*World Hijab Day - Feb 1* *st.*
*உலக ஹிஜாப் தினம்...*
*ஆம் உலகம் முழுவதிலும் 116 நாடுகள் பங்கெடுக்கும் இந்த தினத்தில் முஸ்லிம் பெண்கள் மட்டுமல்லாது பங்கேற்கும் 116 நாடுகளிலும் இந்த அமைப்பில் உள்ள முஸ்லிமல்லாத பெண்களும் கூட ஹிஜாப் அணிந்து தங்கள் ஆதரவை தெரிவிப்பார்களாம்... இஸ்லாமிய பெண்கள் ஹிஜாபை அனுதினமும் அணிகிறார்கள் ஆனால் முஸ்லிமல்லாத பெண்களுக்கும் உடைக்கவசம் என்னும் ஹிஜாபின் அருமை பெருமைகளை எடுத்துக்கூறி இது இஸ்லாமிய உடையல்ல மாறாக ஒவ்வொரு பெண்ணிற்கும் பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாப்பளிக்கும் ஒரு உன்னத உடை என்பதனை விளக்கவே இந்த நாள் அனுசரிக்கப்படூகிறது என அதன் நிறுவனரும் நிகழ்ச்சி அமைப்பாளருமான நஸ்மா கான் குறிப்பிடுகிறார்.*
*2013 ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து அனுசரிக்கப்பட்டு வரும் இந்நாளை அதாவது பிப்ரவரி 1 ஐ , நஸ்மா கான் தேர்ந்தெடுத்தமைக்கு ஒரு வலுவான காரணம் கூறுகிறார், அது என்னவென்றால் அமெரிக்காவில் 9/11 உலக வர்த்தக மைய கட்டடம் இடிக்கப்பட்ட பிறகு ஏதோ அல்- காயிதா தான் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் தலைமை என்பது போல நினைத்துக்கொண்ட அமெரிக்க எக்ஸ்ட்ரீமிஸ்டுகள் ஹிஜாப் அணிந்த பெண்களை தாக்குவதும், அவர்களை வம்பிழுத்து மானபங்கம் செய்வதும்,அவர்களின் உடமைகளை பறித்து செல்வதும், இன்னும் வெறி அடங்காமல் டர்பன் அணிந்த சீக்கிய ஆண்களையும் முஸ்லிம் என* *நினைத்துக்கொண்டு அடித்து துவைப்பதுமாக வன்முறையில் ஈடுபட்டார்கள் இவற்றில் நேரடியாக பலமுறை பாதிக்கப்பட்டவள் நான்... இதே பிப்ரவரி 1 அன்று என்னை சில அமெரிக்கர்கள் அவமானப்படுத்தினார்கள் இதனால் அவர்களிடமிருந்த வெறுப்புணர்வை அகற்றவே இந்த ஒரு அனுஷ்டிப்பை நான் கையிலெடுத்தேன் என்கிறார்*
*அதுபோல பிரான்ஸில் 2004 ல் கொண்டு வரப்பட்ட ஹிஜாபுகளூக்கான தடை அதன் தொடர்பாக முஸ்லிம் பெண்கள் பள்ளிகளுக்கு ஹிஜாபில் வரக்கூடாது, பொது இடத்தில் ஹிஜாப் அணிந்தால் அவருக்கு அவமரியாதை, பணிபுரியும் இடங்களில் கேலி கிண்டல் என இன்னல்களை அனுபவித்து வந்த பெண்களுக்கு எந்தவொரு நியாயமும் கிடைக்கவில்லை.. அவர்கள் தங்கள் மார்க்க உரிமைக்காக எவ்வளவு போராடியும் இறுதியில் 2010 ஆண்டில் ஹிஜாப் தடைச்சட்டம் கொண்டு வந்தார்களேயொழிய அவர்களை அனுமதிக்கவில்லை.*.
*எகிப்து ஒரு இஸ்லாமிய ஷரியத்தை பின்பற்றும் நாடு ஆனால் அவர்கள் உலக நாடுகளின் முன்னிலையில் ஒரு நவநாகரீக முன்னேறிய சமூகமாக காட்டிக்கொள்ள பிரயத்தனப்பட்டார்களே தவிர இஸ்லாத்தையும் அதன் புனித சட்டங்களையும் போற்றுபவர்களாக இல்லை.. உதாரணம் எகிப்திற்கு வரும் ஒரு சுற்றுலா பயணி ,ஹிஜாப் அணிந்தமைக்காக அந்நாட்டு பெண் ஒருவர் தாக்கப்பட்டால் அதற்கு மிக அதிகமாக அந்த சுற்றுலாவாசி சில டாலர்கள் அபராதம் கட்டிவிட்டால் போதும் என்கிற பலகீனமான நிலை மட்டுமே இருந்தது, 2002 ல் தான் எகிப்திய தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள் ஹிஜாபில் தோன்றவே ஆரம்பித்தார்கள், இம்மாதிரியான நிலைகளை மாற்றவே நான் இந்த முடிவினை எடுத்தேன் என நஸ்மா கான் கூறுகிறார்*
*முதலில் ஹிஜாப் என்பது ஒரு இஸ்லாமிய உடை மட்டும் அல்ல, அது ஒரு உலகப்பொது உடை, பிறர் நம்புவது போல் இஸ்லாம் தமது பெண்களை ஹிஜாப் அணிய* *கட்டாயப்படுத்துவதுமில்லை, ஒரு குறிப்பிட்ட உடல் மறைக்கும் பாணியிலான உடை ஹிஜாபும் அல்ல, ஹிஜாப் என்பது பெண்கள் தங்கள் முகம், மணிக்கட்டு முதல் கை வரையிலும், கரண்டை முதல் கால்கள் வரையிலும் மட்டும் வெளிக்காட்ட வேண்டும்,,மற்றவை மறைக்கப்பட்டிருக்க வேண்டும், அணியும் உடை பிறரை கவரும் விதமாக இருத்தல் கூடாது, அது* *இறுக்கமாக இருத்தல் கூடாது, தலையை மறைத்துக்கொள்ள வேண்டும் இதுவே ஹிஜாப் ஆகும் இது உலக மகளிர் அனைவருக்கும் உகந்த ஒன்று.. அறியாதவர் நினைப்பது போல இஸ்லாமிய *பெண்ணடிமைத்தனத்தின் சின்னமே ஹிஜாப் என்றது மாதிரியான பொய் மாயைகள் உடைக்கப்பட வேண்டும் என்பதே இந்நாள் அனுஷ்டிப்பின் நோக்கமாகும்.*
*மூடி வைத்த* *பண்டத்தில் ஈக்கள்* *மொய்ப்பதில்லை.*.
*பாதுகாத்தல் என்பது அடிமைப்படுத்துவலாகாது.*.
like this pag link 👇
https://m.facebook.com/ILOVE-FACE-COVER-696954620377773/?ref=opera_speed_dial
No comments:
Post a Comment