்சை மண்டபத்தை விட்டு வெளியேறுகின்றேன் என் தோழமைகள் சிரிப்பது போல் நடித்து கொண்டு "கடைசி எக்ஸம் என மச்சான்"என கூறிக்கொண்டு  என் தோழ்களை இறுக பிடித்தவாரு விடுதியை நோக்கி கால்கள் நகர்ந்தன.

இந்நேரம் எனது ஜுனியர்ளுக்ள்ளும் ஒரு கவலை,ஏக்கம், பிரிவின் அடையாளங்கள் தென்படும் ஏன் என்றால் அவர்கள்தான் அடுத்த மரண வலியினை அனுபவிக்க இருப்பவர்கள்.
 "அனுபவிப்பவன்"...

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

கடைசி நாட்களும் கண்ணீர் துளிகளும்.

பரீட்சைகள் பற்றிய பயம் இல்லை.

சோகமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது ஒரு அரேபியப் பாடல்.

ஆடைகள் அனைத்தும் கழுவி மடித்து வைத்தாயிற்று.

இறுதி வருட ஆய்வும் இறுதிக் கட்டத்தில்.

முதலாம் வருடத்தில் கிடைத்தது போலவே மீண்டும் சோறும் சம்பலும் நெத்தலி அவியலும்.

பராட்டாவினதும் பருப்புக் கறியினதும் இன்னும் தொடரும் நட்பு.

முதலாம் வருடத்தில் இருந்த அதே விடுதி.

சில உயிர் நட்புகள்

துறைமுகமாய் தெரிந்த பீடம்

தந்தையாய் வழிகாட்டிய கலங்கரை விளக்குகள்

அழுதுவிட்டு சென்றவர்களின் நினைவுகள்.

பரீட்சைகளை கடக்கச் செய்த ஊன்றுகோல்கள்.

தக்க நேரத்தில் பக்கபலமான தோழமை

தாங்கிப் பிடித்த சகோதரத்துவம்.

பட்டினி கிடந்த நாட்கள்.

சமாளிக்க நோன்பு பிடித்த வாரங்கள்.

கண்களை மூடிக்கொள்கிறேன்.

கடந்து வந்த சிவப்பு நினைவுகளோடு.

நானே மென்று கொண்ட கஷ்டங்கள்.

வாய்க்குள் காற்று நிறைந்து கொள்கிறது.


கண்ணீர் இலேசாக கசிய...

By. R.$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
மன நிலைக்கு 
மருந்திட
கொஞ்சம்
நட்பின் 
நினைவுகளை 
மறந்திட 
கடற்கரைக்கு  சென்றேன். 
கண்ணீரால் 
முகம் கழுவிய 
விடியற்காலை 
ஆறுதல் வார்த்தையால் 
முகம் துடைத்த
உதடுகள் 
பிரிவை தந்த பேரூந்து 
கடைசியாக அசைத்த கைகள் 
என் விழிகளை  மீண்டும் 
நனைத்தது

கிளித்தட்டு விளையாடிய 
கிளிகள் 
அவரவர் கூட்டுக்கு 
பறந்து 
சென்றதையும் 
பிறந்த நாள் கொண்டாடிய
பிஞ்சு இதயங்கள் 
பிறந்த மண்ணுக்கு 
சென்றதையும் 
அறியா கடலலை-தன் 
நுரைபல்லால் 
சிரித்ததை 
கோபித்தேன் 
தனியாக கால் நனைதேன்    
கிளித்தட்டு 
விளையாடி 
கிளறிய மணல் மேட்டை 
இரசித்தபடி  
விடுதிக்கு 
வந்துவிட்டேன் 
தனியாக .

Wednesday, February 15, 2017

[15/02 4:11 PM] Shameera Abdul Wahid: *வேண்டுகோள்*
கிண்ணியாவின் கலங்கமில்லா
கருணையுள்ள தோழி!
கனவுகள் எல்லாம் நனவாக
காத்திருந்தார் convocation கு

நினைத்தும் பார்க்கவில்லை
சீக்கிரமாக اللهதன்னை
அவன் பக்கம் அழைத்திடுவான் என
அவன் விதியே வெற்றி!

நேரம் குறித்த படி
என்னையும் உங்களையும்
மரணம் அழைத்தே தீரும்
இதிலிருந்து மீழ யாராலும் முடியாது

அல்லாஹ்வின் படைப்பினங்கள்
எமக்கு படிப்பினைகள்,
அவருக்காக அவனிடம் 
பிரார்த்திக்க மட்டுமே முடியும்

யா அல்லாஹ்! மனமுறுகிக் கேட்கின்றோம்
சகோதரியின் கப்ரு வாழ்க்கைதனை
வேதனைகள் ஏதுமின்றி
நெருக்கடிகள் அற்றதாய்
வெளிச்சத்தின் உறைவிடமாய்
நிம்மதியின் பேரூற்றாய்
சொர்க்கத்தின் அடித்தளமாய்
ஆக்கிடுவாய் நாயனே!

இச்சிறு வேண்டுகோளை நீ
மறுக்காது ஏற்கவேண்டும்
எனக்காக இல்லாவிட்டாலும்
அந்த நல்லுள்ளம் கொண்ட
சகோதரிக்காகவும், அவரின்
குடும்பத்தினருக்காகவும்
அவருக்காய் பிரார்த்திக்கும் 
ஒவ்வொரு உறவுக்குமாய் 
ஏற்றிடுவாய் இறைவா!
ஆமீன்   ஆமீன்

*********


[15/02 4:11 PM] Shameera Abdul Wahid: ✍🏼 *sharmila sharmi*
*பிரிவுத்துயரில் அன்புத்தோழி சனோபரின் நினைவுகளோடு....*


ஆஆஆ....
என்ன வாழ்க்கை வாழ முன்னரே வல்லவன் பறித்துக்கொண்டான்...

மௌத்தா நெனக்கவேயில்லை..?

என்ன இவ்ளோ சுருக்கா???

ஆம்ம்...

இதயத்தின் ஓயாத குமுறல்கள்....
இன்னும் நெஞ்சறை சலனமில்லாமளே உன் நினைவுகளோடு....!!!

உணர்வில்லாமளே என் பேனையின்  எழத்துக்களின் சேகரிப்பு....

ஆனாலும் நீ தந்து சென்ற நட்பும்,அன்பும் இன்னும் உரமூட்டுகிறது....

உன் கள்ளமில்லா புன்னகையும்....

நீ பிறந்த மண்ணில் நீ எங்களை அரவணைத்த விதமும்....

என் ஆழமான
கண்ணீர் தொகுப்பே...

தோழி...

வாழ்க்கை மிக குறுகிய ஓட்டமே...

மறந்து போகின்றோம் ஒவ்வொரு நொடியும் காற்ப்புள்ளி வைத்து அனுபவித்துக் கொண்டுருக்கின்ற நிரதரமற்ற இன்பத்தின் மோகத்தில்....

வாழ்க்கையில் இருக்கின்ற ஆச்சரியப் புள்ளியையும்,முற்றுப்புள்ளியையும்....

"மரணம்"

ஒரு நொடி ஆச்சரியப்புள்ளி தந்து செல்கின்ற ஆச்சரியங்களால் வாழ்கைல மறந்தும், மறைந்தும் நிற்கின்ற முற்றுப்புள்ளி உயிரோடு இருக்கின்ற உறவுகளுக்கு

இன்னும....

 நிரந்தரமான கேள்விக் குறியே???? 

மரணத்திற்க்கு வயதில்லை....
அந்தஸ்தும் அறிவதில்லை....
அறிவும் காரணமாவதில்லை...
அழகும் போலியாகின்றது....
ஏழை மட்டும் சுவைக்கும் உணவுமல்ல...!!!

ஓடும் பயணத்தில் சற்று ஓய்வெடுப்போம்....
நிரந்தமற்ற உலகின் யதார்த்தத்தை உணர....

காலம் தாழ்த்தும் நேரத்தில் வாழ்க்கை கதவி தாழிட்டு
முடிந்திருக்கலாம்...

மரணம் உயிரோடு இருக்கின்ற உயிர்களுக்கு படிப்பினையே

என் அன்புத் தோழியின்
பிரிவு மட்டுமல்ல உணர்வுடன் கூடிய உறவின் இழப்பே....!!!

என் இறைவா....!!!

அவளின் பாவங்களை மன்னித்தருள்வாயாக..

உயந்த சுவன இன்பத்தை அவளுக்கு அருள்வாயாக.... 

தாங்க முடியாத இந்த அவளின் இழப்பை அவளின் அன்புக் குடும்பத்திற்கு தாங்கும் மனபக்குவத்தை வழங்குவாயாக....

உன் அன்பான அருளையும்,
கருணையும் என் அன்புத்தோழி மீது சொறிவாயாக....

அதுவரையில் 
மறவா தோழியாக என்றும் என் நெஞ்சோரத்தில்

" என்றுமே நீ...."

*Sharmila sharmi*
     (2017.02.14)
      (12.30 A.M)

Sunday, February 12, 2017

சோகம் எனும் பறவை 
உங்கள் தலைக்கு மேல் 
பறப்பதை தடுக்க இயலாது!
ஆனால் 
தலைக்கு மேல்
கூடு கட்டுவதை தவிர்க்கலாம்.

யாரும் உன்னை குறை கூறினால் 
அது உண்மையாயின் திருத்தி கொள்
பொய்யாயின் நகைத்து விடு.

வீழ்வது வெட்கமல்ல....
ஆனால்
வீழ்ந்தே கிடப்பது தான் 
வெட்கம்..         
🌹Calling to jhannah~
*Very interesting & meaningful msg 2 share:*

*If:*
*A B C D E F G H I J K LM N O P Q R S T U V W X Y Z*
*is equal to:*

*1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26*

*Then,*

*H+A+R+D+W+O+R+K* 
=8+1+18+4+23+15+18+11
*= 98%*

*K+N+O+W+L+E+D+G+E*
=11+14+15+23+12+5+4+7+5
*=96%*

*L+O+V+E*
= 12+15+22+5 
*= 54%*

*L+U+C+K ;*
=12+21+3+11 
*= 47%*

*None of them makes 100%.*
*Then what makes 100%?*

*Is it Money?*
.
.
.
*NO!*

*M+O+N+E+Y*
= 13+15+14+5+25
*=72%*

*Leadership?*
.
.
.
*NO!*

*L+E+A+D+E+R+S+H+I+P*
=12+5+1+4+5+18+19+8+9+16
*=97%*

*Every problem has a solution, only if we perhaps change our*

     *"ATTITUDE"...*

*A+T+T+I+T+U+D+E ;*
1+20+20+9+20+21+4+5 
*= 100%*

*It is therefore OUR ATTITUDE towards Life* *and Work that makes*
*OUR Life 100% Successful.*

*Amazing mathematics*


Thursday, February 9, 2017

பல்கலை காட்டிய பல் உருவங்கள் 

வாழ்க்கையில்  ஆயிரம் ஆயிரம்  மனிதர்களை சந்தித்தோம்!!!
அதில்  பலர்  பலவாறு. ......


சிலர்  வாசல் தேடி  வந்து. ....
தேவை  முடித்ததும்  வாயில்  கதவை மூடிவிட்டு  சென்றார்கள். .....

சிலர்  காரணம் சொல்ல காரணம்   இன்றி பிரிந்து  சென்றார்கள். .......

சிலரோ ! பேசத்தான்  முடியவில்லை  ....
புன்னகைத்தாவது செல்லாமே!!
என எண்ணி  புன்னகைத்த படி. .....

இன்னும்  சிலர் கண்டவுடன்  ....
அட இப்ப தான்  உங்கள நினைத்தேன். .
சுகமா???

அதிலும்  சிலர்  hi dr! how r u ?
 Rply யின் பின்னர் 
 Eanakkoru help weanum drவாட்சப்பில் .....

ஒரு சிலர்  நாள் தோறும்  எமக்கே எமக்காய் ....
இன்பம் , துன்பம்  இது, உனக்கு ,  எனக்கு 
இல்லை. . நமக்கு. .... என!!!!
ஈர் உடல் ஓர்  உயிராய்.....

இவற்றை  கற்றுத்  தந்த 
பல்கலைக்கு 
பல நன்றிகள். ..
பல் கலை வந்தோம். ...
பல கலை  உடைய 
பல் உருவம் கொண்ட 
பலரைக் கண்டோம்...

இன்னவள் .....

Wednesday, February 8, 2017

🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃

*நியாயமான என் பொறாமை...*

 *(உண்மை அனுபவத்துக்குக்*  
              *கொஞ்சம் தமிழ்*       
              *பூசியுள்ளேன்...)*

               சில்மியூராள் 
             ரூமி ரிஸானா
                  20170208

அல்குர்ஆனுக்கும் நமக்குமான தூரம் எவ்வளவென்று ஒரு நொடி உள்ளத்தைக் கேட்டுப் பார்ப்போமா..?

உயிர்க்கோதி, உள்ளத்தின் சிக்கெடுக்கும் குர்ஆனுக்குள் தொலைந்து போக நம்மில் எத்தனை உள்ளங்கள் அவாக் கொள்கின்றன...?

ஒவ்வொரு பெப்ரவரி மாதமும் 8ஆம் திகதி நாம் இருவரும் சந்திப்பதாக இரண்டு வருடங்களுக்கு முன்னால், ஒரு ஒப்பந்தத்துடன் மஷூரா செய்தோம்... ஆம் இன்றோடு சரியாக இரண்டு வருடங்களாகி விட்டன... 

அந்த ஒப்பந்தம் ; *ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 8ஆம் திகதி சந்திப்போம்... அப்போது நாம் எத்தனை முறை அல்குர்ஆனை ஓதியுள்ளோம் எனப்பார்ப்போம்...*

வாழ்க்கையில் எது எதற்காகவோ எல்லாம் போட்டி போடுகின்றோம்... வாழ்வுக்கும் மறுமைக்கும் சேர்த்து எதையாவது கொஞ்சம் கட்டுச் சாதனமாக்கிக் கொள்ளும் ஒரு விருப்பின் விளைவு தான் இந்தப் போட்டி...

கடந்த வருடம் இதே நாள் மாலை ஐந்து முப்பது இருக்கும்... பல்கலைக் கழல நூலக முன்றலில் சந்தித்தோம்...

யார் அந்த அடுத்த நபர் என்று கேட்கின்றீர்களா..?
என் ஊர் சகோதரி, பாடசாலைத் தோழி, என்னை விட இளையவள், இப்போது இங்கும் நாம் நம் நட்பைத் தொடர்கின்றோம்... என் செல்லமான ஈமானியத் தோழி, ஜூனியர்... *சமீ...* அல்ஹம்துலில்லாஹ்... ஈமானியத் தோழமை கிடைப்பது நிஃமத்... 

*இன்னீ உஹிப்புக பில்லாஹ்..*

கடந்த ஆண்டும் அவள் தான் என்னிலும் அதிகமாகக் குர்ஆனை ஓதியிருந்தாள்... எண்ணிக்கையை சரியாக மறந்து விட்டேன்... ஒரு குட்டிப் பரிசை வழங்கி சந்தோசப்பட்டு, நியாயமாகக் கொஞ்சம் பொறாமைப்பட்டு விடை பெற்றேன்...

இன்று இரண்டாவது வருடம் ; இன்றும் அவளே வெற்றி பெற்றாள்... இப்போதும் ஆகுமான பொறாமை... மாஷா அல்லாஹ்... நீங்களும் பொறாமைப் படலாம்... அவள் மொத்தமாக *96+* தடவை முழுக் குர்ஆனையும் ஓதி முடித்து விட்டாள்... நான் வெறும் 18 தடவைகள் மட்டுமே... இப்போது கைசேதப்படுகிற்றேன் ; நேரத்தை வீணாக்கி விட்டதற்காய்...

பட்டதை சொன்னேன்... படிப்பினைக்காக... நல்ல விடயங்களில் போட்டி போடுங்கள்... 
நன்மைக்காகப் பொறாமை கொள்ளுங்கள்... 

*இதில் படிப்பினை இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்...* *யாரேனும் இதிலிருந்து ஒரு துளி நன்மைக்கான வழி செய்தாலும் நமக்கும் நன்மையே...*

நியாயமான பொறாமையுடன் அடுத்த வருடமாவது அதிகம் அதிகம் குர்ஆனை ஓதுவேன் என மனம் முடிவெடுத்துக் கொண்டது ; இன்ஷா அல்லாஹ்...

_*மறை வார்த்தைகள் யாருக்கு வாழ்க்கையானதோ, அவர்களே நாளை மறுமையில் வாழ்த்தப்டுவார்கள்...*_

            _8 பெப்ரவரி, 2017_

🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃

Wednesday, February 1, 2017

*World Hijab Day - Feb 1* *st.*

*உலக ஹிஜாப் தினம்...*

*ஆம் உலகம் முழுவதிலும் 116 நாடுகள் பங்கெடுக்கும் இந்த தினத்தில் முஸ்லிம் பெண்கள் மட்டுமல்லாது பங்கேற்கும் 116 நாடுகளிலும் இந்த அமைப்பில் உள்ள முஸ்லிமல்லாத பெண்களும் கூட ஹிஜாப் அணிந்து தங்கள் ஆதரவை தெரிவிப்பார்களாம்... இஸ்லாமிய பெண்கள் ஹிஜாபை அனுதினமும் அணிகிறார்கள் ஆனால் முஸ்லிமல்லாத பெண்களுக்கும் உடைக்கவசம் என்னும் ஹிஜாபின் அருமை பெருமைகளை எடுத்துக்கூறி இது இஸ்லாமிய உடையல்ல மாறாக ஒவ்வொரு பெண்ணிற்கும் பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாப்பளிக்கும் ஒரு உன்னத உடை என்பதனை விளக்கவே இந்த நாள் அனுசரிக்கப்படூகிறது என அதன் நிறுவனரும் நிகழ்ச்சி அமைப்பாளருமான நஸ்மா கான் குறிப்பிடுகிறார்.*

*2013 ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து அனுசரிக்கப்பட்டு வரும் இந்நாளை அதாவது பிப்ரவரி 1 ஐ , நஸ்மா கான் தேர்ந்தெடுத்தமைக்கு ஒரு வலுவான காரணம் கூறுகிறார், அது என்னவென்றால் அமெரிக்காவில் 9/11 உலக வர்த்தக மைய கட்டடம் இடிக்கப்பட்ட பிறகு ஏதோ அல்- காயிதா தான் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் தலைமை என்பது போல நினைத்துக்கொண்ட அமெரிக்க எக்ஸ்ட்ரீமிஸ்டுகள் ஹிஜாப் அணிந்த பெண்களை தாக்குவதும், அவர்களை வம்பிழுத்து மானபங்கம் செய்வதும்,அவர்களின் உடமைகளை பறித்து செல்வதும், இன்னும் வெறி அடங்காமல் டர்பன் அணிந்த சீக்கிய ஆண்களையும் முஸ்லிம் என* *நினைத்துக்கொண்டு அடித்து துவைப்பதுமாக வன்முறையில் ஈடுபட்டார்கள் இவற்றில் நேரடியாக பலமுறை பாதிக்கப்பட்டவள் நான்... இதே பிப்ரவரி 1 அன்று என்னை சில அமெரிக்கர்கள் அவமானப்படுத்தினார்கள் இதனால் அவர்களிடமிருந்த வெறுப்புணர்வை அகற்றவே இந்த ஒரு அனுஷ்டிப்பை நான் கையிலெடுத்தேன் என்கிறார்*

*அதுபோல பிரான்ஸில் 2004 ல் கொண்டு வரப்பட்ட ஹிஜாபுகளூக்கான தடை அதன் தொடர்பாக முஸ்லிம் பெண்கள் பள்ளிகளுக்கு ஹிஜாபில் வரக்கூடாது, பொது இடத்தில் ஹிஜாப் அணிந்தால் அவருக்கு அவமரியாதை, பணிபுரியும் இடங்களில் கேலி கிண்டல் என இன்னல்களை அனுபவித்து வந்த பெண்களுக்கு எந்தவொரு நியாயமும் கிடைக்கவில்லை.. அவர்கள் தங்கள் மார்க்க உரிமைக்காக எவ்வளவு போராடியும் இறுதியில் 2010 ஆண்டில் ஹிஜாப் தடைச்சட்டம் கொண்டு வந்தார்களேயொழிய அவர்களை அனுமதிக்கவில்லை.*. 

*எகிப்து ஒரு இஸ்லாமிய ஷரியத்தை பின்பற்றும் நாடு ஆனால் அவர்கள் உலக நாடுகளின் முன்னிலையில் ஒரு நவநாகரீக முன்னேறிய சமூகமாக காட்டிக்கொள்ள பிரயத்தனப்பட்டார்களே தவிர இஸ்லாத்தையும் அதன் புனித சட்டங்களையும் போற்றுபவர்களாக இல்லை.. உதாரணம் எகிப்திற்கு வரும் ஒரு சுற்றுலா பயணி ,ஹிஜாப் அணிந்தமைக்காக அந்நாட்டு பெண் ஒருவர் தாக்கப்பட்டால் அதற்கு மிக அதிகமாக அந்த சுற்றுலாவாசி சில டாலர்கள் அபராதம் கட்டிவிட்டால் போதும் என்கிற பலகீனமான நிலை மட்டுமே இருந்தது, 2002 ல் தான் எகிப்திய தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள் ஹிஜாபில் தோன்றவே ஆரம்பித்தார்கள், இம்மாதிரியான நிலைகளை மாற்றவே நான் இந்த முடிவினை எடுத்தேன் என நஸ்மா கான் கூறுகிறார்*

*முதலில் ஹிஜாப் என்பது ஒரு இஸ்லாமிய உடை மட்டும் அல்ல, அது ஒரு உலகப்பொது உடை, பிறர் நம்புவது போல் இஸ்லாம் தமது பெண்களை ஹிஜாப் அணிய* *கட்டாயப்படுத்துவதுமில்லை, ஒரு குறிப்பிட்ட உடல் மறைக்கும் பாணியிலான உடை ஹிஜாபும் அல்ல, ஹிஜாப் என்பது பெண்கள் தங்கள் முகம், மணிக்கட்டு முதல் கை வரையிலும், கரண்டை முதல் கால்கள் வரையிலும் மட்டும் வெளிக்காட்ட வேண்டும்,,மற்றவை மறைக்கப்பட்டிருக்க வேண்டும், அணியும் உடை பிறரை கவரும் விதமாக இருத்தல் கூடாது, அது* *இறுக்கமாக இருத்தல் கூடாது, தலையை மறைத்துக்கொள்ள வேண்டும் இதுவே ஹிஜாப் ஆகும் இது உலக மகளிர் அனைவருக்கும் உகந்த ஒன்று.. அறியாதவர் நினைப்பது போல இஸ்லாமிய *பெண்ணடிமைத்தனத்தின் சின்னமே ஹிஜாப் என்றது மாதிரியான பொய் மாயைகள் உடைக்கப்பட வேண்டும் என்பதே இந்நாள் அனுஷ்டிப்பின் நோக்கமாகும்.*

*மூடி வைத்த* *பண்டத்தில் ஈக்கள்* *மொய்ப்பதில்லை.*.
*பாதுகாத்தல் என்பது அடிமைப்படுத்துவலாகாது.*.  
 like this pag link 👇
                   https://m.facebook.com/ILOVE-FACE-COVER-696954620377773/?ref=opera_speed_dial