Sunday, February 19, 2017

$   நட்பால் நட்புக்கு... $
வண்ணங்கள் வேறாகலாம்
எண்ணங்கள் ஒன்றாகியதால்
மண்ணகத்தில் இங்கே 
நம் உறவுக்குப் பெயர் 
நட்பென்ற மூன்றெழுத்து

நானிலம் போற்றிடும் 
நட்பெனும் வார்த்தையிங்கே 
நமக்கெல்லாம் உயிர் மூச்சு!
நம் ஆயுளுக்கும் சேர்த்து 
நட்பைப் போற்றிடுவோம்..

நம்பிக்கை இங்கே 
நாம் கூறி வருவதில்லை 
நட்புக்குள் அதுவே 
தானாக வருவது...

நட்பெனும் வார்த்தையை
உச்சறிக்கத் தொடங்கயிலே
உள்ளுக்குள் எழுந்திடும் 
ஓராயிரம் ஒளியலைகள்!!!

தோல் தட்டி துணிவு கொடுத்து 
தோழமை பகிர்வதே
உண்மை நட்பிற்கான 
உறுதி மொழித் தத்துவம் 

மூச்சாய் நாம் இங்கே 
சுவாசிக்கும் நட்பினை 
நம்மில் பலர் 
முழுதாய்ப் புரிவதில்லை

நட்பின் இறக்கையுடன் 
நாளும் சிறகடித்து 
பட்டாம் பூச்சிகளாய் 
பறந்து திரிந்து 
ஓருவர் மடியில் ஒருவர் சாய்ந்திருந்த
மகிழ்வான நிமிடங்களை
மனதில் மீட்டிய அழகிய பொழுதுகள்
நம் நட்பில் உதிர்ந்த 
அழகிய தருணங்கள்...

என்றோ தொலைந்த 
நம் நட்பின் சந்திப்புக்களை 
இன்றும் நினைத்து 
நினைவுகளோடு கரைகிரது
இனிமையான நாட்களின்
ஒவ்வொரு நொடிகளும்
இழந்த மகிழ்ச்சியை
இடைவிடாது நினைத்தபடி...

நட்புடன் : $@₩€€

No comments:

Post a Comment