[15/02 4:11 PM] Shameera Abdul Wahid: *வேண்டுகோள்*
கிண்ணியாவின் கலங்கமில்லா
கருணையுள்ள தோழி!
கனவுகள் எல்லாம் நனவாக
காத்திருந்தார் convocation கு
நினைத்தும் பார்க்கவில்லை
சீக்கிரமாக اللهதன்னை
அவன் பக்கம் அழைத்திடுவான் என
அவன் விதியே வெற்றி!
நேரம் குறித்த படி
என்னையும் உங்களையும்
மரணம் அழைத்தே தீரும்
இதிலிருந்து மீழ யாராலும் முடியாது
அல்லாஹ்வின் படைப்பினங்கள்
எமக்கு படிப்பினைகள்,
அவருக்காக அவனிடம்
பிரார்த்திக்க மட்டுமே முடியும்
யா அல்லாஹ்! மனமுறுகிக் கேட்கின்றோம்
சகோதரியின் கப்ரு வாழ்க்கைதனை
வேதனைகள் ஏதுமின்றி
நெருக்கடிகள் அற்றதாய்
வெளிச்சத்தின் உறைவிடமாய்
நிம்மதியின் பேரூற்றாய்
சொர்க்கத்தின் அடித்தளமாய்
ஆக்கிடுவாய் நாயனே!
இச்சிறு வேண்டுகோளை நீ
மறுக்காது ஏற்கவேண்டும்
எனக்காக இல்லாவிட்டாலும்
அந்த நல்லுள்ளம் கொண்ட
சகோதரிக்காகவும், அவரின்
குடும்பத்தினருக்காகவும்
அவருக்காய் பிரார்த்திக்கும்
ஒவ்வொரு உறவுக்குமாய்
ஏற்றிடுவாய் இறைவா!
ஆமீன் ஆமீன்
*********
[15/02 4:11 PM] Shameera Abdul Wahid: ✍🏼 *sharmila sharmi*
*பிரிவுத்துயரில் அன்புத்தோழி சனோபரின் நினைவுகளோடு....*
ஆஆஆ....
என்ன வாழ்க்கை வாழ முன்னரே வல்லவன் பறித்துக்கொண்டான்...
மௌத்தா நெனக்கவேயில்லை..?
என்ன இவ்ளோ சுருக்கா???
ஆம்ம்...
இதயத்தின் ஓயாத குமுறல்கள்....
இன்னும் நெஞ்சறை சலனமில்லாமளே உன் நினைவுகளோடு....!!!
உணர்வில்லாமளே என் பேனையின் எழத்துக்களின் சேகரிப்பு....
ஆனாலும் நீ தந்து சென்ற நட்பும்,அன்பும் இன்னும் உரமூட்டுகிறது....
உன் கள்ளமில்லா புன்னகையும்....
நீ பிறந்த மண்ணில் நீ எங்களை அரவணைத்த விதமும்....
என் ஆழமான
கண்ணீர் தொகுப்பே...
தோழி...
வாழ்க்கை மிக குறுகிய ஓட்டமே...
மறந்து போகின்றோம் ஒவ்வொரு நொடியும் காற்ப்புள்ளி வைத்து அனுபவித்துக் கொண்டுருக்கின்ற நிரதரமற்ற இன்பத்தின் மோகத்தில்....
வாழ்க்கையில் இருக்கின்ற ஆச்சரியப் புள்ளியையும்,முற்றுப்புள்ளியையும்....
"மரணம்"
ஒரு நொடி ஆச்சரியப்புள்ளி தந்து செல்கின்ற ஆச்சரியங்களால் வாழ்கைல மறந்தும், மறைந்தும் நிற்கின்ற முற்றுப்புள்ளி உயிரோடு இருக்கின்ற உறவுகளுக்கு
இன்னும....
நிரந்தரமான கேள்விக் குறியே????
மரணத்திற்க்கு வயதில்லை....
அந்தஸ்தும் அறிவதில்லை....
அறிவும் காரணமாவதில்லை...
அழகும் போலியாகின்றது....
ஏழை மட்டும் சுவைக்கும் உணவுமல்ல...!!!
ஓடும் பயணத்தில் சற்று ஓய்வெடுப்போம்....
நிரந்தமற்ற உலகின் யதார்த்தத்தை உணர....
காலம் தாழ்த்தும் நேரத்தில் வாழ்க்கை கதவி தாழிட்டு
முடிந்திருக்கலாம்...
மரணம் உயிரோடு இருக்கின்ற உயிர்களுக்கு படிப்பினையே
என் அன்புத் தோழியின்
பிரிவு மட்டுமல்ல உணர்வுடன் கூடிய உறவின் இழப்பே....!!!
என் இறைவா....!!!
அவளின் பாவங்களை மன்னித்தருள்வாயாக..
உயந்த சுவன இன்பத்தை அவளுக்கு அருள்வாயாக....
தாங்க முடியாத இந்த அவளின் இழப்பை அவளின் அன்புக் குடும்பத்திற்கு தாங்கும் மனபக்குவத்தை வழங்குவாயாக....
உன் அன்பான அருளையும்,
கருணையும் என் அன்புத்தோழி மீது சொறிவாயாக....
அதுவரையில்
மறவா தோழியாக என்றும் என் நெஞ்சோரத்தில்
" என்றுமே நீ...."
*Sharmila sharmi*
(2017.02.14)
(12.30 A.M)
No comments:
Post a Comment