இறுதி பல்கலை நாட்களில் என் நண்பர்களின் உள்ளத்து உணர்வுகள்
மணக் குமுறல்களை
பொன் எழுத்துகளால் கொட்டித் தீர்த்த விதம்
$$$$$$////$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
பல்கலை
இன்று எங்களது இறுதிப்பரீட்சையும் முடிவடைந்தது.எங்களை பரீட்சையில் கண்காணிக்கும் கண்காணிப்பாளர் எங்களிடம் இறுதி ஐந்து நிமிடம் இருக்கின்ற போது ஒருவார்த்தை வெளியானது"இந்தப்பல்கலையில் இதுதான் உங்கள் இறுதிப்பரீட்சையும் இறுதி ஐந்து நிமிடமும் "என்றார்.
அந்த நிமிடத்தில் இருந்து இறுதி ஐந்து நிமிடமும் என்னால் எழுத்துக்களை தொடர முடியவில்லை.ஒரு ஓரமாக பேனாவினை தூக்கி எறிந்துவிட்டேன்.
என் மேல் தொடர் அடுக்கு மாடிகள் விழுந்தது போன்றும் அதில் நான் மட்டும் சிக்குண்டது போல் ஓர் உள்ளுணர்வு .
துரோகம்,அன்பு,கோபம்,பாசம்,தியாகம்,வெறுப்பு,உயிர்த்தோழி,உயிர்த்தோழன்,நண்பனின் சொன்ன காதல்,சொல்லாத காதல்,சேர்ந்த காதல்,சேராத காதல் என எல்லாம் இன்றுடன் முற்றுப் பெறப்போகிறதா?
என்னையும் உயிர்த்தோழனாக நினைத்த என் நண்பிகள் என்னை விட்டு நகரப்போகின்றார்களா? இனி எனக்கு கையொப்பம் இடுவது யார் ?மன்னித்து விடுங்கள் மறந்து விட்டேன் இனி எனக்கு விரிவுரைகளே இல்லயே என ஒவ்வொரு கேள்விகளை எழுப்பியது என் உள் மணம்!..
பரீட்சை முடிவடைந்ததாக சொல்கிறார் கண்காணிப்பாளர் கண்களை கசக்கி விட்டு பரீட்சை மண்டபத்தை விட்டு வெளியேறுகின்றேன் என் தோழமைகள் சிரிப்பது போல் நடித்து கொண்டு "கடைசி எக்ஸம் என மச்சான்"என கூறிக்கொண்டு என் தோழ்களை இறுக பிடித்தவாரு விடுதியை நோக்கி கால்கள் நகர்ந்தன.
இந்நேரம் எனது ஜுனியர்ளுக்ள்ளும் ஒரு கவலை,ஏக்கம், பிரிவின் அடையாளங்கள் தென்படும் ஏன் என்றால் அவர்கள்தான் அடுத்த மரண வலியினை அனுபவிக்க இருப்பவர்கள்.
"அனுபவிப்பவன்"...
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
கடைசி நாட்களும் கண்ணீர் துளிகளும்.
பரீட்சைகள் பற்றிய பயம் இல்லை.
சோகமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது ஒரு அரேபியப் பாடல்.
ஆடைகள் அனைத்தும் கழுவி மடித்து வைத்தாயிற்று.
இறுதி வருட ஆய்வும் இறுதிக் கட்டத்தில்.
முதலாம் வருடத்தில் கிடைத்தது போலவே மீண்டும் சோறும் சம்பலும் நெத்தலி அவியலும்.
பராட்டாவினதும் பருப்புக் கறியினதும் இன்னும் தொடரும் நட்பு.
முதலாம் வருடத்தில் இருந்த அதே விடுதி.
சில உயிர் நட்புகள்
துறைமுகமாய் தெரிந்த பீடம்
தந்தையாய் வழிகாட்டிய கலங்கரை விளக்குகள்
அழுதுவிட்டு சென்றவர்களின் நினைவுகள்.
பரீட்சைகளை கடக்கச் செய்த ஊன்றுகோல்கள்.
தக்க நேரத்தில் பக்கபலமான தோழமை
தாங்கிப் பிடித்த சகோதரத்துவம்.
பட்டினி கிடந்த நாட்கள்.
சமாளிக்க நோன்பு பிடித்த வாரங்கள்.
கண்களை மூடிக்கொள்கிறேன்.
கடந்து வந்த சிவப்பு நினைவுகளோடு.
நானே மென்று கொண்ட கஷ்டங்கள்.
வாய்க்குள் காற்று நிறைந்து கொள்கிறது.
கண்ணீர் இலேசாக கசிய...
By. R.$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
மன நிலைக்கு
மருந்திட
கொஞ்சம்
நட்பின்
நினைவுகளை
மறந்திட
கடற்கரைக்கு சென்றேன்.
கண்ணீரால்
முகம் கழுவிய
விடியற்காலை
ஆறுதல் வார்த்தையால்
முகம் துடைத்த
உதடுகள்
பிரிவை தந்த பேரூந்து
கடைசியாக அசைத்த கைகள்
என் விழிகளை மீண்டும்
நனைத்தது
கிளித்தட்டு விளையாடிய
கிளிகள்
அவரவர் கூட்டுக்கு
பறந்து
சென்றதையும்
பிறந்த நாள் கொண்டாடிய
பிஞ்சு இதயங்கள்
பிறந்த மண்ணுக்கு
சென்றதையும்
அறியா கடலலை-தன்
நுரைபல்லால்
சிரித்ததை
கோபித்தேன்
தனியாக கால் நனைதேன்
கிளித்தட்டு
விளையாடி
கிளறிய மணல் மேட்டை
இரசித்தபடி
விடுதிக்கு
வந்துவிட்டேன்
தனியாக .
No comments:
Post a Comment